தரம் 11 க்கு மாத்திரம் ஆரம்பமாகும் மேல் மாகாண பாடசாலைகள்...

January 04, 2021

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தரம் 11 ஆம் வகுப்புக்கான பாடசாலைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார். 
 எதிர்வரும் மார்ச் மாதத்தில் 
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நடைபெற இருப்பதனால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 
 இதேவேளை 2021 கல்வியாண்டுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.. 
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் தவிர்த்த, ஏனைய சகல பாடசாலைகளும் இவ்வாறு திறக்கப்படவுள்ளன. இந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு பாடசாலை நடத்துவது பற்றி விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம் )
தரம் 11 க்கு மாத்திரம் ஆரம்பமாகும் மேல் மாகாண பாடசாலைகள்... தரம் 11 க்கு மாத்திரம் ஆரம்பமாகும் மேல் மாகாண பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

க.பொ.த. (உ/த) செய்முறை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதவர்களுக்கு..

January 04, 2021

க.பொ.த. உயர்தர பரீட்சையின் 12 பாடங்கள் தொடர்பான செய்முறை பரீட்சை நாளை (5) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 
இதற்கான அனுமதி அட்டைகள் 
இதுவரை கிடைக்காத மாணவர்கள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக ஒரு பிரதியை பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
க.பொ.த. (உ/த) செய்முறை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதவர்களுக்கு.. க.பொ.த. (உ/த) செய்முறை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதவர்களுக்கு.. Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

பிறப்பை விட இறப்பு அதிகரித்த நாடு

January 04, 2021

ஏற்கனவே உலகில் குறைந்த அளவு பிறப்பு வீதத்தைக் கொண்ட தென்கொரியாவில் கடந்த வருடம் (2020) பிறப்புக்களின் எண்ணிக்கையை விட இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 
அதாவது கடந்த வருடம் 
275,800 பிறப்புக்களும் 307,764 இறப்புகளும் அங்கு நிகழ்ந்துள்ளன. எனவே 
இந்நிலைமை காரணமாக நாட்டில் குறைவடையும் இளைஞர் தொகையால் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழி ஏற்படுவதுடன் நாட்டின் பொருளாதாரத்திலும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிறப்பை விட இறப்பு அதிகரித்த நாடு பிறப்பை விட இறப்பு அதிகரித்த நாடு Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

இவ்வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறு பற்றி கல்வி அமைச்சர்...

January 04, 2021

இவ்வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அதேவேளை எதிர்வரும் மார்ச் 
மாதம் நடைபெறும் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறு பற்றி கல்வி அமைச்சர்... இவ்வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறு பற்றி கல்வி அமைச்சர்... Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

உக்ரைனிலிருந்து 4வது குழுவும் வந்தது

January 04, 2021

உக்ரேனில் இருந்து நான்காவது சுற்றுலாப்பயணிகள் இன்றைய தினம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இன்று இவ்வாறு வருகை தந்தது 97 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை ஏற்கனவே வந்த 
குழு இன்றைய தினம் செல்லவிருந்த பொலன்னறுவை மற்றும் நாளைய தினம் செல்லவிருந்த சிகிரியா பயணம் என்பன ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து 4வது குழுவும் வந்தது உக்ரைனிலிருந்து 4வது குழுவும் வந்தது Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரி பதவிக்கான விண்ணப்பம் கோரல்

January 04, 2021

2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஏதேனுமொரு வருடத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் சித்தியடைந்த மாணவிகளிடமிருந்து (திருமணமாகாதவர்) சுகாதார அமைச்சின் 'சுகாதார சேவைகள் அதிகாரி' வெற்றிடங்களுக்கான பாடநெறியின் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இணைய வழி மூலமாக 
இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவுத் திகதி: 01-02-2021. 
இது தொடர்பான மேலதிக தகவல்களை 2021.01.08 ஆம் திகதி வெளிவரும் வர்த்தமானி மற்றும் www.health.gov.lk என்ற இணையதளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரி பதவிக்கான விண்ணப்பம் கோரல் குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரி பதவிக்கான விண்ணப்பம் கோரல் Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை:

January 04, 2021

அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் கடந்த 15 நாட்களாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அலுவலகத்தின் மருத்துவர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 
குறித்த நபர் சென்ற மாதம் 
19ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
 குறித்த உடலை அடையாளம் காட்டுவதற்கு இதுவரை அவரது வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 
இதேவேளை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியர்கள் தமது கடமைகளில் இருந்து நேற்றைய தினம் விலகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை: கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை: Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி..

January 04, 2021

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராவார். 
தற்போதுவரை இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த 
சீனாவை சேர்ந்த தொழிலதிபரான ஷாங் ஷான்ஷான் (Zhong Shanshan) 1ம் இடத்திற்கு முன்னேறியதுடன் முகேஷ் அம்பானி 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாமிடத்தில் சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா இருக்கின்றார். 
77.8 பில்லியன் டொலர் மொத்த சொத்துக்களை கொண்ட ஷான்ஷான் உலக பணக்காரர் பட்டியலில் 11 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 
இவர் மற்ற பணக்காரர்களை போலல்லாமல் இதழியல் துறை, காளான் வளர்ப்பு மற்றும் சுகாதாரத் துறை என்பவற்றிலேயே கவனம் செலுத்தி வந்தவர். 
கடந்த ஏப்ரலில் தனக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை சீன பங்குச் சந்தையில் இவர் பட்டியலிட்டார். 
மேலும் மூன்று மாதங்களுக்கு பிறகு இவரது தண்ணீர் போத்தல் நிறுவனத்தை பங்கு சந்தையில் பட்டியலிட்டார். இந்நிறுவனத்தின் பங்கு 155% ற்கு மேல் அதிகரித்தது. 
கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் இறங்கிய இவரது மற்றொரு நிறுவனத்தின் பங்கு விலை 2,000% க்கு மேல் அதிகரித்தது. 
அந்த வகையில் இவரது வளர்ச்சி வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் அதிக செல்வம் ஈட்டப்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி.. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி.. Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்?

January 04, 2021

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தனது பதவியை ராஜினாமா செய்தமைக்கான காரணம் 
சிலரின் தலையீடே என தெரிய வருவதாக ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
இவர் தனது ராஜினாமா கடிதத்தை இம்மாதம் 1ம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளதாக தெரிய வருகிறது.
 2019 டிசம்பர் முதல் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்? முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்? Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

Full Free Scholarship to Japan - 2021/22.

January 04, 2021

Full Free Scholarship to Japan - 2021/22. (ASIA KAKEHASHI) 
Fully sponsored by ministry of education in Japan. 
Closing date: 20-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.

Full Free Scholarship to Japan - 2021/22. Full Free Scholarship to Japan - 2021/22. Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

MPhil / PhD - 2021 (University of Colombo)

January 04, 2021

MPhil / PhD - 2021 (University of Colombo) 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.

MPhil / PhD - 2021 (University of Colombo) MPhil / PhD - 2021 (University of Colombo) Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka)

January 04, 2021

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) 
Closing date: 17-01-2021. 
See the details below.
Source: 27-12-2020 Sunday Observer.

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்...

January 03, 2021

இலங்கை வந்துள்ள உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள் மூடப்படும் என மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. 
அந்த வகையில் நாளை (4) அவர்கள் பொலநறுவை பராக்கிரம அரண்மனை வளாகம், லங்காதிலக விகாரை, தலதா முற்றம், சிவன் ஆலயம், கிரி விகாரை மற்றும் கல் விகாரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர். எனவே நாளை குறித்த இடங்கள் பிற்பகல் 01 மணிக்கு பின்னர் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படமாட்டாது. 
நாளை மறுதினம் 
சீகிரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதால் அன்றைய தினம் குறித்த வலயம் நண்பகல் 12 மணி வரை உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படமாட்டாது என குறித்த நிதியம் அறிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் கொத்தணி ஒன்று உருவானால் அதற்கு யார் பொறுப்பு என ஜேவிபி கேள்வி எழுப்பியுள்ளது.
மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்... மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5
Powered by Blogger.