தரம் 6ற்கு மேற்பட்ட மாணவிகளின் மாதவிடாய்: அரசு எடுத்த நடவடிக்கை:

January 03, 2021

பாடசாலை மாணவிகளுக்கு மாதாந்தம் வரும் மாதவிடாய் காரணமாக மாதத்தில் 02 நாட்கள் விடுமுறை எடுப்பதாக கல்வியமைச்சு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
தரம் 6 க்கு மேற்பட்ட சுமார் 12 லட்சம் மாணவிகள் இவ்வாறு விடுமுறை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான காரணம் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த மாதவிடாய் 
துவாய் (நப்கீன்) இல்லாமையேயாகும். ஏனெனில் அரச பாடசாலைகளில் கற்கும் 65% ஆன மாணவிகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 
 எனவே இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த மாணவிகளின் உள மற்றும் உடல் சுகாதார நிலைமைகளைப் சிறப்பாக பேணிக் கொள்ளவும் அரசாங்கம் இலவசமாக மாதவிடாய் நப்கீன்களை வழங்க தீர்மானித்துள்ளது. 
பிரதமரும் கல்வியமைச்சரும் இது தொடர்பான விளக்கத்தை அமைச்சரவைக்கு வழங்கி இத்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது.
தரம் 6ற்கு மேற்பட்ட மாணவிகளின் மாதவிடாய்: அரசு எடுத்த நடவடிக்கை: தரம் 6ற்கு மேற்பட்ட மாணவிகளின் மாதவிடாய்: அரசு எடுத்த நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

ஜன. 11 க்கு முன் ஆசிரியர் நியமனம்: வீடுகளுக்கே நியமனக் கடிதங்கள்:

January 02, 2021

கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியேறிய 3,772 பேருக்கான ஆசிரியர் நியமனம் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அதுவும் வீடுகளுக்கே நியமனக் 
கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
இதில் 1,000 பேர் தேசிய பாடசாலைகளுக்கும் ஏனைவர்கள் மாகாண பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜன. 11 க்கு முன் ஆசிரியர் நியமனம்: வீடுகளுக்கே நியமனக் கடிதங்கள்: ஜன. 11 க்கு முன் ஆசிரியர் நியமனம்: வீடுகளுக்கே நியமனக் கடிதங்கள்: Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

Vacancy: State Ministry of National Heritage Performing Arts and Rural Arts Promotion

January 02, 2021

Vacancy in the State Ministry of National Heritage Performing Arts and Rural Arts Promotion. (Tower Hall Theatre Foundation) 
Closing date: 14-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.


Vacancy: State Ministry of National Heritage Performing Arts and Rural Arts Promotion Vacancy: State Ministry of National Heritage Performing Arts and Rural Arts Promotion  Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

ஒரு முகக் கவசத்திலிருந்து 1 ரூபா மஹபொல நிதியத்திற்கு...

January 02, 2021

தற்சமயம் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் மீதி ரூ. 12.2 பில்லியன்களாகக் காணப்படுகின்றது. அதனை அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 
அந்தவகையில் சதோச நிறுவனங்களின் ஊடாக விற்பனை 
செய்யப்படும் முகக்கவசங்களின் வருமானத்தின் ஒரு பகுதி மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 
முகக்கவசங்கள் சதோசவின் ஊடாக 15 ரூபா என்ற சில்லறை விலைக்கு விற்கப்படுகின்றது. ஒரு முகக்கவசத்தை விற்பனை செய்வதன் ஊடாக ஒரு ரூபா மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு வழங்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு முகக் கவசத்திலிருந்து 1 ரூபா மஹபொல நிதியத்திற்கு... ஒரு முகக் கவசத்திலிருந்து 1 ரூபா மஹபொல நிதியத்திற்கு... Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

Vacancies: Sugathadasa National Sports Complex Authority

January 02, 2021

Vacancies: Sugathadasa National Sports Complex Authority. 
Closing date: 11-01-2021. 
See the details below.
Source : 27-12-2020 Sunday Observer.


Vacancies: Sugathadasa National Sports Complex Authority Vacancies: Sugathadasa National Sports Complex Authority Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

Vacancies: Indian Housing Project

January 02, 2021

Vacancies in the Indian Housing Project. 
Closing date: 15-01-2021. 
See the details below.


Vacancies: Indian Housing Project Vacancies: Indian Housing Project Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

18-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

January 02, 2021

18-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 18-12-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
18-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 18-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

பதிவு செய்யப்படாத சனிடைசர் (Sanitizer): வெளிவந்தது விசேட வர்த்தமானி:

January 02, 2021

பதிவு செய்யப்படாத சனிடைசர் தொடர்பாக விசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது, தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத Sanitizer களை விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டு அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 
குறித்த தடை 2021 பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்யப்படாத சனிடைசர் (Sanitizer): வெளிவந்தது விசேட வர்த்தமானி: பதிவு செய்யப்படாத சனிடைசர் (Sanitizer): வெளிவந்தது விசேட வர்த்தமானி: Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய கொரோனா தடுப்பூசி

January 02, 2021

அவசர தேவைக்காக Pfizer-BioNTech கொரோனா தடுப்பு மருந்தை பாவிக்க உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. 
உலக நாடுகள் தடுப்பூசி இறக்குமதியையும் விநியோகத்தையும் விரைவாக அங்கீகரிக்க இந்த அறிவிப்பு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய கொரோனா தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய கொரோனா தடுப்பூசி Reviewed by irumbuthirai on January 02, 2021 Rating: 5

தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்

January 01, 2021

தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் சுபக எனப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது. 
இது மாதாந்தம் 2500 ரூபா வீதம் 20 மாதங்களுக்கு வழங்கப்படும். 2020இல் தரம் 12 இல் கற்கும் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 12.01.2021 க்கு முன்னர் பாடசாலை அதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டும். 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
விண்ணப்ப படிவத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
மேலதிக இணைப்புகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்?

January 01, 2021

ஜனவரி 15ஆம் தேதி டிப்ளமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட இருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா முடித்த 3,772 பேர்களுக்கே இவ்வாறு நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
திறமைச் சித்தி உடையவர்களுக்கு தேசிய பாடசாலைகளுக்கும் ஏனையவர்களுக்கு அந்த மாவட்டத்திலேயே 
நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 ஆனால் ஜனவரி 15 நியமனம் வழங்கப்படும் என்ற விடயத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். ஏனெனில் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் கல்வி அமைச்சு வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்? ஜனவரி 15-ல் ஆசிரிய நியமனம்? Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை:

January 01, 2021

ஹுவாவி (Huawei) நிறுவனத்துடன் இணைந்து நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகளை உருவாக்கி வெளிவாரி கல்வி வசதிகளை முன்னேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதற்காக 30,000 உபகரணங்களை இலவசமாக பெற்றுக் 
கொடுப்பதற்கு மேற்படி நிறுவனம் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது. 
இந்த செயற்றிட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று அமைச்சரின் தலைமையில் கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது. அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, தகவல் தொழில்நுட்ப கல்விப் பிரிவின் பணிப்பாளர் உதாரா திக்கும்புர, ஹுவாவி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உப தலைவர் இந்திக டி சொய்சா, ஹுவாவி பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ரிகார்டோ ஷியாவோ உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 
கற்றல் நடவடிக்கைகளை மிகவும் பிரயோசனமுள்ள வகையில் நடைமுறைப்படுத்த இணையதள வசதிகளை பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பமானது காலத்துக்கு பொருத்தமானதும் மிகவும் பெறுமதியானதுமாகும் என கல்வியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை: பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்..

January 01, 2021

இன்று முதல் (ஜன. 01) ஆவுஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். 
அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
"நாம் இளமையானவர்கள்" என்ற இடம் "நாம் ஒன்றே" என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. 
அதாவது 'நாம் இளமையும், சுதந்திரமும் ஆனவர்கள் என்பதால்' என பொருள் தரும் "ஃபார் வீ ஆர் யங் அன் ஃப்ரீ' என்ற வரி நீக்கப்பட்டு, 
'ஃபார் வீ ஆர் ஒன் அன் ஃப்ரீ' என்ற வரி சேர்க்கப்பட்டுள்ளது. 
300க்கும் மேற்பட்ட தேசிய மூதாதையரிடம் இருந்தும், மொழிக் குழுக்களிடமிருந்தும் பெறப்பட்டதே நம் தேசத்தின் கதை என்பதை, புவியில் மிக வெற்றிகரமாக இயங்கும் பன்முக பண்பாடுகள் கொண்ட நாடு நாம் என்பதை இது அங்கீகரிக்கிறது. கொரோனா வைரஸ் உலகத் தொற்றின்போது ஆஸ்திரேலியா ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் இந்த மாற்றம் உள்ளது. இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டார் மாரிசன். 
இந்த மாற்றத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்.. இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்.. Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5
Powered by Blogger.