காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்...

January 08, 2021

இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (e-Land Registry system) கொழும்பில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
தற்போது மூன்று அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அடுத்த 06 மாதங்களில் 
அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது. 
 இந்த ஆண்டு இறுதிக்குள் 45 நில பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறைமையை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை:

January 07, 2021

கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடி நகரில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 
இதற்குக் காரணம் முடக்க நிலையினை முறையாக மக்கள் பின்பற்றாமையேயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 எனவே இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று இரவு முதல் மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவையாவன,
  • அனுமதியின்றி வீதியில் நடமாடுபவர்கள், வீட்டுக்கு வெளியே வருகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்த போலீசாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  • மற்றும் அனுமதியின்றி வாகனங்களில் சென்றால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும். 
  • அனுமதியின்றி கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 
  • இன்று இரவிலிருந்து முழுமையான ராணுவ பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்படும். 
போன்ற கடுமையான நடவடிக்கைகள் அங்கு  அமுலாகின்றன. 
தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 07, 2021

24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 24-12-2020 (In two languages) 
இதில், 
போட்டிப் பரீட்சை, கற்கை நெறிகள் உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா?

January 07, 2021

2020 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் வாக்காளர் ஒருவராக பதிவு செய்த நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத் தளத்தில் பரீட்சித்துக்கொள்ளலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.


தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது?

January 07, 2021

சஜித் பிரேமதாஸ, மாணவர்களுக்கு புதுவருடத்திற்கான சீருடைத் துணி இன்னமும் வழங்கப்படவில்லை என நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் G.L. பீரிஸ், 
சீருடைத் துணி வழங்கும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலைகளை தொடங்காமல், சீருடையை விநியோகிப்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல. பாடசாலை தொடங்கியதும் விநியோகிக்கப்படும் என்றார்.
பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது? பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது? Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு:

January 07, 2021

2020ம் வருடத்தின் இறுதிப் 10 மாதங்களில் உலகளாவிய ரீதியில் 600 ற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் Covid-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் 'பத்திரிகைச் சின்னம்' என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 

பெரு நாட்டில் 93, பிரேசிலில் 55, இந்தியாவில் 53, 
மெக்சிக்கோவில் 45, ஈக்குவடோரில் 42, பங்களாதேஷில் 41 ஊடகவியலாளர்களும் இவ்வாறு கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
59 நாடுகளை மையப்படுத்தி மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

புதிய கொரோனா வைரஸ்: முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை:

January 07, 2021

கொரோனவைரஸின் மரபணு மாறி புதிய வகை கொரோனா வைரஸாக உருவெடுத்து இங்கிலாந்தில் பரவத்தொடங்கியது. 
அது தற்போது ஏனைய நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. 
 இந்த நிலையில் இந்திய விஞ்ஞானிகள் உலகில் முதன் முறையாக 
இந்த புதிய வகை கொரோனவைரஸ் மரபணுவை தனியாக பிரித்து எடுத்து சாதனை படைத்துள்ளனர். 
 பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து புதிய வகை வைரஸின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய கொரோனா வைரஸ்: முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை: புதிய கொரோனா வைரஸ்:  முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura)

January 07, 2021

Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura) 
Closing date: 31-01-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.
Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura) Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura) Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா

January 07, 2021

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு கொரோனா வைரஸின் ஆரம்பம் குறித்த விசாரணைகளுக்காக சீனாவின் வூஹானிற்கு செல்ல முற்பட்டபோது 
சீனா அதற்கு அனுமதி வழங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் எட்ஹனொம் ஹெப்பிரயேசிஸ் தெரிவித்துள்ளார். 
 இது தொடர்பில் தான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சீன உயர் மட்டத்தை தொடர்பு கொண்டதாகவும் சீனாவிற்கு சர்வதேச குழுக்களை அனுப்புவதே தனது முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா  Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

பாடசாலைகளை ஆரம்பித்தல்: மூன்று தரப்பினர்க்கு வழங்கப்பட்ட தனித்தனி ஆலோசனைகள் (முழு விபரங்களுடன்)

January 07, 2021

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுகாதார ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தல், ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் சுகாதார ரீதியிலான பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பாடசாலை சுகாதாரக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். 
 கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலின் கீழ் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஆலோசனைக் கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. 

அதிபர்களுக்கான ஆலோசனைகள் :- 
 ● 2021 ஜனவரி மாதம் 06, 07, 08, 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் பங்களிப்புடன் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் 
 ● பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் பாடசாலை சமூகத்தினரின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று தேவையான மாற்றங்களை செய்தல் 
 ● COVID – 19 தொற்றுநோய் நிலைமையின் கீழ் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பில் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் 
 ● கொரோனா பரவலை தடுப்பதற்காக பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களை தயார்ப்படுத்தல் தொடர்பான 15/2020 இலக்க சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்தல் 
 ● பாடசாலையை ஆரம்பித்ததன் பின்னர் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்லல் 
 ● பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களை இனிதாக வரவேற்பதனூடாக சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வலிமையை ஏற்படுத்தல் 
 ● மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரும்போது, பாடசாலைக்குள் அல்லது பாடசாலையிலிருந்து வௌிச்செல்லும் வழியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு கடினமாக இருப்பின் சமூக இடைவௌியை பேணக்கூடிய சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அகற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல் 
 ● பாடசாலைக்குள் நுழையும் போது சகல மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் மீண்டும் வகுப்பறைகளுக்குள் உடல் வெப்பநிலையை பரீட்சித்தல் 
 ● மாணவர்கள் பாடசாலைக்குள் நுழையும் போது இரு கைகளையும் கழுவுவதை கட்டாயமாக்குதல் மற்றும் அது திறன்பட முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை தினமும் மேற்பார்வை செய்தல் 
 ● மாணவர்கள் இடையே சமூக இடைவெளியை பேணுதல் 
 ● மாணவர்கள் கூட்டமாக சேர்வதை தடுப்பதற்கு வகுப்பு மட்டத்தில் தேவையான நேரத்தில் இடைவேளை வழங்குதல் 
 ● வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவு நீர் மற்றும் ஏனைய உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்தல் 
 ● ஒருவருக்கொருவர் தொடுகையில் ஈடுபடும் வகையிலான விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் மற்றும் உடற்பயிற்சி செயற்பாடுகளை சமூக இடைவௌியுடன் நடத்துதல் 
 ● அவசர நிலைமைகளின் போது தொடர்புகொள்வதற்கு தேலையான தொலைபேசி இலக்கம் மற்றும் தகவல்களை சேகரித்து அலுவலகத்தில் காட்சிப்படுத்தல் மற்றும் அது தொடர்பில் பணியாளர்களுக்கு அறியப்படுத்தல் 
 ● திடீரென பாடசாலையில் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில் அவரை நோயாளர் அறைக்கு அனுப்பி உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகரிடம் ஆலோசனை பெற்று அதனை செயற்படுத்தல் 
 ● அதிபரின் தலைமையில் பாடசாலையின் சுகாதார மேம்பாட்டுக் குழுவை முனைப்புடன் பேணுவதனூடாக கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பகிர்ந்தளித்தல் 
 ● பாடசாலையை சுகாதார ரீதியில் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தின் முன்னிலையில் அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதை உறுதி செய்தல் 
 ● பாடசாலையை ஆரம்பிப்பதற்கு முன்னரான முன்னாயத்தங்கள் மற்றும் ஆரம்பித்ததன் பின்னரான ஆரோக்கிய நிலைமையை பேணுவதற்கான மேற்பார்வை ஆவணமொன்றை பேணுதல் 
 ● மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் 
 ● காய்ச்சல், சுவாச நோய்க்கான அறிகுறிகளுடைய மாணவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள், சுகாதார அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரையில் பாடசாலைக்கு சமூகமளிக்காதிருக்குமாறு குறித்த மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தல் 
 ● கொரோனா வைரஸ் தொடர்பான ஏதேனும் ஒரு நிலைமை காரணமாக வீட்டிலிருக்க நிர்ப்பந்திக்கப்படும் மாணவர்களின் அன்றாட கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதிருக்க உதவிகளை வழங்குதல். 

 பெற்றோருக்கான ஆலோசனைகள் : – 
 ★ இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல் 
 ★ வீட்டில் வேறு யாரேனும் அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல் 
 ★ வீட்டிலுள்ள அங்கத்தவர் ஒருவர் அல்லது பிள்ளைக்கு PCR பரிசோதனை, Rapid Antigen பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அவ் அறிக்கையின் படி சுகாதார அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரை பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல் 
 ★ தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைக்கு பிள்ளையை அனுப்பாதிருத்தல் 
 ★ தமது பிள்ளை பயன்படுத்தும் உபகரணங்கள் (புத்தகப்பை, தண்ணீர் போத்தல், உணவுப் பெட்டி, புத்தகங்கள்) ஆகியவற்றை சுத்தப்படுத்தல் அல்லது வெயிலில் இட்டு உலர்த்துதல் 
 ★ தினந்தோறும் பிள்ளையின் ஆடைகள் மற்றும் பாதணிகளை சுத்தப்படுத்தல் 
 ★ பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியதும் பிள்ளையின் கைகளை கழுவுதல் மற்றும் பிள்ளையை நீராட்டி சுத்தப்படுத்தல் 
 ★ பாடசாலை விட்டு வந்ததும் காலணிகளை வீட்டிற்கு வௌியில் கழற்றுதல் 
 ★ பாவித்த முகக்கவசங்களை எரித்தல் 
 ★ தும்மல் ஏற்படும்போது பயன்படுத்திய திசு கடதாசிகளை மூடிய பாத்திரம் ஒன்றில் சேகரித்து எரித்தல் 
 ★ வீட்டில் சமைத்த உணவுகளை மாத்திரம் பிள்ளைக்கு கொடுப்பதோடு சகல சந்தர்ப்பங்களிலும் பிள்ளை பயன்படுத்தும் பொருட்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்த அறிவுறுத்தல் வழங்குதல் 
 ★ பாடசாலை நிறைவடைந்ததும் பிள்ளையை வீட்டிற்கு வரும்படி அறிவுறுத்தல் வழங்குதல் அல்லது வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல் 
 ★ பாடசாலைக்கு வரும்போது மற்றும் வீடுகளுக்கு செல்லும்போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொது போக்குவரத்து சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்குதல் 
 ★ தமது பிரதேசத்தில் சுகாதாரம் தொடர்பான ஏனேும் சிக்கல் இருந்தால் அது தொடர்பாக பாடசாலை அதிபருக்கு அறிவிப்பதன் மூலம் பாடசாலைக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைக்க உதவுதல். 

 மாணவர்களுக்கான ஆலோசனைகள் :- 
 ★ பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்கும் போது சவர்க்காரம் இட்டு கைகளை கழுவுதல் மற்றும் பாதணிகளை கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்துதல் 
 ★ சமூக இடைவௌியை பேணுதல் 
 ★ புத்தகங்கள், பேனைகள் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்த்தல் 
 ★ பாடசாலை நேரத்திற்குள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் மற்றும் மேலதிக முகக்கவசம் ஒன்றை புத்தகப்பையில் வைத்திருத்தல் 
 ★ கிருமித்தொற்று நீக்கல் திரவங்களை (Sanitizer) கொண்டுவருதல் மற்றும் தேவையானபோது அவற்றை பாவித்தல் 
 ★ பாடசாலையில் அதிக நேரம் முகக்கவசத்தை அணிய முடியாத, சிரமம் மிக்க மாணவர்கள் முகக்கேடயம் (Face Shield) பாவித்தல் 
 ★ உணவு அருந்தும் போது அல்லது வேறு எந்த சந்தர்ப்பங்களிலும் தற்காலிகமாக முகக்கவசத்தை அகற்றி சுத்தமான பையொன்றில் வைத்தல் அல்லது அணிந்திருக்கும் சீருடையில் வைத்திருத்தல் 
 ★ முகக்கவசங்களை ஒருபோதும் பொது இடங்களில் வைக்காதிருத்தல் 
 ★ இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் முழங்கையால் வாய் மற்றும் மூக்கை மறைத்துக்கொள்ளல் அல்லது திசு கடதாசியை பயன்படுத்தல் மற்றும் அவற்றை உரிய முறையில் அகற்றுதல் 
 ★ உணவு அருந்துவதற்காக அல்லது வேறு தேவைகளுக்காக தற்காலிகமாக முகக்கவசங்களை அகற்றி பின் மீண்டும் அவற்றை அணியும் போது, கைகளை நன்றாக கழுவியிருத்தல் வேண்டும் 
 ★ பிற நபர்களின் முகக்கவசங்களை ஒருபோதும் பயன்படாதிருத்தல் 
★ வகுப்பறையை விட்டு வௌியேறி பின் மீண்டும் வகுப்பறைக்குள் வரும்போது எந்தவொரு மேற்பரப்பையும் தொட்டதன் பின்னர் கைகளை கழுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல் 
 ★ உணவு மற்றும் தண்ணீர் போத்தல்களை பரிமாறுவதை தவிர்த்தல் 
★ பாடசாலைக்குள் மற்றும் வௌியில் குழுக்களாக சேர்ந்திருப்பதை தவிர்த்தல் 
 ★ பாடசாலை நிறைவடைந்தவுடன் வீடுகளுக்கு செல்லுதல் வேண்டும் 
 ★ பாடசாலைக்கு வரும்போமு மற்றும் வீடுகளுக்கு செல்லும் போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொது போக்குவரத்து சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தல் 
 ★ தங்களுக்கு ஏதேனும் நோய், காய்ச்சல், சளி போன்ற நிலைகள் காணப்படின் அந்நிலை குணமாகும் வரை பாடசாலைக்கு செல்வதை தவிர்த்தல் 
 ★ தமது வீட்டில் யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொரோனா நோயாளியுடன் தொடர்புகளை பேணியிருந்தால் சுகாதார அறிவுறுத்தல்களின் படி மறு அறிவிப்பு வரும்வரை பாடசாலைக்கு செல்லாதிருத்தல் 
 ★ பாடசாலையில் அல்லது அதற்கு வெளியில் தேவையற்ற விதத்தில் எப்பொருளையும் தொடுவதை தவிர்த்தல்.
Source: newsfirst.lk
பாடசாலைகளை ஆரம்பித்தல்: மூன்று தரப்பினர்க்கு வழங்கப்பட்ட தனித்தனி ஆலோசனைகள் (முழு விபரங்களுடன்) பாடசாலைகளை ஆரம்பித்தல்: மூன்று தரப்பினர்க்கு வழங்கப்பட்ட தனித்தனி ஆலோசனைகள் (முழு விபரங்களுடன்) Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

நாளை முதல் ரயில் பொதி சேவை

January 06, 2021

நாளை (07) முதல் மீண்டும் ரயில் பொதிசேவை ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 
நாளை பிரீமா லங்கா தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை ரயில் மூலம் கொண்டுசெல்லும் 
சேவையும் ஆரம்பமாகிறது. இதற்காக சீதுவ பிரீமா லங்கா (prima Lanka) நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் இது தொடர்பான வைபவம் ஒன்றும் இடம்பெறவுள்ளது. 
இதேவேளை ரயில் சேவைகள் நடத்தப்படும் பிரதேசங்களுக்கு மாத்திரம் பொதிகளை அனுப்பி வைக்கலாம். பழுதடையக்கூடிய பழ வகைகள், காய்கறிகள் போன்றவற்றை ரயில் நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் கஸூன் சாமர தெரிவித்தார்.
நாளை முதல் ரயில் பொதி சேவை நாளை முதல் ரயில் பொதி சேவை Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா?

January 06, 2021

சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கிடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 
வைரஸ் தொற்று அபாயம் அதிகமுள்ள மேல் மாகாணம் தவிர ஏனைய மாகாணங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிக்கலாம். 
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களை எக்காரணம் கொண்டும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டாம். 
அத்துடன் நோய் அறிகுறிகளுடைய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள எந்தவொரு பிள்ளைகளையும் விளையாட்டுப் போட்டிகளுக்கு உட்படுத்தக்கூடாது. 
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் தேவைக்கேற்ப முழுமைப்படுத்தப்பட்டு முறையாக பாடசாலை விளையாட்டுப் போட்டி ஆரம்பிப்பதிலுள்ள முக்கியத்துவம்.
போன்ற விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டன.
பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா? பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா?  Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு!

January 06, 2021

முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக நேற்று முதல் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டமும் பொலிசாரினால் ஆரம்பிக்கப்பட்டது. 
உரிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமை காரணமாகவே இந்த புதிய நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. 
 அதன்படி நேற்று முகக் கவசம் அணியாத சுமார் 1060 பேரிடம் 
செய்யப்பட்ட Rapid Antigen மற்றும் PCR பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5
Powered by Blogger.