ஜனாசா எரிப்பு தொடர்பாக கனேடிய பெண் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடு...
irumbuthirai
February 24, 2021
கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சல்மா ஸாஹிட் (Salma Zahid) இலங்கையில் COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் நேற்று (23) மனுவொன்று சமர்ப்பித்து உரையாற்றினார்.
சிறுபான்மையினரான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் அடக்கம் செய்யும் மத, கலாசார நடைமுறைக்கு மதிப்பளிக்குமாறும் கட்டாயத் தகனத்தை நிறுத்துமாறும் இலங்கை
அரசாங்கத்தை கனேடிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் எவையும் இல்லை. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு புறம்பாகவே அச்செயற்பாடு இடம்பெறுவதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர்கள் உள்ளிட்ட 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையொப்பமிட்ட மனுவை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதாக இதன்போது சல்மா ஸஹிட் தெரிவித்துள்ளார்.
ஜனாசா எரிப்பு தொடர்பாக கனேடிய பெண் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடு...
Reviewed by irumbuthirai
on
February 24, 2021
Rating: