கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமம்: 03 மரணங்களும் பதிவு:

January 05, 2021

களுத்துறை மாவட்டத்தில் உள்ள புளத்சிங்கள, வேயன்கல்ல முஸ்லிம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 இக்கிராமம் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 
இதுவரை 1,305 PCR பரிசோதனைகளும் 
72 Antigen பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில் 389 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 
இதேவேளை அந்தக் கிராமத்தில் இதுவரை 03 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமம்: 03 மரணங்களும் பதிவு: கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமம்: 03 மரணங்களும் பதிவு: Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? லலித் வீரதுங்க வெளிப்படுத்திய தகவல்..

January 05, 2021

இலங்கையில் முதன் முதலில் கொரோனா தடுப்பூசியை எப்போது பெற்றுக்கொள்வர் என்பது தொடர்பில் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தகவலை வெளிப்படுத்தியுள்ளார். 
அந்தவகையில் எதிர்வரும் 
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதற்கான கலந்துரையாடல் தற்போது இறுதி மட்டத்தில் இருப்பதாகவும் அவர் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? லலித் வீரதுங்க வெளிப்படுத்திய தகவல்.. இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? லலித் வீரதுங்க வெளிப்படுத்திய தகவல்.. Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

January 05, 2021

முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக இன்று முதல் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டமும் பொலிசாரினால் ஆரம்பிக்கப்பட்டது. 
 உரிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமை காரணமாகவே இந்த புதிய நடைமுறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 
அதன்படி முகக் கவசம் அணியாத சுமார் 300 பேரிடம் செய்யப்பட்ட 
Rapid Antigen பரிசோதனையில் இருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
 இதேவேளை கொரோனி 2வது அலை ஆரம்பமானதிலிருந்து இதுவரை சமூக இடைவெளியை பேணாத மற்றும் முக கவசம் அணியாத 2,172 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

கடத்தப்பட்ட தேரர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு: நால்வர் கைது:

January 05, 2021

நேற்று கொட்டதெனிய, நாவான மயானத்திலிருந்து எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலமானது, கடந்த 2ஆம் திகதி கடத்தப்பட்ட ஹங்வெல்ல, தும்மோதர, கொஸ்வத்த, கொடிகந்த ஆரன மடத்தில் இருந்த 65 வயதுடைய 
உடுவில தம்மசிரி தேரரின் சடலமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் குறித்த மண்டபத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பெண் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கடத்தப்பட்ட தேரர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு: நால்வர் கைது: கடத்தப்பட்ட தேரர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு: நால்வர் கைது: Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

10 மாதங்களின் பின் திறக்கப்படும் விமான நிலையங்கள்: திகதியும் அறிவிப்பு:

January 05, 2021

10 மாதங்களின் பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் வணிக சேவைகளுக்காக திறக்கப்படவுள்ளது. 
அதேவேளை 
ஜனவரி 23 ஆம் திகதியளவில் விமான நிலையங்களில் வணிக விமான பயணங்கள் முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 
இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், நாட்டின் சுற்றுலா துறையில் நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் 60 இலட்சம் பேர் நன்மை அடைகின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக இவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என குறிப்பிட்டார்.
10 மாதங்களின் பின் திறக்கப்படும் விமான நிலையங்கள்: திகதியும் அறிவிப்பு: 10 மாதங்களின் பின் திறக்கப்படும் விமான நிலையங்கள்: திகதியும் அறிவிப்பு:  Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை பெற இலங்கை அனுமதி..

January 05, 2021

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை (COVAX) இலங்கை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது. 
 நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்தது. 
 இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு. 
கொவக்ஸ் (COVAX) வசதியின் கீழ் கொவிட் - 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு எட்டுதல் 
கொவிட்- 19 வைரஸ் தொற்றுக்கு பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசியை தயாரித்த பின்னர் குறித்த தடுப்பூசியை சமமாக நாடுகளுக்கிடையே விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கங்களும் குறித்த உற்பத்தியாளர்களும் இணைந்து உருவாக்கிய உலகளாவிய அணுகுமுறையே கொவக்ஸ் என அழைக்கப்படுகின்றது. 
அதன் கீழ் கொவிட் - 19 இற்கான தடுப்பூசி தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதுடன் குறித்த தடுப்பூசியை அனைத்து 
நாடுகளும் பெற்றுக்கொள்வதற்காக நியாயமானதும் சமமானதுமான அணுகுமுறையை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இலங்கையும் இக் கொவக்ஸ் செயன்முறையில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், கொவக்ஸ் வசதிகள் மூலம் கொவிட் - 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக உத்தியோகபூர்வ அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான தகைமையை எமது நாடு கொண்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் உள்ளடங்கலாக, GAVI நிறுவனம் (Global Alliance for Vaccines and Immunization) மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. 
 குறித்த தடுப்பூசி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இரண்டு படிமுறைகளின் கீழ் விண்ணப்பங்களை கோருமாறு நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இலக்குக் குழு மற்றும் தடுப்பூசியைக் களஞ்சியப்படுத்தும் இயலளவு தொடர்பாக தொழிநுட்பத் தகவல்கள் உள்ளடங்கிய தடுப்பூசி விண்ணப்பத்தின் முதலாம் மற்றும் A பகுதி 2020 திசம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டியிருந்ததுடன், இலங்கை குறித்த விண்ணப்பத்தை உரிய நேரத்தில் சமர்ப்பித்துள்ளது. 
அதன் இரண்டாம் பகுதியான தடுப்பூசி பெறல் மற்றும் அதற்கமைவான முற்காப்பீட்டு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்காக 2021 சனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். 
அதற்கமைய, சட்டமா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி கொவக்ஸ் இற்கான தடுப்பூசி விண்ணப்பத்தின் B பகுதியை சமர்ப்பிப்பதற்கும், கொவக்ஸ் வசதிகள் மூலம் தடுப்பூசி வகைப்பிரித்து வழங்கும் பட்சத்தில் குறித்த தயாரிப்பாளருடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை பெற இலங்கை அனுமதி.. இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை பெற இலங்கை அனுமதி.. Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

04-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

January 05, 2021

04-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
04-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 04-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைப்பது பற்றி கல்வியமைச்சர்..

January 05, 2021

பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைத்துகொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி றோகினி கவிரத்ன இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ், 
அவ்வாறான எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார். 
 மேலும் இது தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைப்பது பற்றி கல்வியமைச்சர்.. விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைப்பது பற்றி கல்வியமைச்சர்.. Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

B. Sc in Management (Sir John Kotelawela Defence University)

January 05, 2021

B. Sc in Management (Sir John Kotelawela Defence University) 
Closing date: 20-01-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.
B. Sc in Management (Sir John Kotelawela Defence University) B. Sc in Management (Sir John Kotelawela Defence University) Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

நான்காவது முறை 04வது கட்சி சார்பில் சத்தியப்பிரமாணம் செய்த ரத்தன தேரர்

January 05, 2021

அபே ஜன பல பக்ஷய (எங்கள் மக்கள் சக்தி கட்சி)யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அத்துரலியே ரத்தன தேரர், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (5) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 
ரத்தன தேரர் இதற்கு முன்னர் 
ஜாதிக ஹெல உருமய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 03 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது முறை 04வது கட்சி சார்பில் சத்தியப்பிரமாணம் செய்த ரத்தன தேரர் நான்காவது முறை 04வது கட்சி சார்பில் சத்தியப்பிரமாணம் செய்த  ரத்தன தேரர்  Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

உரிமை கோரப்படாத கொரோனா உடல்கள்: போராட்டத்தில் ஈடுபட்ட ஹோமாகம மருத்துவர்கள்:

January 05, 2021

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இதுவரை உரிமை கோரப்படாமல் வைக்கப்பட்டுள்ள கொரோனா உடல்கள் காரணமாக பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அங்கு பணியாற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தினர். 
 இதன்போது கருத்து வெளியிட்ட ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வருணா ஜயசூரிய தெரிவிக்கையில், 
இங்குள்ள உடல்களில் ஐந்து உடல்கள் முஸ்லிம்களுடையது. உடல்களை உரிமை கோர வராததாலும் தகனம் செய்வதற்கு சவப்பெட்டி இல்லாமையாலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. அவர்களுடைய எதிர்ப்பை இந்த முறையில் தகனம் செய்வதற்காக தெரிவிக்கின்றனர். பழுதடைந்த நிலையிலும் இரண்டு உடல்கள் உள்ளன. இந்த நிலை எமது சுகாதார ஊழியர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று அவர் தெரிவித்தார்.
உரிமை கோரப்படாத கொரோனா உடல்கள்: போராட்டத்தில் ஈடுபட்ட ஹோமாகம மருத்துவர்கள்: உரிமை கோரப்படாத கொரோனா உடல்கள்: போராட்டத்தில் ஈடுபட்ட ஹோமாகம மருத்துவர்கள்: Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

உக்ரேன் பயணிகள் செல்லும் இடங்கள்: சுற்றுலா அதிகார சபையின் குற்றச்சாட்டு:

January 05, 2021

இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்கள் பயண விபரங்கள் என்பன தமக்குத் தெரியாது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 
 சுற்றுலா பயணிகளின் பயண விபரங்கள் முன்கூட்டியே வழங்கப்படவேண்டும் என சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்களுடன் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. இருப்பினும் இதுவரை 
அந்த விவரங்கள் கிடைக்கவில்லை. அதை பெற முயற்சித்தும் பலனில்லை. 
அவ்வாறு தகவல்களைப் பெற முயன்றபோது அவர் ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து செயற்படுபவர் என தகவல் கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உக்ரேன் பயணிகள் செல்லும் இடங்கள்: சுற்றுலா அதிகார சபையின் குற்றச்சாட்டு: உக்ரேன் பயணிகள் செல்லும் இடங்கள்: சுற்றுலா அதிகார சபையின் குற்றச்சாட்டு: Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

காலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மொயின் அலி ...

January 04, 2021

இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட நேற்றைய தினம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாட்டிற்கு வருகை தந்தது. 
அதில் சகல துறை ஆட்டக்காரரான மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதேவேளை 
கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மொயின் அலி காலியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 10 நாட்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இங்கிலாந்து அணி நாளை மறுதினம் தமது பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மொயின் அலி ... காலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மொயின் அலி ... Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.