கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு...

March 05, 2021

இம்முறை க.பொ.த. (சா/தர) பரீட்சையில் கொவிட் தொற்றுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. 
இவர்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 
இதேவேளை பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை 
நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு... கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு... Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்

March 05, 2021

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. 
 இந்த நிகழ்வில் பிரதம செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். 
 இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் அவர்கள், 'விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால வெற்றிடம் இன்று நிரப்பப்படுகின்றது.' எனவும் யாழ் தவிர்ந்த ஏனைய நான்கு 
மாவட்டங்களிலும் விவசாயிகளும் விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். 
மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை விட இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் அதற்கான காரணமாக விவசாயிகள் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகள் மற்றும் பயிற்செய்கை முறைகள் என்பவற்றை குறிப்பிட்டார். 
 மேலும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை குறைத்து விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுடன் விளைச்சலை அதிகரிக்கும் வழி முறைகளை அவர்களிற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகவே இம் முறை விவசாய போதனாசிரியர்களாக விவசாய பட்டதாரிகளை உள்வாங்கியுள்ளோம் எனவும் கூறினார். அத்துடன் விவசாய பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட அறிவை விவசாயிகளுக்கு சரியாக பரிமாற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். 
மேலும் இந்த அறிவுப்பரிமாற்றத்தின் மாற்றம் அடுத்த வருட விவசாய உற்பத்திகளின் தரவுகளிலே தனித்துத் தெரியவேண்டும் எனவும் ' பழையன கழிதலும் புதிய புகுதலும் எனும் வசனத்திற்கு ஏற்ப புதிய விவசாய உற்பத்தி மற்றும் பயிற்செய்கை முறைகளை நடைமுறைப்படுத்தி விவசாயத்திலும் விவசாயிகளின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS)

March 05, 2021

Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS) 
Closing date: 21-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS) Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS) Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Insurance

March 05, 2021

Vacancies: Sri Lanka Insurance 
Closing date: 7 days from 28-02-2021. 
See the details below.

Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Insurance Vacancies: Sri Lanka Insurance Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Standards Institution (SLSI)

March 05, 2021

Vacancies: Sri Lanka Standards Institution (SLSI) 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: Sri Lanka Standards Institution (SLSI) Vacancies: Sri Lanka Standards Institution (SLSI) Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

தடுப்பூசி போட்டபின் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருக்கிறதா? வெளியான அறிவிப்பு

March 05, 2021

கோவிட் தடுப்பூசி பெற்று இரண்டு நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் ஏற்பட்டால், அவர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் ஹேமந்தா ஹெராத் கூறுகிறார். 
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரியப்படுத்திய அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் இதுவரை இங்கு இறந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். 
பொதுவாக இரண்டு நாட்களுக்குள் இந்த காய்ச்சல் குறையும். அதன்பின்னரும் காய்ச்சல் இருந்தால் 
அதை அலட்சியப்படுத்த வேண்டாம். விரைவாக சிகிச்சைக்கு செல்லுங்கள். ஏனெனில் அது டெங்கு நோயாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டபின் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருக்கிறதா? வெளியான அறிவிப்பு தடுப்பூசி போட்டபின் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருக்கிறதா? வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி: அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு:

March 05, 2021

2021 க்காக தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
 எனவே மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு 
இணைப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 
 இது தொடர்பான முறைப்பாடுகளையோ அல்லது வௌி நபர்களினூடாக அச்சுறுத்தல் விடுப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி: அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு: தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி: அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு: Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Sputnik V ஐப் பயன்படுத்த இலங்கை வழங்கிய அவசர அனுமதி...

March 05, 2021

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான Sputnik-V (ஸ்புட்னிக்- V) தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவை கருதி பயன்படுத்த, தேசிய ஔதடங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. 
இதேவேளை 3 இலட்சம் 
Sputnik V தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க ரஷ்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sputnik V ஐப் பயன்படுத்த இலங்கை வழங்கிய அவசர அனுமதி... Sputnik V ஐப் பயன்படுத்த இலங்கை வழங்கிய அவசர அனுமதி... Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Covid-19: தபால் மூலம் 17 இலட்சம் மருந்துப் பொதிகள்...

March 04, 2021

கொரோனா அனர்த்த காலத்தில் மக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று மருந்து வகைககளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்பட்டன. 
இதன் காரணமாக தபால் திணைக்களத்தின் மூலம் இந்த மருந்துப் பொதிகளை நோயாளர்களுக்கு விநியோகிக்கும் திட்டம் ஆரம்பமானது. அந்த வகையில் நேற்றுவரை அரச வைத்தியசாலைகளில் தொற்றா நோயாளர்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 17 லட்சம் மருந்துப் பொதிகளை அந்த நோயாளிகளின் வீடுகளிலேயே விநியோகிக்க தபால் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன ஆரியரத்ன தெரிவித்தார். 
ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் தபால் தலைமையகத்தில் நேற்று (3) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. 
 கொவிட் ஆபத்து நிலையையும் பொருட்படுத்தாது தபால் ஊழியர்கள் மேற்கொண்ட சேவையை பாராட்டுவதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொவிட் தடுப்பூசியை 
வழங்குமாறு தான் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது மாத்திரமன்றி தபால் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முறையான பொறிமுறையின் மூலம் தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், எவருக்கும் பாரபட்சமின்றி சம்பள முரண்பாடுகள் மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Covid-19: தபால் மூலம் 17 இலட்சம் மருந்துப் பொதிகள்... Covid-19: தபால் மூலம் 17 இலட்சம் மருந்துப் பொதிகள்... Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு புதிய சேவைப் பிரமாணம்

March 04, 2021

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவைப் பிரமாணம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் துறைசார் உத்தியோகத்தர்களின் 
80%மான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்றும் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 
உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் இவ்வாறு குறிப்பிட்டார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு புதிய சேவைப் பிரமாணம் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு புதிய சேவைப் பிரமாணம் Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் வைரஸ் ஒழிப்பு முகக்கவசம்

March 04, 2021

உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முகக்கவசத்தை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 
உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 
அதேபோன்று இந்த முகக் கவசத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு தூதுவராலயங்களூடாக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Vacancy: Sri Jayawardenepura General Hospital

March 04, 2021

Vacancy: Sri Jayawardenepura General Hospital 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Sri Jayawardenepura General Hospital Vacancy: Sri Jayawardenepura General Hospital Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka

March 04, 2021

Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka 
Closing date: 10-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.
Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5
Powered by Blogger.