தமக்குரிய பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லலாம்...
irumbuthirai
January 27, 2021
மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்தை குறைக்க இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சகல சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் கற்கும் பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று தற்காலிகமாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இது தொடர்பாக தெரிவிக்கையில்,
ஆசிரியர்களும் மாணவர்களும் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்து மேற்கொள்ளாது தமக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தீர்மானித்துள்ளோம். பாடசாலைகளை திறப்பதற்கு எடுக்கப்பட தீர்மானம் மிகவும் கடினமானதொன்றாகும். எனவே அதன் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள சகலரினதும் ஆதரவு தேவை என்றும்
அவர் மேலும் தெரிவித்தார்.
தமக்குரிய பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லலாம்...
Reviewed by irumbuthirai
on
January 27, 2021
Rating: