ஊடக அடையாள அட்டை: நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்:
irumbuthirai
December 31, 2020
ஊடகவியலாளர்களின் ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021 மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
2021 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையை வழங்குவதற்கான அடிப்படை அலுவல்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பத்தை www.dgi.gov.lk என்ற அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அல்லது www.news.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
இதே போன்று 2020 க்காக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி தொடக்கம் 2021 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அடையாள அட்டை: நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்:
Reviewed by irumbuthirai
on
December 31, 2020
Rating: