ட்ரம்ப்பிற்கு எதிராக YouTube இன் நடவடிக்கை
irumbuthirai
January 15, 2021
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிபெற்றதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் போது பாராளுமன்றத்தின் முன்பு குவிந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் சிலர் இறந்தனர்.
இந்த கலவரத்திற்கு காரணம் Trump வெளியிட்ட Twitter பதிவு என கூறப்பட்டது.
இதனால் அவரது Twitter பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாக முடக்கப்பட்டது.
Facebook, Instagram ஆகியனவும் முடக்கப்பட்டன. இதன் தொடராக YouTube ம் தடைவிதித்துள்ளது.
ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் வகையிலும் விதிகளுக்கு புறம்பாக இருந்ததாகவும் அதனை YouTube நிறுவனம் நீக்கியுள்ளது.
அதில் புதிய காணொளிகள்
தரவேற்றம் செய்யப்படுவதையும் நேரலை காணொளிகளையும் YouTube தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பிற்கு எதிராக YouTube இன் நடவடிக்கை
Reviewed by irumbuthirai
on
January 15, 2021
Rating: