கொரோனா உருவானது எப்படி? சீனா வழங்கிய அனுமதி...
irumbuthirai
January 12, 2021
2020 மே மாதம், உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார சபை கூட்டத்தில், கொரோனா உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக WHO, 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த விசாரணைகளை சீனாவிற்குச் சென்று நடத்த சீனா அனுமதி தர மறுத்தது. இதற்கு WHO தலைவர் உட்பட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், WHO நிபுணர் குழு வருகைக்கு சீனா நேற்று (11) அனுமதி அளித்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே, எதிர்வரும்
14 ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு சென்று நேரடி விசாரணை நடத்தவுள்ளது. அக்குழு உகான் நகருக்கு செல்லும்போது, சீன நிபுணர்களும் உடன் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா உருவானது எப்படி? சீனா வழங்கிய அனுமதி...
Reviewed by irumbuthirai
on
January 12, 2021
Rating:
