ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு)

December 29, 2020

2020ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த 10 ஆண்டு காலப் பகுதியில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரை தெரிவு செய்து ICC யினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 
தெரிவு செய்யப்படும் முறை: 
90% ஆன தெரிவு, முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட குழு, ஊடகவியலாளர்கள், ஒளிபரப்பு நிறுவன பிரநிதிகள் உள்ளிட்டோரினாலும் 10% ஆன தெரிவு இரசிகர்களின் வாக்களிப்பின் மூலமும் இடம்பெறும். 
தெரிவு செய்யப்பட்டோர்: 
(1) தசாப்பதத்தின் ICC கிரிக்கெட் வீரருக்கான விருதான, சேர் கா(ர்)பீல்ட் சோபர் விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(2) தசாப்பதத்தின் ICC ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(3) தசாப்தத்தின் ICC கிரிக்கெட் வீராங்கனைக்கான, ரச்சல் ஹெஹொ பிளின்ட் விருதுக்கும் தசாப்தத்தின் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கும் அவுஸ்திரேலிய அணியின் எல்லீஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(4) தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் வீரர் - ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா). 
(5) தசாப்தத்தின் ரி20 கிரிக்கெட் வீரர் ரஷீட் கான் (ஆப்கானிஸ்தான்) 
(6) தசாப்தத்தின் சிறந்த அறத்துடன் விளையாடிய வீரர்- MS Dhoni (இந்தியா) 
இது தவிர ICC தசாப்தத்தின் டெஸ்ட் அணியில் சங்கக்கார, ஒருநாள் அணியில் மாலிங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 
இது தொடர்பில் ICC யினால் வெளியிடப்பட்ட பட்டியல் வருமாறு: 
Virat Kohli wins the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade 
Ellyse Perry wins the Rachael Heyhoe-Flint Award for ICC Female Cricketer of the Decade 
Steve Smith is ICC Men’s Test Cricketer of the Decade 
Virat Kohli is ICC Men’s ODI Cricketer of the Decade 
Ellyse Perry is ICC Women’s ODI Cricketer of the Decade 
Rashid Khan is ICC Men’s T20I Cricketer of the Decade 
Ellyse Perry is ICC Women’s T20I Cricketer of the Decade 
Kyle Coetzer is ICC Men’s Associate Cricketer of the Decade 
Kathryn Bryce is ICC Women’s Associate Cricketer of the Decade 
MS Dhoni wins ICC Spirit of Cricket Award of the Decade








ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு

December 28, 2020

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா:

December 28, 2020

இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத், Covid-19 தடுப்பூசிக்கான உலகளாவிய உற்பத்தி கூடமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இங்கு 5 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளமையே இதற்கான காரணமாகும். 
அது தொடர்பான விபரங்களை கீழே தருகிறோம். 
(1) பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து 'கோவாக்சின் (Covaxin)' என்ற தடுப்பூசியை உருவாக்கி அதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி அங்கு நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தியின் முன்னேற்றத்தை கேட்டறிந்தார். 60-க்கு மேற்பட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் தனியாக பார்வையிட்டனர். 
(2) Biological E Limited  (பயாலஜிக்கல் இ லிமிடெட்) என்ற மற்றொரு ஐதராபாத் நிறுவனம், ஜான்சென் பார்மசூட்டிக்கல் என்வி என்ற நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் பரிசோதனையும் நடந்து வருகிறது. 
(3) ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெடீஸ் லேப்ஸ் நிறுவனம், 
ரஷிய தயாரிப்பான 'ஸ்புட்னிக் வி (Sputnik-v)' கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கும், இந்தியாவில் 10 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிப்பதற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 
(4) அரவிந்தோ பார்மா என்ற ஐதராபாத் நிறுவனம், கொரோனா உள்பட பல்வேறு வைரஸ்களை குணப்படுத்தும் தடுப்பூசிகள் உற்பத்திக்காக ரூ.275 கோடி முதலீடு செய்துள்ளது. 
(5) அத்துடன், ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தடுப்பூசிகளை சேமிக்க குளிர்பதன கிடங்கு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. 
இந்த வகையில் பார்க்கும் பொழுது கொரோனா தடுப்பூசிக்கான சர்வதேச மத்திய நிலையமாக இந்தியா மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு...

December 28, 2020

Covid-19 னால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பிலான தீர்மானத்தை அரசாங்கம் சகல இனத்தினருடனும் கலந்தாலோசித்து பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என கட்சியின் நிலைப்பாட்டை பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார். 
கடந்த 23 ஆம் திகதி கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது குறித்த அறிக்கை ஒருமனதாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு... உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு... Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

ஆரம்பப் பிரிவில் இரண்டு பிரிவுகளாக மாணவர்கள்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு:

December 28, 2020

2021 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இன்று நடைபெற் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 
மாணவர்கள் மத்தியில் தனிப்பட்ட இடைவெளியை முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான வேலைத்திட்டம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும். மாணவர்களின் நலன்கருதியே முறையான திட்டமிடலுக்கு அமைவாகவே, ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மேலும் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளும் இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குறுகிய அரசியல் நோக்கில் இதுபற்றி கவனம் செலுத்தக்கூடாது பாடசாலைகளை திறக்குமாறு பெற்றோர் நாளாந்தம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பாடசாலைகளுக்கான சுகாதார உபகரணங்களை வழங்குவதற்கென அரசாங்கம் ஆயிரத்து 50 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆரம்பப் பிரிவில் இரண்டு பிரிவுகளாக மாணவர்கள்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு: ஆரம்பப் பிரிவில் இரண்டு பிரிவுகளாக மாணவர்கள்: கல்வி அமைச்சரின் இன்றைய  அறிவிப்பு: Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள்

December 28, 2020

Covid-19 தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி இலங்கையின் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த 09 மாதங்களில் எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தரவில்லை. 
மாறாக பயணிகள் பரிமாற்றம், பண்டங்களை எடுத்துச் செல்லல், வெளிநாடுகளில் பணியாற்றிய தொழிலாளர்களை அழைத்துவருதல் போன்ற நடவடிக்கைகளுக்காக மாத்திரமே கடந்த 09 மாதங்களில் விமான நிலையங்கள் பயன்படுத்தப்பட்டன. 
இதேவேளை சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டார்கள். இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்களை மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கும் முன்னோட்ட வேலைத்திட்டம் இன்று (28) ஆரம்பமானது. 
இதற்கமைய, இன்று உக்ரேனின் கியுவ் நகரிலிருந்து 186 பயணிகளுடன் இலங்கைக்கு வந்த விமானம் 


மத்தள விமான நிலையத்தில் பிற்பகல் 2.30 மணியளல் தரை இறங்கியது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஏ சந்ரசிறி ஆகியோரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். 
இலங்கை வந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகளிடம் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் 
PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, அவர்கள் ஹொட்டல்களில் தங்குவதற்கு முன்னரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்கள். அவர்கள் 10 நாட்கள் இலங்கையில் தங்கவிருக்கிறார்கள். இந்த சுற்றுலாப் பயணிகள் கொக்கல பிரதேசத்தில் உள்ள ஹொட்டல்களில் தங்கவுள்ளதோடு, அவர்களுக்கு பொதுமக்கள் உள்ள பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது. 
 சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் முன்னோட்ட நடவடிக்கை அடுத்த மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள நாடுகளிலிருந்து 2,580 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவிருப்பதாக மத்தள விமான நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
(அ.த.தி)
9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் 9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக...

December 28, 2020

2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் ஜனவரி மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 05 கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 
உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக... உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக... Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

December 28, 2020

2020ம் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரியில் ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். 
11 பாடங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு  Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

Vacancy: Sri Lankan Airlines

December 28, 2020

Vacancy: Sri Lankan Airlines - Sri Lankan Catering. 
Closing date: 14 days from 20-12-2020. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancy: Sri Lankan Airlines Vacancy: Sri Lankan Airlines Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

Vacancy: The Institution of Engineers

December 28, 2020

Vacancy: The Institution of Engineers. 
Closing date: 14 days from 20-12-2020. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancy: The Institution of Engineers Vacancy: The Institution of Engineers Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Army.

December 28, 2020

Vacancies in the Sri Lanka Army. 
Closing date: 08-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancies: Sri Lanka Army. Vacancies: Sri Lanka Army. Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

Ministry of Education (Interest Free Student Loan - Full details)

December 28, 2020

Ministry of Education (Interest Free Student Loan Scheme for Degree Programs - Full details) 
Closing date: 31-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Ministry of Education (Interest Free Student Loan - Full details) Ministry of Education (Interest Free Student Loan - Full details) Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

MBA (Rajarata University of Sri Lanka)

December 28, 2020

MBA (Rajarata University of Sri Lanka) 
Closing date: 31-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

MBA (Rajarata University of Sri Lanka) MBA (Rajarata University of Sri Lanka) Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5
Powered by Blogger.