150 சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் சேவையில் கிடைக்கும் வாய்ப்பு...
irumbuthirai
January 11, 2021
பொலிஸ் திணைக்களத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சட்ட சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பொலிஸ் திணைக்களத்திற்கு 150 வழக்கறிஞர்களை நியமிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார.
இன்று நீதி அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் போலீஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் உரிய நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு
அதன்பின்னர் நியமனம் வழங்கப்படும்.
ஆட்சேர்ப்புக்குப் பிறகு, அவர்கள் நாட்டின் 09 மாகாணங்களுக்கு இணைக்கப்படுவார்கள், மேலும் அவர்களுக்கு சட்டம் மற்றும் பொலிஸ் துறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களமும் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருப்பது விஷேட தகைமையாக கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
150 சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் சேவையில் கிடைக்கும் வாய்ப்பு...
Reviewed by irumbuthirai
on
January 11, 2021
Rating: