வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்:

January 17, 2021

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக தமது மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 
இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டவர்களில் 7,727 பேரின் வாக்காளர் பதிவை, அதிகாரிகள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 
இவ்வாறு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு 
பிரதேசத்திலும் தற்போது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, அவர்களது வாக்குகளை மீள அதே கிராமங்களில் பதிய நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்: வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்: Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி..

January 17, 2021

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 
 இதனால் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாமல் போயிருந்தது. 
இந்தநிலையில் கடந்த 24 மணித்தியாலயங்களில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 02 PCR பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று 
உறுதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. 
இதன் காரணமாக அவரை இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி.. இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி.. Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

அனுருத்த பாதெனியவிற்கு கொரோனாவா? நேற்று வெளியான அறிக்கை

January 17, 2021

GMOA தலைவர் டாக்டர் அனுருத பாதேனியாவின் தனிமைப்படுத்தல் தொடர்பான நிலைமை குறித்து சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனல் பெர்னாண்டோ நேற்று (16) நடைபெற்ற நிகழ்வில் தனது கருத்துக்களை தெரிவித்தார். அதில், 
மக்களை ஆரோக்கியமாக்குவது நாம் நினைப்பதை விட கடினம். அதை செய்யும்போது நிறைய சேறு பூசப்படுகிறது. கடந்த சில நாட்களைப் பார்க்கும்போது. டாக்டர் அனுருத்த பாதேனியா, கொரோனா வைரஸ் பயத்தால் தான் 
ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற கருத்தை பரப்ப முயன்றனர். ஆனால் தற்போது அவரது பி.சி.ஆர் சோதனை முடிவுகள் அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகின்றது என்று தெரிவித்தார். 
 இது குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் நவிந்தா சோய்சா கூறுகையில், "தற்போது புகையிலை மற்றும் மது, போதைப்பொருளை ஒழிக்கும் திட்டத்தில் நாங்கள் மிகவும் தீர்க்கமாக ஈடுபட்டுள்ளோம். இது சில ஊடகத் தலைவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனுருத்த பாதெனியவிற்கு கொரோனாவா? நேற்று வெளியான அறிக்கை அனுருத்த பாதெனியவிற்கு கொரோனாவா? நேற்று வெளியான அறிக்கை Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா: நுகர்வோருக்கும் விற்பனை:

January 16, 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமை ஆராய்ச்சி செய்த போது அதில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
தியான்ஜினில் உள்ள டேசியாடோ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மொத்தம் 4,836 பெட்டிகள் ஐஸ்கிரீம் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 2,089 பெட்டிகள் இதுவரை களஞ்சியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
மீதமுள்ள ஐஸ்கிரீம் பெட்டிகளில், 1,812 மற்ற மாகாணங்களுக்கும் 935 பெட்டிகள் தியான்ஜின் 
சந்தைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 65 நுகர்வோருக்கு விற்கப்பட்டுள்ளன. 
ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையில் மொத்தம் 1,662 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா: நுகர்வோருக்கும் விற்பனை: சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா: நுகர்வோருக்கும் விற்பனை: Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

மேலதிக வகுப்புகளுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்...

January 16, 2021

ஜனவரி 25 ஆம் திகதி தொடக்கம் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார். 
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து 02 வாரங்கள் கடந்தே மேலதிக வகுப்புகளுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
ஏனைய பிரதேசங்களுக்கு முதற்கட்டமாக சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
மேலதிக வகுப்புகளுக்கு அதிகூடிய மாணவர்களின் எண்ணிக்கை நூறாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
இதேவேளை மேலதிக வகுப்புகளுக்காக மாணவர்களும் 
ஆசிரியர்களும் மாவட்டங்களிடையே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த விடயங்கள் தொடர்பாக விசேட சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதுடன், மேலதிக வகுப்புகளை நடத்திச் செல்வதற்கான ஆலோசனைகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புகளுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... மேலதிக வகுப்புகளுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல - GMOA. (அறிக்கை இணைப்பு)

January 16, 2021

நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல மாறாக அச்சமின்றி எதிர்க்கொண்ட குழுவினரே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 
இந்த சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனிய கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய ஒருவராக இனங்காணப்பட்ட சம்பவம் தொடர்பிலான விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக இந்த அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. 
தொற்றாளர்களை அடிக்கடி சந்திக்கும் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வார்ட்டில் உள்ள வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை ஒன்றும் எதிர்பாராத விடயமல்ல எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய குறித்த நபரின் தனிப்பட்ட விபரங்கள் பகிரங்கப்படுத்தக்கூடாது. அது இங்கு மீறப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த அறிக்கையை கீழே காணலாம்.


நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல - GMOA. (அறிக்கை இணைப்பு) நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல - GMOA. (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancies: Provincial Road Development Project

January 16, 2021

Vacancies: Provincial Road Development Project. 
Closing date: 01-02-2021. 
See the details below.

Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: Provincial Road Development Project Vacancies: Provincial Road Development Project Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancies: University of Peradeniya.

January 16, 2021

Vacancies: University of Peradeniya. 
See the details below.

Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: University of Peradeniya. Vacancies: University of Peradeniya. Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancies: University of Sri Jayewardenapura.

January 16, 2021

Vacancies: University of Sri Jayewardenapura. 
Closing date: 02-02-2021 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: University of Sri Jayewardenapura. Vacancies: University of Sri Jayewardenapura. Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancy: University of Visual and Performing Arts

January 16, 2021

Vacancy: University of Visual and Performing Arts. 
Closing date: 29-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancy: University of Visual and Performing Arts Vacancy: University of Visual and Performing Arts Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancy: Industrial Development Board (IDB)

January 16, 2021

Vacancy: Industrial Development Board (IDB) 
Closing date: 25-01-2021. 
See the details below.
Source: 10-01-2021 Sunday Observer.

Vacancy: Industrial Development Board (IDB) Vacancy: Industrial Development Board (IDB) Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

இன்று ஆரம்பிக்கப்பட்ட Park and Ride செயற்படுவது இப்படித்தான்...

January 15, 2021

Park and Ride பஸ் சேவை ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் 15 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஏனைய நேரத்தில் 
25 நிமிடங்களுக்கு ஒரு முறையும் Park and Ride பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. 
இதில், ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிக்க முடியும் என்பதுடன், சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணமும் அறவிடப்படவுள்ளது. 
மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணிப்போருக்கு பாதுகாப்பான பொது போக்குவரத்து பஸ் சேவையை வழங்குதல், 
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தல், 
சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்தல், 
பயணத்திற்கு செலவிடும் நேரத்தைக் குறைத்தல், 
பயணிகளின் மன உளைச்சலைக் குறைத்தல் போன்ற விடயங்கள் இந்தத் திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட Park and Ride செயற்படுவது இப்படித்தான்... இன்று ஆரம்பிக்கப்பட்ட Park and Ride செயற்படுவது இப்படித்தான்... Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை: வெளியானது பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்: (புள்ளிகள் இணைப்பு)

January 15, 2021

கடந்த வருடம் (2020) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்வருடம் (2021) தரம்6 ற்கு பாடசாலைகளை தெரிவு செய்வதற்காக வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. 
இதனை கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத் தளத்தில் பார்வையிடலாம்.  
தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை கீழே தருகிறோம்.


புலமைப்பரிசில் பரீட்சை: வெளியானது பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்: (புள்ளிகள் இணைப்பு) புலமைப்பரிசில் பரீட்சை: வெளியானது பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்: (புள்ளிகள் இணைப்பு) Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5
Powered by Blogger.