Covid-19: தபால் மூலம் 17 இலட்சம் மருந்துப் பொதிகள்...

March 04, 2021

கொரோனா அனர்த்த காலத்தில் மக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று மருந்து வகைககளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்பட்டன. 
இதன் காரணமாக தபால் திணைக்களத்தின் மூலம் இந்த மருந்துப் பொதிகளை நோயாளர்களுக்கு விநியோகிக்கும் திட்டம் ஆரம்பமானது. அந்த வகையில் நேற்றுவரை அரச வைத்தியசாலைகளில் தொற்றா நோயாளர்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 17 லட்சம் மருந்துப் பொதிகளை அந்த நோயாளிகளின் வீடுகளிலேயே விநியோகிக்க தபால் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன ஆரியரத்ன தெரிவித்தார். 
ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் தபால் தலைமையகத்தில் நேற்று (3) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. 
 கொவிட் ஆபத்து நிலையையும் பொருட்படுத்தாது தபால் ஊழியர்கள் மேற்கொண்ட சேவையை பாராட்டுவதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொவிட் தடுப்பூசியை 
வழங்குமாறு தான் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது மாத்திரமன்றி தபால் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முறையான பொறிமுறையின் மூலம் தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், எவருக்கும் பாரபட்சமின்றி சம்பள முரண்பாடுகள் மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Covid-19: தபால் மூலம் 17 இலட்சம் மருந்துப் பொதிகள்... Covid-19: தபால் மூலம் 17 இலட்சம் மருந்துப் பொதிகள்... Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு புதிய சேவைப் பிரமாணம்

March 04, 2021

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவைப் பிரமாணம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் துறைசார் உத்தியோகத்தர்களின் 
80%மான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்றும் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 
உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் இவ்வாறு குறிப்பிட்டார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு புதிய சேவைப் பிரமாணம் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு புதிய சேவைப் பிரமாணம் Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் வைரஸ் ஒழிப்பு முகக்கவசம்

March 04, 2021

உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முகக்கவசத்தை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 
உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 
அதேபோன்று இந்த முகக் கவசத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு தூதுவராலயங்களூடாக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Vacancy: Sri Jayawardenepura General Hospital

March 04, 2021

Vacancy: Sri Jayawardenepura General Hospital 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Sri Jayawardenepura General Hospital Vacancy: Sri Jayawardenepura General Hospital Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka

March 04, 2021

Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka 
Closing date: 10-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.
Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Post Graduate Diploma in Education (PGDE) - University of Colombo

March 04, 2021

Post Graduate Diploma in Education (Teaching of English as a Second Language) - University of Colombo 
Closing date: 31-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Post Graduate Diploma in Education (PGDE) - University of Colombo Post Graduate Diploma in Education (PGDE) - University of Colombo Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Bachelor of Arts in Social Sciences (Open University of Sri Lanka)

March 04, 2021

BA in Social Sciences is a multi-disciplinary study programme starting at Level 3. Each year is divided into two semesters. During each semester, you can offer courses worth a maximum of 15 credits. To complete the programme, you need to have a total of 90 credits. 
Students who register for the programme can choose from the following 4 streams. 
            1) Economics and Development Studies 
            2) Communication Studies 
            3) Politics and International Relations 
            4) Society and Culture Studies 

Admission: 
        A minimum of three passes at the General Certificate of Education (Advanced Level) examination 
        in  any stream, or 
        A minimum of 30 credits at SLQF Level 2 or above from any programme offered by a Higher 
        Education Institution approved by the Senate of the Open University of Sri Lanka, or 
        Qualification or accredited work experience equivalent to NVQF Level 4 or 
        An equivalent or higher qualification acceptable to the Senate. 

Closing Date for Applications: 24th March 2021 
Click the link below for more details:
Bachelor of Arts in Social Sciences (Open University of Sri Lanka) Bachelor of Arts in Social Sciences (Open University of Sri Lanka) Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதி: சுதந்திரத்தின் பின் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்:

March 03, 2021

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட 10588 மாணவர்களுக்குரிய பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான கூடுதல் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.02.03) ஆலோசனை வழங்கினார். 
பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்து அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 
இவ்வாண்டில் 41000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள், சுதந்திரத்தின் பின்னர் முதல் முறையாக இம்முறை 
10588 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், சகல பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆதரவினாலேயே இவை அனைத்தையும் நிர்வகிக்க முடிந்ததென்றும், பல்கலைக்கழக அமைப்பின் பௌதீக மற்றும் மனித வளங்களை நிர்வகிக்க மேலதிகமாக சுமார் 5 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 
 இவ்வாறு தேவைப்படும் கூடுதல் நிதியை கட்டம் கட்டமாக பல்கலைக்கழக அமைப்புக்கு வெளியிடுமாறு பிரதமர் அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறையை பொது திரைசேறி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து கலந்துரையாடலின் மூலம் தீர்மானித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். 
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்பலைக்கழகத்தில் விரிவுரைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு விரிவுரையாளர்களதும், மாணவர்களதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள், பல்கலைக்கழகங்களை மூடுதல் எனும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதி: சுதந்திரத்தின் பின் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்: பல்கலைக்கழக அனுமதி: சுதந்திரத்தின் பின் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்: Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

Z - Score காரணமாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்காக முன்வைக்கப்பட்ட திட்டம்...

March 03, 2021

இசெட் (Z- Score) வெட்டுப்புள்ளி காரணமாக பல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்து அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கலந்துரையாடலின்போது கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார். 
அதற்கான தீர்வாக 
அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அவர்களை இணைத்துக் கொள்ள முடியும் என அதன் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தெரிவித்தார். 
அதற்கமைய இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Z - Score காரணமாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்காக முன்வைக்கப்பட்ட திட்டம்... Z - Score காரணமாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்காக முன்வைக்கப்பட்ட திட்டம்... Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள கொரோனா தடுப்பூசி அவசியமா? வெளியானது சவுதியின் அறிவிப்பு

March 03, 2021

இம்முறை ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் COVID தடுப்பூசியை 
கட்டாயம் ஏற்றியிருக்க வேண்டும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. 
நுழைவாயில்களில் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் இதற்கு மேலதிகமாக தடுப்பூசிக்குழு அமைக்கப்படும் எனவும் சவுதியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 கொரோனா காரணமாக கடந்த வருடம் வெளிநாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரைக்காக வருவது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள கொரோனா தடுப்பூசி அவசியமா? வெளியானது சவுதியின் அறிவிப்பு ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள கொரோனா தடுப்பூசி அவசியமா? வெளியானது சவுதியின் அறிவிப்பு  Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

புதிதாக 35 அரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு

March 03, 2021

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் வகையில் 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இதற்கான விண்ணப்பங்களைக் கோரும் பணி கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகள் 
நேற்றுடன் (02) முடிவடைந்தன. 
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக 35 அரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு புதிதாக 35 அரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE)

March 03, 2021

Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) 
Post: Hostel Warden / Hostel Matron (4 Posts) 
Closing date: 28-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

Vacancy (Store Keeper): Bandaranaike International Airport - Katunayake

March 03, 2021

Vacancy (Store Keeper): Bandaranaike International Airport - Katunayake 
Closing date: 12-03-2021. 
See the details below.
Source: Sunday Observer

Vacancy (Store Keeper): Bandaranaike International Airport - Katunayake Vacancy (Store Keeper): Bandaranaike International Airport - Katunayake Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5
Powered by Blogger.