மீள ஆரம்பமாகும் கொரியா வேலைவாய்ப்புக்கள்..

January 08, 2021

கொரியாவில் வேலை வாய்ப்புக்களை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 
ஊடக வெளியீடு 
 கொரியாவில் வேலை வாய்ப்புக்களை மீளத் திறப்பதற்கு வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன எதிர்பார்ப்பு 
 இலங்கை மற்றும் கொரியக் குடியரசில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சார்ந்த ஒத்துழைப்புக்களை புதுப்பித்தல் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன இலங்கையில் உள்ள கொரியத் தூதுவர் திரு. வூன்ஜின் ஜியோங் அவர்களுடன் 2021 ஜனவரி 04ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடினார். 
 கொரியக் குடியரசில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதிலான கொரியக் குடியரசின் பங்காண்மையைப் பாராட்டிய அதே வேளையில், இலங்கை மற்றும் கொரியக் குடியரசில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்று நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தொழில்களுக்காக இலங்கையில் இருந்து புதிய பணியாளர்களைப் பெற்றுக் கொள்வதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கொரிய அரசாங்கத்தின் உதவியை வெளிநாட்டு அமைச்சர் கோரினார். 
தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையிலிருந்து கொரியாவிற்கான வேலைவாய்ப்பை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான நோக்கத்துடன் கொரிய அதிகாரிகளுடன் இணைந்து, சுகாதார மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார். 
கொரியக் குடியரசின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கை ஊழியர்கள் பெரும் பங்களிப்புக்களை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய தூதுவர் ஜியோங், சவால்களை சமாளிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்காக தனது முழுமையான ஒத்துழைப்பை வெளிப்படுத்தினார். 
 இந்தக் கலந்துரையாடல்களின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரியங்கர ஜயரத்ன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் திரு. கமல் ரத்வத்த, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல், மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

வெளிநாட்டு அமைச்சு.
 கொழும்பு. 
 2021 ஜனவரி 08.

(அரசாங்க தகவல் திணைக்களம் )
மீள ஆரம்பமாகும் கொரியா வேலைவாய்ப்புக்கள்.. மீள ஆரம்பமாகும் கொரியா வேலைவாய்ப்புக்கள்.. Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா: பாராளுமன்றம் மூடப்படுமா?

January 08, 2021

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த வகையில் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் இவராவார். கடந்த 4 நாட்களாக சுகவீனமுற்றிருந்த தயாசிறி ஜயசேகர 
PCR செய்து பார்த்தபொழுது நேற்றிரவு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 
அவர் தற்போது ஹிக்கடுவை, ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதேவேளை கடந்த சில நாட்களாக நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் தான் கலந்து கொள்ளவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா: பாராளுமன்றம் மூடப்படுமா? அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா: பாராளுமன்றம் மூடப்படுமா? Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

Study Programmes in Economics (University of Colombo)

January 08, 2021

Study Programmes in Economics (University of Colombo) 
Closing date: 31-01-2021. 
See the details below.
Source : 03-01-2021 Sunday Observer.

Study Programmes in Economics (University of Colombo) Study Programmes in Economics (University of Colombo) Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

இடிந்து வீழ்ந்தது தலதா மாளிகை மதில்...

January 08, 2021

நேற்று முன்தினம் பெய்த கடும் மழையால் கண்டி தலதா மாளிகை வளாகத்தில், தலதா மாளிகைக்கு அருகிலுள்ள ஶ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பாதுகாப்பு மதிலின் சுமார் 100 மீட்டர் பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. 
இந்த விடயம் தொடர்பாக 
தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடிந்து வீழ்ந்தது தலதா மாளிகை மதில்... இடிந்து வீழ்ந்தது தலதா மாளிகை மதில்... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படையணி

January 08, 2021

இலங்கை ராணுவத்தால் புதிய படையணி ஒன்று நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
விவசாயம் மற்றும் கால்நடைவள படையணியே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 இந்த புதிய படையணியை ராணுவ தலைமையகத்தில் ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆரம்பித்துவைத்தார். பாவனையின்றி இருக்கும் நிலத்தினை 
பயன்படுத்தி பல்வேறு பயிர்ச்செய்கை இந்த படையணி மூலம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி குறித்த நிகழ்வில் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படையணி இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படையணி Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதை பொருள்

January 08, 2021

எக்ஸ்டசி (Ecstasy) வகையிலான போதை வில்லைகளை இலங்கை சுங்கம் முதன்முறையாக கைப்பற்றியுள்ளது. பெல்ஜியத்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட 135 மில்லியன் ரூபா பெறுமதியான 
போதை வில்லைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. 
மத்திய தபால் பரிமாற்றகத்தில் இடம்பெற்ற சோதனையின் போது விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொதியில் இருந்து இந்த போதை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 18,000 போதை வில்லைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதை பொருள் இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதை பொருள் Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான காரணம் வெளியானது...

January 08, 2021

இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை பரவியதற்கான பிரதான காரணம் கடந்த வருடம் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் நாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் விமானப் பணியாளர்களே என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
குறித்த விமானப் பணியாளர்கள் சீதுவையில் அமைந்துள்ள 
ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் அவர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் வௌியிலிருந்தும் ஆட்கள் பங்கேற்றிருந்ததாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான காரணம் வெளியானது... இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான காரணம் வெளியானது... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்...

January 08, 2021

இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (e-Land Registry system) கொழும்பில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
தற்போது மூன்று அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அடுத்த 06 மாதங்களில் 
அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது. 
 இந்த ஆண்டு இறுதிக்குள் 45 நில பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறைமையை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை:

January 07, 2021

கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடி நகரில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 
இதற்குக் காரணம் முடக்க நிலையினை முறையாக மக்கள் பின்பற்றாமையேயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 எனவே இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று இரவு முதல் மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவையாவன,
  • அனுமதியின்றி வீதியில் நடமாடுபவர்கள், வீட்டுக்கு வெளியே வருகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்த போலீசாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  • மற்றும் அனுமதியின்றி வாகனங்களில் சென்றால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும். 
  • அனுமதியின்றி கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 
  • இன்று இரவிலிருந்து முழுமையான ராணுவ பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்படும். 
போன்ற கடுமையான நடவடிக்கைகள் அங்கு  அமுலாகின்றன. 
தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 07, 2021

24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 24-12-2020 (In two languages) 
இதில், 
போட்டிப் பரீட்சை, கற்கை நெறிகள் உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா?

January 07, 2021

2020 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் வாக்காளர் ஒருவராக பதிவு செய்த நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத் தளத்தில் பரீட்சித்துக்கொள்ளலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.


தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது?

January 07, 2021

சஜித் பிரேமதாஸ, மாணவர்களுக்கு புதுவருடத்திற்கான சீருடைத் துணி இன்னமும் வழங்கப்படவில்லை என நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் G.L. பீரிஸ், 
சீருடைத் துணி வழங்கும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலைகளை தொடங்காமல், சீருடையை விநியோகிப்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல. பாடசாலை தொடங்கியதும் விநியோகிக்கப்படும் என்றார்.
பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது? பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது? Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு:

January 07, 2021

2020ம் வருடத்தின் இறுதிப் 10 மாதங்களில் உலகளாவிய ரீதியில் 600 ற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் Covid-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் 'பத்திரிகைச் சின்னம்' என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 

பெரு நாட்டில் 93, பிரேசிலில் 55, இந்தியாவில் 53, 
மெக்சிக்கோவில் 45, ஈக்குவடோரில் 42, பங்களாதேஷில் 41 ஊடகவியலாளர்களும் இவ்வாறு கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
59 நாடுகளை மையப்படுத்தி மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5
Powered by Blogger.