இலங்கை மாணவர்களுக்கு ஹிந்தி மொழி... இந்தியாவின் நடவடிக்கை ...
irumbuthirai
March 07, 2021
சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கும் ஹிந்தி மொழியினை கற்று
கொடுப்பதற்கும் தேவையான சகல வளங்களும் பெற்று கொடுக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.
கடந்ந 4ம் திகதி சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் வைத்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர்,
சப்ரகமுவ மாகாணத்தின்
பாடசாலை மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்று கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான சகல வளங்களும் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கை மாணவர்களுக்கு ஹிந்தி மொழி... இந்தியாவின் நடவடிக்கை ...
Reviewed by irumbuthirai
on
March 07, 2021
Rating: