தம்மிக்க பாணியை பாராளுமன்றத்தில் வைத்து அருந்திய அமைச்சருக்கு கொரோனா...
irumbuthirai
January 18, 2021
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார ஆகியோரை தொடர்ந்து தற்போது இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தம்முடன் தொடர்புகளை பேணிய சகலரையும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் தனது
முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேகாலை, தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட 'தம்மிக பாணி'யை பாராளுமன்றத்தில் வைத்து இதற்கு முன்னர் அமைச்சர் அருந்தியமை குறிப்பிடத்தக்கது.
தம்மிக்க பாணியை பாராளுமன்றத்தில் வைத்து அருந்திய அமைச்சருக்கு கொரோனா...
Reviewed by irumbuthirai
on
January 18, 2021
Rating:
