சனிக்கிழமைகளிலும் பாடசாலையைக் கோரும் பெற்றோர்..
irumbuthirai
January 12, 2021
பாடசாலைக்கு மாணவர்களை சனிக்கிழமையிலும் அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முதலாம் தவணைக்காக பாடசாலைகள் நேற்றைய தினம் (11) ஆரம்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா சூழ்நிலைக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வகையில் மிகுந்த சவாலுக்கு மத்தியில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான தீர்மானம் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது அல்ல, மிகுந்த அவதானத்துடன் நாம் தயாரித்த திட்டத்திற்கு அமையவே பாடசாலைகள் திறக்கப்பட்டன.
இதேவேளை பாடசாலைக்கு மாணவர்களை சனிக்கிழமையிலும் அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர்.
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பிற்பற்றி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெற்றோருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது என மேலும் தெரிவித்தார்.
சனிக்கிழமைகளிலும் பாடசாலையைக் கோரும் பெற்றோர்..
Reviewed by irumbuthirai
on
January 12, 2021
Rating:
