மறு அறிவித்தல் வரை சுற்றுலாவிற்கு தடையாகிறது பதுளை - நாரங்கல மலை பகுதி

March 03, 2021

சுற்றுலாப் பயணிகள் சூழலை மாசுபடுத்தியமை, சுற்றுலாக் குழுக்கள் இரவு நேரங்களில் தங்கியிருந்து மேற்கொள்ளும் 
முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் பதுளை - நாரங்கல-கந்த (மலை) பகுதிக்கு மீள் அறிவித்தல் வரும் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தயா தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார். 
சுற்றாடல் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கான வழிமுறை வகுக்கப்பட்ட பின்னர இந்த சுற்றுலா பகுதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மறு அறிவித்தல் வரை சுற்றுலாவிற்கு தடையாகிறது பதுளை - நாரங்கல மலை பகுதி மறு அறிவித்தல் வரை சுற்றுலாவிற்கு தடையாகிறது பதுளை - நாரங்கல மலை பகுதி Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்க்கும் முறையில் தற்காலிக மாற்றம்

March 02, 2021

கொரோனா தொற்று காரணமாக இலங்கை அதிபர் சேவை தரம் 3 க்கு ஆட்சேர்க்கும் முறையில் தற்காலிகமாக மாற்றங்களை செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. 
இதன்படி போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை நடத்துவதற்குப் பதிலாக கட்டமைக்கப்பட்ட 
நேர்முகப் பரீட்சையை மாத்திரம் நடத்தி தகைமை உடையவர்களை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
அதனடிப்படையில், அதிபர் சேவையில் நீண்ட காலமாக தற்காலிக அதிபர்களாக பணியாற்றும், ஆசிரியர் சேவையிலுள்ளவர்கள் மற்றும் சேவை யாப்பின்படி தகைமை பெற்ற ஆசிரியர் சேவையில் உள்ள ஏனையவர்களுக்கும் இந்த சந்தர்ப்பம் கிடைக்கும். 
இதுவரையிலும் இலங்கை அதிபர் சேவை தரம் 1 - 2 மற்றும் 3 க்கு சுமார் 4600 வெற்றிடங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 
 இது தொடர்பாக அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 
17. இலங்கை அதிபர் சேவை தரம் iii இற்கான ஆட்சேர்ப்பு தற்போது இலங்கை அதிபர் சேவை I, IIமற்றும் III தங்களில் 4,600 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையால் போட்டிப்பரீட்சை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி முறையாக பதவி நியமனங்களை வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் எடுக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது நீணடகாலமாக அதிபர் பதவியில் பதில் கடமைகளை மேற்கொள்ளும் ஆசிரியர் சேவையில் தகைமை பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை யாப்பிற்கமைய தகைமைகளைப் பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சேவையிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கி இச்சந்தர்ப்பத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காவும், இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கான நியமனங்களை வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்க்கும் முறையில் தற்காலிக மாற்றம் அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்க்கும் முறையில் தற்காலிக மாற்றம் Reviewed by irumbuthirai on March 02, 2021 Rating: 5

சா.தர மற்றும் உ.தர பரீட்சைகளில் ஏற்படும் மாற்றம்...

March 02, 2021

சா. தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும், உ. தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கான புதிய யோசனையொன்றை அடுத்தவாரம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் இந்த யோசனையை முன்வைப்பதாகவும், இதன் காரணமாக மாணவர்களின் கல்விக்கு மேலதிகமாக செலவாகும் 
09 மாத காலத்தினை மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். 
மேலும், இது தொடர்பாக பொது மக்களின் ஆலோசனையைப் பெற வேண்டியுள்ளதனால், பெரும்பாலும் இந்த திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த முடியும் என்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சா.தர மற்றும் உ.தர பரீட்சைகளில் ஏற்படும் மாற்றம்... சா.தர மற்றும் உ.தர பரீட்சைகளில் ஏற்படும் மாற்றம்... Reviewed by irumbuthirai on March 02, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 மார்ச் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்)

March 02, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2021 மார்ச் மாதத்தில் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம். Examinations calendar for the month of March, 2021.
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 மார்ச் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 மார்ச் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on March 02, 2021 Rating: 5

25-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

March 02, 2021

25-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 25-02-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
25-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 25-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on March 02, 2021 Rating: 5

திறக்கப்பட்டது இலங்கையின் 16ஆவது பல்கலைக்கழகம்...

March 02, 2021

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வரும், இலங்கையின் 16ஆவது தேசிய பல்கலைக்கழகம் நேற்று (1) திறக்கப்பட்டுள்ளது. அதாவது கம்பஹா விக்ரமாரச்சி சுதேச 
மருத்துவ பல்கலைக்கழகமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பான நிகழ்வு நேற்று (01) குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. 
இதேவேளை இது இலங்கையின் முதலாவது சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 இதன் உத்தியோகபூர்வ திறப்பு விழா எதிர்வரும் வியாழக்கிழமை (04) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
1929ஆம் ஆண்டில் ஆயுர்வேத சக்ரவர்த்தி பண்டித் ஜி.பி. விக்ரமராச்சியினால் 20 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத நிறுவனம், இலங்கையில் சித்த ஆயுர்வேத மருத்துவ பாரம்பரியத்தை கற்பிப்பதற்கான மையமாக பிரபலமானது. 
இதேவேளை இதற்கு முன்னர் களனி பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனம் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Thinakaran)
திறக்கப்பட்டது இலங்கையின் 16ஆவது பல்கலைக்கழகம்... திறக்கப்பட்டது இலங்கையின் 16ஆவது பல்கலைக்கழகம்... Reviewed by irumbuthirai on March 02, 2021 Rating: 5

O/L பரீட்சை எழுதிய சுனாமி பேபி (Tsunami Baby)...

March 01, 2021

இன்று (1) ஆரம்பமான க.பொ.த. (சா. தர) பரீட்சையில், உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி (Tsunami Baby) எனப்படும் சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் பரீட்சைக்கு தோற்றினார். 
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 
குருக்கள் மடத்தில் தற்போது வசித்து வரும் சுனாமி பேபி அபிலாஸ், செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் பரீட்சை எழுதினார். 
சுனாமி அனர்த்ததின் போது கண்டெடுக்கப்பட்ட அபிலாசிற்கு பலர் உரிமை கொண்டாடிய சந்தர்ப்பத்தில் பலத்த சிரமங்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனைக்கும் மத்தியில் உண்மையான பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிகழ்வு அப்போது முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
O/L பரீட்சை எழுதிய சுனாமி பேபி (Tsunami Baby)... O/L பரீட்சை எழுதிய சுனாமி பேபி (Tsunami Baby)... Reviewed by irumbuthirai on March 01, 2021 Rating: 5

இலங்கைக்கு வர எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம்...

March 01, 2021

லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்கான நிதி திரட்ட எந்தவொரு தனிநபருக்கும் அல்லது அமைப்பிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதனால் 
இதுபோன்ற மோசடிகாரர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு வர எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம்... இலங்கைக்கு வர எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம்... Reviewed by irumbuthirai on March 01, 2021 Rating: 5

கொரோனா தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்...

March 01, 2021

இன்று (1) ஆரம்பமான சா.தர பரீட்சை 4513 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 
நாடு முழுவதும் இம்முறை சா.தர பரீட்சை எழுதுவதற்காக தோற்றிய மாணவர்களின் வருகை திருப்பதிகரமாக அமைந்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 
மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த விசேட பரீட்சை மத்திய நிலையத்தில் 38 பேர் பரீட்சைக்கு தோற்றியிருப்பதாக சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களினால் அறிவிக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்... கொரோனா தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்... Reviewed by irumbuthirai on March 01, 2021 Rating: 5

க.பொ.த. (சா/த) பரீட்சை 2021 (மார்ச்): அறிவிக்கப்பட்ட அவசர தொலைபேசி இலக்கங்கள்:

March 01, 2021

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இடம்பெறுகின்ற காலத்தினுள் அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் செயல் திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையமும் கல்வி அமைச்சும் இணைந்து தயாரித்துள்ளன. 
இந்த வழிகாட்டல் திட்டத்திற்கமைவாக ஏதேனும் இடர் காரணமாக பரீட்சைக்கு தடைகள் ஏற்படுமிடத்து, 
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உடனடி தொலைபேசி இலக்கமான 117 க்கு அழைத்து இது தொடர்பாக அறிவிக்க முடியும் என்பதுடன், பரீட்சை தொடர்பாக எழுகின்ற ஏதேனும் பிரச்சினைகளுக்கு 1911 என்று உடனடி தொலைபேசி இலக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். 
மேலும் பெப்ரவரி 28 முதல் மார்ச் 11 வரையிலான காலப்பகுதிக்குள், பரீட்சைத் திணைக்களத்தினால் 24 மணித்தியால அவசர ஒருங்கிணைப்பு அலுவலகமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 
அத்துடன், பரீட்சை காலத்தினுள் எழுகின்ற ஏதேனும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்பு கொள்ளக்கூடிய அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது பற்றியும் வழிகாட்டல்கள் மற்றும் செயல் திட்டங்களில் உட்படுத்தப்பட்டுள்ளன.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
க.பொ.த. (சா/த) பரீட்சை 2021 (மார்ச்): அறிவிக்கப்பட்ட அவசர தொலைபேசி இலக்கங்கள்: க.பொ.த. (சா/த) பரீட்சை 2021 (மார்ச்): அறிவிக்கப்பட்ட அவசர தொலைபேசி இலக்கங்கள்: Reviewed by irumbuthirai on March 01, 2021 Rating: 5

மார்ச் 31 முதல் தடை செய்யப்படும் பொருட்கள்

March 01, 2021

இம்மாதம் (மார்ச்) 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. 
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் (PET Bottle) ,செம்போ பக்கெட், 
காட்டன் பட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் என்பன இதனுள் அடங்கும். 
 இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அதிகமானவை சூழலுடன் சேர்வதியால் இந்நாட்டில் அதிகமாக சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடிநீர் மற்றும் நீர் மாசடைவதாகவும் தெரியவந்துள்ளது. 
எனவே இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உற்பத்திகள் சிலவற்றை மார்ச் 31 முதல் இலங்கையில் உற்பத்தி செய்ய மற்றும் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக சூழலுக்கு உகந்த பொருட்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 
இதேவேளை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மார்ச் 31 ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுடன் இந்த வருட இறுதிக்குள் மேலும் 350 உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார். 
எனவே முடிந்தவரை சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
மார்ச் 31 முதல் தடை செய்யப்படும் பொருட்கள் மார்ச் 31 முதல் தடை செய்யப்படும் பொருட்கள் Reviewed by irumbuthirai on March 01, 2021 Rating: 5

ஜோ பைடனின் அதிரடி: ஆரம்பமானது முதல் இராணுவ நடவடிக்கை:

February 27, 2021

அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ஜோ பைடன் தனது முதல் இராணுவ நடவடிக்கைக்கான உத்தரவை வழங்கியுள்ளார். 
 அதாவது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக 
சிரியாவில் அதிரடி தாக்குதல் அமெரிக்கா தொடங்கி உள்ளது. 
இந்த மாத ஆரம்பத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமயகமான பென்டகன் கூறியுள்ளது.
ஜோ பைடனின் அதிரடி: ஆரம்பமானது முதல் இராணுவ நடவடிக்கை: ஜோ பைடனின் அதிரடி: ஆரம்பமானது முதல் இராணுவ நடவடிக்கை: Reviewed by irumbuthirai on February 27, 2021 Rating: 5

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்...

February 27, 2021

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தைக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த புதன்கிழமை திறந்து வைத்தாா். 
நாட்டு மக்களின் வலிமையையும் நாட்டின் திறமையையும் இந்த கிரிக்கட் அரங்கம் பறைசாற்றுகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மையமாக 
இந்தியா அறியப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா உயா்ந்தநிலையை அடைந்ததைப் போல மற்ற விளையாட்டுகளிலும் முன்னணி பெறும். மற்ற துறைகளிலும் இந்தியா வளா்ச்சி காணும் என்று குடியரசுத் தலைவர் இந்நிகழ்வின் போது தெரிவித்தார். 
இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 1.32 லட்சம் போ் அமா்ந்து கிரிக்கெட் போட்டியைக் காண முடியும். 
இந்த அரங்கம் சா்தாா் படேல் அரங்கம் என்ற பெயரில்தான் முன்னர் இருந்தது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, அந்த அரங்கத்தைப் புதுப்பித்து, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமாகப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்... உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்... Reviewed by irumbuthirai on February 27, 2021 Rating: 5
Powered by Blogger.