மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்...

December 30, 2020

மேல் மாகாணத்தில் தற்போதைய நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பாடசாலைகளை மீள திறப்பது சற்றுக் கடினம். அது 
00000
மேலும் தாமதம் அடையலாம் என கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 முடக்கப்படாத ஏனைய பிரதேசங்கள் பற்றியே தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த பிரதேச பாடசாலைகள் திட்டமிட்டபடி ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்... மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

ரத்து செய்யப்பட்டது 50 பஸ்களின் அனுமதிப் பத்திரம்

December 30, 2020

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய 68 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ் வண்டிகள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரத்து செய்யப்பட்டது 50 பஸ்களின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது 50 பஸ்களின் அனுமதிப் பத்திரம் Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம்

December 30, 2020

இலங்கையின் அதிகூடிய வயதை கொண்ட பெண்மணி களுத்துறை நாவல பெரிய வைத்தியசாலையில் நேற்று (29) காலமானார். 
தொடாங்கொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மெஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த வேலு பாப்பாத்தி என்ற 117 வயது மூதாட்டியை இவ்வாறு மரணமானார். 
1903-மே-3ஆம் திகதி பிறந்த இவர் பெருபான்மை இனத்தவரை 
திருமணம் செய்துள்ளதுடன் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். 
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தில் முதியோருக்கான தேசிய சபை நாட்டின் ஆகக்கூடிய வயதை கொண்ட பெண் என்ற சான்றிதழை இவருக்கு வழங்கியுள்ளது. 
அரசாங்கத்தினால் வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டையில் இவரது வயது குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம் சான்றிதழ் பெற்ற இலங்கையின் வயது கூடிய பெண்மணி மரணம் Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா

December 30, 2020

பைஸர் பயோ-என்-டெக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்ட அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில தாதி ஒருவருகுக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
டிசம்பர் 18 ஆம் திகதி குறித்த தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டவருக்கு 6 நாள் கழித்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் குறித்த தடுப்பு மருந்து செயல்பட சுமார் 10 - 14 நாள்களாகும் எனக் கூறப்படுவதோடு 2 முறை போட்டுக்கொண்டால் தான் அது 95% திறன்வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை

December 30, 2020

அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விடயங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில் குழுவை கடந்த மாதம் 29ஆம் திகதி நியமித்தார். 
குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 7ஆம் திகதி (2020.12.07) கையளிக்கப்பட்டது. 
அதன் இறுதி அறிக்கையை குழுவின் தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில் இன்று 
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளித்தது. 
மஹர சிறைச்சாலை கலவரத்தின்போது 11 கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்ட இறுதி அறிக்கை Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை..

December 30, 2020

தற்பொழுது பல நாடுகளிலும் பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரசு இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பது பற்றி விசேட பரிசோதனைகளை ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and Cell Biology Unit of University of Sri Jayewardenepura) ஆம்பித்துள்ளது. 
 இது தொடர்பாக, இதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவிக்கையில், 
இந்த புதிய உருமாறிய வைரஸ் இங்கிலாந்திலே ஆரம்பமானது. தற்பொழுது இந்தியா உட்பட பல நாடுகளிடையே பரவி வருகிறது. இதை PCR பரிசோதனையின் மூலம் அறிந்துக்கொள்ள முடியாது என்று கூறுவதற்கில்லை. இவ்வாறான பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் இதனால் இதுதொடர்பில் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. இருப்பினும், பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இதனை வேறுப்படுத்தி அடையாளம் காண முடியாது. இதை கண்டறிவதற்கு தனியான விசேட மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
இந்த உருமாறிய வைரஸை அடையாளம் காண்பது இலங்கை போன்ற நாடுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்த அவர் பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த புதிய உருமாறிய வைரசுக்கு இலக்கான நபர்கள் தொடர்பில் ஏமாறக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் கூறினார். தற்போதுள்ள நிலைமையில் இதுதொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும் ஒரு பிரச்சினை உண்டு. பொதுவாக நாம் பி.சீ.ஆர் பரிசோதனையில் குறிப்பிட்ட இலக்குடன் செயல்படும் பொழுது அந்த இலக்கு சிலவேளை தவறக்கூடும். இதனால் பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிய முடியாது என்று திட்டவட்டமாக கூறமுடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை.. உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை.. Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு...

December 30, 2020

அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05 - 08 வரை கூட்டுவதற்கு இன்று (30) முற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். 
Covid-19 சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் இதன்போது அனுமதி வழங்கப்படும். ஜனவரி 06, புதன்கிழமை மு.ப. 10.00 - 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான 
நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 கொரோனா பரவல் காரணமாக கடந்த நவம்பர் 03ஆம் திகதி முதல், பாராளுமன்றம் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு... அடுத்த வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பற்றிய அறிவிப்பு... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

கொரோனாவிற்கு பலியான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்..

December 30, 2020

கொரோனா தொற்றினால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார். 
குடியரசு கட்சியை சேர்ந்த லூக் லெட்லோ ( luke letlow) என்பவரே இவ்வாறு மரணமானார். கடந்த 18ஆம் திகதி கொரோனா உறுதியான அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு பலியான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்.. கொரோனாவிற்கு பலியான அமெரிக்க  நாடாளுமன்ற உறுப்பினர்.. Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்...

December 30, 2020

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். தனது 02 
பாதுகாப்பாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானதையடுத்தே இவ்வாறு தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். 
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தனிமைப்படுத்தலில் உள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்...

December 30, 2020

முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு குழுவொன்றை சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். 
200 பேர் கொண்ட குழுவொன்று இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்...

December 30, 2020

பார ஊர்திகளுக்காக (Heavy Vehicles) புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வருபவர்களும் பழைய அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வருபவர்களும் கடந்த ஒரு வருடத்திற்குள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் போதைப்பொருள் பாவனை உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். 
பார ஊர்தி சாரதிகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கை ஜனவரி முதல் ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு)

December 29, 2020

ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என அறிவித்து மருத்துவர்களின் ஆலோசனையையும் மீறி ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தென்னிந்திய Super Star நடிகர் ரஜனிகாந்த். 
கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்தாலும் அதில் நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. 
ரஜினிக்கு தொற்று ஏற்படவில்லையாயினும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. 
வீடு திரும்பிய அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றியும் இதர விடயங்கள் தொடர்பாகவும் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 
அவர் வெளியிட்ட முழுமையான அறிக்கையை கீழே தருகிறோம்.




என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்...

December 29, 2020

இலங்கையில் மாதமொன்றுக்கு 60,000 - 90,000 வரையான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. 
அந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து ஆணையாளர் சுமித் அளஹகோன் தெரிவித்துள்ளார். 
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி தென்னாபிரிக்க நிறுவனமொன்றினாள் கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5
Powered by Blogger.