தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை இலங்கையில்...

January 15, 2021

ஹொரண பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. 
இது சுமார் 
155 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை இலங்கையில்... தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை இலங்கையில்... Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5

கொரோனா: இலங்கையில் சமூகத் தொற்றா?

January 15, 2021

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன, கொவிட் 19 தொற்று இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை என தெரிவித்துள்ளார். 
இதேவேளை, ஏராளமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட 
மேல் மாகாணத்தினுள் வைரஸ் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொரோனா: இலங்கையில் சமூகத் தொற்றா? கொரோனா: இலங்கையில் சமூகத் தொற்றா? Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட GMOA தலைவர்..

January 14, 2021

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தற்போது தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் இடம்பெற்ற 
விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளார். தொற்றாளருடன் அனுருத்த பாதெணிய நெருங்கிப் பழகியவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட GMOA தலைவர்.. தனிமைப்படுத்தப்பட்ட GMOA தலைவர்.. Reviewed by irumbuthirai on January 14, 2021 Rating: 5

இன்றைய தினமும் இலங்கை வந்தடைந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகள்...

January 12, 2021

இன்று பி.ப. 2.40 அளவில் உக்ரைனுக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் 165 உக்ரைன் பிரஜைகள் மத்தளை விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார். 
ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்த 
உக்ரேன் சுற்றுலாப் பயணிகள் குழு இதே விமானத்தில் நாடு திரும்பவுள்ளனர். 
1004 உக்ரைன் பிரஜைகள் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினமும் இலங்கை வந்தடைந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகள்... இன்றைய தினமும் இலங்கை வந்தடைந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகள்... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

கொரோனா உருவானது எப்படி? சீனா வழங்கிய அனுமதி...

January 12, 2021

2020 மே மாதம், உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார சபை கூட்டத்தில், கொரோனா உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதற்காக WHO, 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த விசாரணைகளை சீனாவிற்குச் சென்று நடத்த சீனா அனுமதி தர மறுத்தது. இதற்கு WHO தலைவர் உட்பட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. 
இந்நிலையில், WHO நிபுணர் குழு வருகைக்கு சீனா நேற்று (11) அனுமதி அளித்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, எதிர்வரும் 
14 ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு சென்று நேரடி விசாரணை நடத்தவுள்ளது. அக்குழு உகான் நகருக்கு செல்லும்போது, சீன நிபுணர்களும் உடன் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா உருவானது எப்படி? சீனா வழங்கிய அனுமதி... கொரோனா உருவானது எப்படி?  சீனா வழங்கிய அனுமதி... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில:

January 12, 2021

அல்குர்ஆனை தான் 02 முறை முழுமையாக வாசித்ததாகவும் எந்த ஒரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வியையும் அதற்கு அமைச்சர் வழங்கிய பதிலையும் இங்கு தருகிறோம்... 
ஊடகவியலாளர்:- அமைச்சராகிய நீங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் அல்குர்ஆன் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை ஆய்வு செய்தா முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தீர்கள்? இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், 
அல்குர்ஆனை முழுமையாக படித்த பின்னே நான் கருத்து தெரிவித்தேன். அல்குர்ஆனை நான் 2 முறை வாசித்தேன். அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடவில்லை. அல்குர்ஆன்; தொடர்பில் நான் விசேட நிபுணர் அல்ல. விசேட நிபுணர் யாராயினும் நான் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். 
குர்ஆனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி நான் இதனை தெரிவித்தேன். குர்ஆனில் இந்த சடல அடக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டிருக்குமாயின், அது குறித்து விளக்கம் அளிக்குமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால் இது குறித்து எவரும் பதிலளிக்கவில்லை. 
சிலர் சமூக ஊடகங்கள் மூலமாக குர்ஆன் குறித்து தகவல்கள் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவற்றில் எதிலும் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து குறிப்பிடப்படவில்லை. அதேவேளை தகனம் செய்வது தடைசெய்யப்பட்டிருப்பதாக எந்த இடத்திலும் செல்லப்பட்டும் இல்லை. 
நான் அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவிக்கும் பேச்சாளராகவே வந்துள்ளேன். எனது தனிப்பட்ட, கட்சி தொடர்பான கேள்விகள் கேட்க விரும்பினால் அவை தொடர்பில் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டிலே வினவ வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
(அரசாங்க தகவல் திணைக்களம்)
அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில: அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில: Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

வேகமாக அதிகரிக்கும் Telegram பாவனையாளர்கள் ... வெளியான தகவல்...

January 12, 2021

உலகளாவிய ரீதியில் டெலிகிராம் (Telegram) செயலியை பயன்படுத்தும் பாவனையாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அந்த செயலி உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. 
இன்றைய தினத்தில் உள்ள தரவுகளின்படி அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 
500 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் புதிதாக 25 மில்லியன் பாவனையாளர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 அண்மையில் வாட்ஸ் அப் செயலி வெளியிட்ட புதிய நிபந்தனைகள் காரணமாக பாவனையாளர்கள் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி பல்வேறு தளங்களுக்கு வழங்கப்படலாம் என்று பரவலாக பேசப்படும் இந்த நிலையில் Telegram பாவனையாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வேகமாக அதிகரிக்கும் Telegram பாவனையாளர்கள் ... வெளியான தகவல்... வேகமாக அதிகரிக்கும் Telegram பாவனையாளர்கள் ... வெளியான தகவல்... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

முதன்முறையாக கொரில்லா குரங்குகளுக்கும் கொரோனா...

January 12, 2021

இரண்டு கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க, கலிஃபோர்னியாவின் சான்டிகோ விலங்கியல் பூங்காவில் உள்ள 
02 கொரில்லாக்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்த பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கடந்த வாரம் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாத பூங்கா ஊழியர்களிடமிருந்து கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. 
தற்போது அங்கு குரங்குகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவிற்கு பொது மக்கள் செல்ல கடந்த டிசம்பர் 6ஆம் திகதி தடை விதிக்கப்பட்டது. 
கொரில்லா குரங்குகளுக்கு முதல்முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக கொரில்லா குரங்குகளுக்கும் கொரோனா... முதன்முறையாக கொரில்லா குரங்குகளுக்கும் கொரோனா... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

சனிக்கிழமைகளிலும் பாடசாலையைக் கோரும் பெற்றோர்..

January 12, 2021

பாடசாலைக்கு மாணவர்களை சனிக்கிழமையிலும் அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
முதலாம் தவணைக்காக பாடசாலைகள் நேற்றைய தினம் (11) ஆரம்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் மேலும் தெரிவிக்கையில், 
 கொரோனா சூழ்நிலைக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வகையில் மிகுந்த சவாலுக்கு மத்தியில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான தீர்மானம் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது அல்ல, மிகுந்த அவதானத்துடன் நாம் தயாரித்த திட்டத்திற்கு அமையவே பாடசாலைகள் திறக்கப்பட்டன.
இதேவேளை பாடசாலைக்கு மாணவர்களை சனிக்கிழமையிலும் அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். 
 சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பிற்பற்றி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெற்றோருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது என மேலும் தெரிவித்தார்.
சனிக்கிழமைகளிலும் பாடசாலையைக் கோரும் பெற்றோர்.. சனிக்கிழமைகளிலும் பாடசாலையைக் கோரும் பெற்றோர்.. Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

4 வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பெற்றார் ரஞ்சன் ராமநாயக்க...

January 12, 2021

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது. 
 அதன்படி, ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 
குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாகவும், அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளது. 
குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பினை வழங்கிய மூவரடங்கிய நீதிபதி குழு அறிவித்துள்ளது. 
2017 -08 - 21 ஆம் திகதி அலரி மாளிகையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து 
தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இந்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் அநேகமானோர் மோசடியாளர்கள் என தெரிவித்திருந்தார். 
அதன்படி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கொன்றை தொடர்ந்து உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேராவினால் முறைப்பாட்டின் ஊடாக உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பெற்றார் ரஞ்சன் ராமநாயக்க... 4 வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பெற்றார் ரஞ்சன் ராமநாயக்க... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

முடிவுக்கு வந்தது யாழ் பல்கலை உண்ணாவிரதம்: நடந்தது என்ன?

January 12, 2021

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு இடித்தழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று இரவு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு சனிக்கிழமை காலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டங்களையும் ஆரம்பித்தனர். 
 இதற்கு தமிழக முதல்வர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், வெளிநாடுகளின் பிரதிநிதிகள் பலரும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தி வந்ததுடன், புலம்பெயர் நாடுகளில் உள்ளோரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 
இதேவேளை நேற்று(11) திங்கட்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் 
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் தரப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது பூரண ஆதரவை தெரிவித்தனர். 
 இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சி. ஶ்ரீ சற்குணராசா மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியைக் கட்டுவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார். 
 அதன்படி காலை 7.00 மணியளவில் மாணவர்களுடன் பல்கலைக்கழத்தினுள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் (STF) தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி துணைவேந்தர் மாணவர்களை அழைத்துக்கொண்டு வளாகத்தினுள் சென்று ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். 
 பின்னர் நினைவு தூபி இருந்த இடத்திற்கு மாணவர்களுடன் 
துணைவேந்தர் சென்ற போது அங்கு வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடுத்து நிறுத்தினார். அதன் போது துணைவேந்தர் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம், "நாம் தற்போது எந்த கட்டுமான பணிகளிலும் ஈடுபடவில்லை. தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்தில் கல் நடப் போகிறோம். என்னுடைய மாணவர்கள் 03 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எம்மை தடுக்காதீர்கள் என கூறினார். 
 அதனை அடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி அளித்தார். நினைவிடத்திற்கு மாணவர்களுடன் சென்ற துணைவேந்தர், நினைவு கல்லினை நாட்டினார். 
 பின்னர் மாணவர்கள் பல்கலை வளாகத்தினுள் இருந்து வெளியேற முற்பட்ட போது . பல்கலை கழகத்தினுள் இருந்த பொலிஸார் நினைவிடத்திற்கு சென்று வந்த மாணவர்களின் விபரங்களை பதிய முற்பட்டனர். அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, தாம் கொரோனா நோய் தொற்று காரணமாக தான் பதிவுகளை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். 
ஆனால் தமது விபரங்களை பல்கலை வளாகத்தினுள் நின்று பொலிஸார் பதிவதனை மாணவர்கள் எதிர்த்தனர். அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த துணைவேந்தர் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மாணவர்களை வெளியேற விடுமாறு பணித்தனர். அதனை அடுத்து மாணவர்களை வெளியற பொலிஸார் அனுமதித்தனர். 
உண்ணாவிரத இடத்திற்கு வந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் கஞ்சி வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.
Source: தினகரன்.
முடிவுக்கு வந்தது யாழ் பல்கலை உண்ணாவிரதம்: நடந்தது என்ன? முடிவுக்கு வந்தது யாழ் பல்கலை உண்ணாவிரதம்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்...

January 11, 2021

இம்மாதம் 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் மு.ப. 10 மணி முதல் பி.ப. 3 மணிவரை பாராளுமன்றத்தில் PCR பரிசோதனையை செய்ய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் 
பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... Reviewed by irumbuthirai on January 11, 2021 Rating: 5

அமைச்சர் வாசுதேவவின் தொடர்பில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்..

January 11, 2021

அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ரஹூப் ஹக்கீமைத் தொடர்ந்து இன்றைய தினம் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 இந்நிலையில் அமைச்சர் வாசுதேவவுடன் முதல் நிலை தொடர்பில் இருந்த 
10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். 
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தின் நான்கு நாட்களும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை இனங்காணப்பட்ட 10 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர.
முதலில் ஆளும்கட்சி பின்னர் எதிர்க்கட்சி அதன் பின்னர் ஆளும் கட்சி என கொரோனா தொற்று தொடர்கிறது.
அமைச்சர் வாசுதேவவின் தொடர்பில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்.. அமைச்சர் வாசுதேவவின் தொடர்பில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்.. Reviewed by irumbuthirai on January 11, 2021 Rating: 5
Powered by Blogger.