2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல்

January 01, 2021

2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது நிறுவன தலைவர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஊழியர்கள் மாத்திரம் அழைக்கப்படுவது 
போதுமானது என பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார். 
 குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு வழமைக்கு திரும்பிவிட்டது என சுகாதார அமைச்சு அறிவித்தால், சகல ஊழியர்களும் கடமைக்கு திரும்புவது தொடர்பான சுற்றுநிறுபம் அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல் 2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன?

January 01, 2021

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி அளிப்பதா? என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள நேற்று கூடிய இரண்டு குழுக்களும் எவ்வித தீர்மானமும் இன்றி வெளியேறினர். 
 இதில் ஒரு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினாலும் மற்றைய குழு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேயினாலும் நியமிக்கப்பட்டதாகும். 
 இதேவேளை உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 
நேற்றைய தினம் பொரளை மயானத்துக்கு முன்னால் சிலோன் தவ்ஹீத் ஜமாத் உட்பட ஏனைய அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அபே ஜனபல கட்சி கொழும்பு மாவட்ட தலைவர் டான் பிரசாத் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. 
எனினும் போலீசார் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர்.
கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன? கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இறுதித் தீர்மானத்திற்கு கூடிய இரண்டு குழுக்கள்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு:

January 01, 2021

மகர சிறைச்சாலை தொடர்பான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த 
திட்டமொன்று தயாரிப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு: மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

ஜனாசா எரிப்புக்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் நடத்திய ஆர்ப்பாட்டம்..

January 01, 2021

ஜனாசா எரிப்புக்கு எதிராக கூட்டிணைந்த அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் (31) பொரளை மயானத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. 
 இதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட ஏனைய மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாசா எரிப்புக்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் நடத்திய ஆர்ப்பாட்டம்.. ஜனாசா எரிப்புக்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட பலரும் நடத்திய ஆர்ப்பாட்டம்.. Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

January 01, 2021

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள நிலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தாமும் அந்த நிலைப்பாட்டிற்கு இணங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

70 வருட பூர்த்தி: 20 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய வங்கி:

January 01, 2021
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 20 ரூபாய் நாணயம் நேற்றைய தினம் (31) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 
மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்த நாணயம் 7 பக்க வடிவத்துடன் அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் ஆக்கப்பட்டுள்ளது. 3,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவை புழக்கத்திற்கு விடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த நாணயம் 
மத்திய வங்கி தலைமையகத்திலும் அதன் பிராந்திய கிளைகளிலும் ரூபா 1300 க்கு விற்பனை செய்யப்படும்.
70 வருட பூர்த்தி: 20 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய வங்கி: 70 வருட பூர்த்தி: 20 ரூபாய் நாணயம் வெளியிட்ட மத்திய வங்கி: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

December 31, 2020

மாகாண சபை தேர்தலில் தமிழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை ஒதுக்குவதற்கு ஆளும்கட்சி தவறினால் 
தனித்து பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
The Hindu பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
மேலும் தெரிவிக்கையில், 
கடந்த பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கபட்டதாக கூறிய அவர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிட தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தனித்துப் பயணிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

நீதிமன்ற தீப்பரவல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? குழுவின் அறிவிப்பு

December 31, 2020

டிசம்பர் 15ஆம் திகதி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதற்கான சாட்சிகள் இல்லை என அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவித்துள்ளது. 
 இதேவேளை இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீப்பரவல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? குழுவின் அறிவிப்பு நீதிமன்ற தீப்பரவல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா? குழுவின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்:

December 31, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. 
அதில், புதிய அரசியல் கட்சிகளை ஜனவரி முதல் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் நிமல் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார். 
இதேவேளை மாகாணசபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அதற்காக 
4 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
மேலும் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறும். அதே தினம் மாலை வேளையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உடனான சந்திப்பும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: புதிய கட்சிகளை பதிதல்... மாகாண சபைத் தேர்தலுக்கு நான்காயிரம் மில்லியன்... இன்றைய கூட்ட தீர்மானங்கள்: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை

December 31, 2020

சபாநாயகர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என வெளியான தகவல்களை சபாநாயகர் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. இது உண்மைக்கு புறம்பான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சபாநாயகர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என நேற்றைய தினம் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

ஊடக அடையாள அட்டை: நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்:

December 31, 2020

ஊடகவியலாளர்களின் ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021 மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
2021 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையை வழங்குவதற்கான அடிப்படை அலுவல்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
இதற்கான விண்ணப்பத்தை www.dgi.gov.lk என்ற அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அல்லது www.news.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 
இதே போன்று 2020 க்காக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி தொடக்கம் 2021 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அடையாள அட்டை: நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்: ஊடக அடையாள அட்டை:  நீடிக்கப்பட்டது செல்லுபடியான காலம்: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது:

December 31, 2020

மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில் கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக் கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும். நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகள் இந்த சகல வசதிகளையும் வழங்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். 
 நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் நேற்று (30) 
கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படும். 1ம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், 2ம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது: சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது: Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5

Degree Courses with Free Laptop (Sir John Kotelawela Defence University)

December 31, 2020

Degree Courses with Free Laptop in the Sir John Kotelawela Defence University - Ratmalana. 
Closing date: 06-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.


Degree Courses with Free Laptop (Sir John Kotelawela Defence University) Degree Courses with Free Laptop (Sir John Kotelawela Defence University) Reviewed by irumbuthirai on December 31, 2020 Rating: 5
Powered by Blogger.