திறக்கப்பட்டது இலங்கையின் 16ஆவது பல்கலைக்கழகம்...
irumbuthirai
March 02, 2021
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வரும், இலங்கையின் 16ஆவது தேசிய பல்கலைக்கழகம் நேற்று (1) திறக்கப்பட்டுள்ளது. அதாவது கம்பஹா விக்ரமாரச்சி சுதேச
மருத்துவ பல்கலைக்கழகமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வு நேற்று (01) குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதேவேளை இது இலங்கையின் முதலாவது சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் உத்தியோகபூர்வ திறப்பு விழா எதிர்வரும் வியாழக்கிழமை (04) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1929ஆம் ஆண்டில் ஆயுர்வேத சக்ரவர்த்தி பண்டித் ஜி.பி. விக்ரமராச்சியினால் 20 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத நிறுவனம், இலங்கையில் சித்த ஆயுர்வேத மருத்துவ பாரம்பரியத்தை கற்பிப்பதற்கான மையமாக பிரபலமானது.
இதேவேளை இதற்கு முன்னர் களனி பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனம் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Thinakaran)
திறக்கப்பட்டது இலங்கையின் 16ஆவது பல்கலைக்கழகம்...
Reviewed by irumbuthirai
on
March 02, 2021
Rating: