காலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மொயின் அலி ...
irumbuthirai
January 04, 2021
இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட நேற்றைய தினம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாட்டிற்கு வருகை தந்தது.
அதில் சகல துறை ஆட்டக்காரரான மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை
கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மொயின் அலி காலியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 10 நாட்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி நாளை மறுதினம் தமது பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மொயின் அலி ...
Reviewed by irumbuthirai
on
January 04, 2021
Rating:
