Vacancy: People's Bank

March 12, 2021

Vacancy: People's Bank 
Closing date: 22-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: People's Bank Vacancy: People's Bank Reviewed by irumbuthirai on March 12, 2021 Rating: 5

Vacancies (Assistant Librarian & Management Assistant) - University of Colombo

March 12, 2021

Vacancies (Assistant Librarian & Management Assistant) - University of Colombo 
Closing date: 26-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies (Assistant Librarian & Management Assistant) - University of Colombo Vacancies (Assistant Librarian & Management Assistant) - University of Colombo Reviewed by irumbuthirai on March 12, 2021 Rating: 5

உலக சிறுநீரக தினம் இன்று.... இலங்கை 61வது இடத்தில்.......

March 11, 2021

உலக சிறுநீரக தினம் இன்றாகும். இத்தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. 
 இம்முறை இதன் கருப்பொருள் ”சிறுநீரக பாதுகாப்பு அனைவருக்கும் அனைத்து பகுதிகளுக்கும்” என்பதாகும். 
சுத்தமான குடிநீர் இன்மை சிறுநீரக பாதிப்பிற்கான பிரதான காரணியாக இருப்பதோடு 
குடிப்பழக்கம் , புகைப்பிடித்தல் மற்றும் ஒழுக்கமற்ற உணவு நடைமுறை என்பனவும் சிறுநீரக நோயை அதிகமாக்குகிறது. 
உலக சனத்தொகையில் 10% மானவர்கள் சிறுநீரகப் பாதிப்பிற்கு முகம் கொடுப்பதுடன், அவர்களில் மில்லியன் கணக்கானவர்கள் வருடந்தோறும் இதனால் உயிரிழக்கின்றனர். 
இதேவேளை மனிதர்களின் மரணத்திற்கு காரணமான நோய்களில் 6 ஆவது இடத்தில் இது உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
உலகளவில் சிறுநீரக நோய் பாதிப்பு தொடர்பான பட்டியலில் இலங்கை 61 ஆவது இடத்தில் உள்ளது. 
இதேவேளை உலகம் முழுவதும் 850 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோய்ப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்களை விட இரு மடங்காகவும் புற்றுநோய் மற்றும் எயிட்ஸால் பாதிக்கப்படுபவர்களை விட 20 மடங்காகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக சிறுநீரக தினம் இன்று.... இலங்கை 61வது இடத்தில்....... உலக சிறுநீரக தினம் இன்று.... இலங்கை 61வது இடத்தில்....... Reviewed by irumbuthirai on March 11, 2021 Rating: 5

08-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

March 11, 2021

08-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
08-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 08-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on March 11, 2021 Rating: 5

சா.தர பரீட்சை (2021 மார்ச்) விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக...

March 11, 2021

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 
27ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். 
க.பொ.த. பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்ற கோட்டே ஆனந்த பரீட்சை மண்டபத்திற்கு விஜயம் செய்த போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இதேவேளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நன்றி தெரிவித்தார். இதற்கு சகல அதிகாரிகளும் உயர்ந்தபட்ச ஆதரவை வழங்கியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சா.தர பரீட்சை (2021 மார்ச்) விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... சா.தர பரீட்சை (2021 மார்ச்) விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... Reviewed by irumbuthirai on March 11, 2021 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல்... புதிய அறிவிப்பு...

March 10, 2021

மேல் மாகாணத்தில் தரம் 05, 11 மற்றும் உயர் தர வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 
ஏனைய வகுப்புகள்ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். 
இவ்வாறு மேல் மாகாணத்தில் கட்டம் கட்டமாக கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல்... புதிய அறிவிப்பு... மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல்... புதிய அறிவிப்பு... Reviewed by irumbuthirai on March 10, 2021 Rating: 5

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கான இணையத்தளம் ஆரம்பம்...

March 10, 2021

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான 
www.slwpc.org என்ற தளம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (09) தொடங்கி வைக்கப்பட்டது. 
இந்நிகழ்வு பாராளுமன்ற குழு அறை 01 இல் நடைபெற்றது. 
அதில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட ஒன்றியத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கான இணையத்தளம் ஆரம்பம்... பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கான இணையத்தளம் ஆரம்பம்... Reviewed by irumbuthirai on March 10, 2021 Rating: 5

ஆரம்பமானது அரச காணிகளைப் பயன்படுத்துவோர்க்கு பத்திரம் வழங்கும் திட்டம்...

March 09, 2021

உரிய முறையில் தெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிய உரிமைப் பத்திரங்களை வழங்கும் வைபவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது. 
இத்திட்டத்தின் கீழ் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதன் முதல் கட்டத்தின் கீழ் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் 
சட்டபூர்வமாக தெரிவுசெய்யப்பட்ட 20,000 பேருக்கு உரிமை பத்திரங்கள் வழங்கப்படும். 
இந்த உரிமைப் பத்திரங்களை பெறுபவர்கள் வீடொன்றை கட்ட, விவசாய நோக்கங்களுக்காக மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தங்கள் காணிகளை பயன்படுத்தலாம். இந்த பத்திரத்தை பிணையமாக வைத்து வங்கிக் கடனொன்றை பெற்றுக்கொள்ளவும் பயனாளிகளுக்கு உரிமை உண்டு. 
இந்த வருட (2021) இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இந்நிகழ்வின்போது தெரிவித்தார்.
ஆரம்பமானது அரச காணிகளைப் பயன்படுத்துவோர்க்கு பத்திரம் வழங்கும் திட்டம்... ஆரம்பமானது அரச காணிகளைப் பயன்படுத்துவோர்க்கு பத்திரம் வழங்கும் திட்டம்... Reviewed by irumbuthirai on March 09, 2021 Rating: 5

இலங்கை மக்களின் உப்பு பாவனை.... அதிரவைக்கும் தகவல்...

March 09, 2021

உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் நேற்று முதல் மார்ச் 14-ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
இலங்கையில் 83% மான மரணங்கள் தொற்றா நோயால் ஏற்படுகின்றன. அவற்றில் 34% மானவை 
இருதய மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களினால் ஏற்படுகின்றன. அதாவது, இந்த மரணங்கள் இருதயநோய், பக்கவாதம், அதி உயர் குருதி அழுத்தம் போன்றவற்றினால் இடம்பெறுகின்றன. 
 இவற்றுள் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், அதி உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணம், உணவில் அதிகமாக உப்பை பயன் பயன்படுத்துவதாகும். 
ஒருவர் நாளொன்றிற்கு எடுக்க வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி அளவு) என்பதாக உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இலங்கையில் ஒருவர் நாளொன்றிற்கு 9 கிராம் தொடக்கம் 12 கிராம் வரையிலான அதிகளவான உப்பை பயன்படுத்துகின்றனர். 
இதேவேளை உப்பு பாவனையைக் குறைப்பதனால் ஒரு ஆண்டில் உலகில் ஏற்படுகின்ற மரணங்களில், 2.5 மில்லியன் மரணங்களை குறைக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
இலங்கை மக்களின் உப்பு பாவனை.... அதிரவைக்கும் தகவல்... இலங்கை மக்களின் உப்பு பாவனை.... அதிரவைக்கும் தகவல்... Reviewed by irumbuthirai on March 09, 2021 Rating: 5

பாடசாலைகள் இம்மாதம் 15ல் ஆரம்பமாகுமா?

March 08, 2021

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்று தெரிவித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மேல் மாகாணத்தை 
தவிர்ந்த நாட்டின் சகல மாகாணங்களிலும் உள்ள சகல தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறினார். 
இதேவேளை, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் 15ஆம் திகதி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதா - இல்லையா என்பது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகள் இம்மாதம் 15ல் ஆரம்பமாகுமா? பாடசாலைகள் இம்மாதம் 15ல் ஆரம்பமாகுமா? Reviewed by irumbuthirai on March 08, 2021 Rating: 5

Vacancies: The Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA)

March 08, 2021

Vacancies: The Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) 
Closing date: 13-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: The Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) Vacancies: The Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) Reviewed by irumbuthirai on March 08, 2021 Rating: 5

Vacancies: University of Moratuwa

March 07, 2021

Vacancies: University of Moratuwa. 
Closing date: 26-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: University of Moratuwa Vacancies: University of Moratuwa Reviewed by irumbuthirai on March 07, 2021 Rating: 5

புதிதாக 626 தேசிய பாடசாலைகள்...

March 07, 2021

புதிதாக 626 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த மாதத்திற்குள் 
இதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
நாட்டில் தற்போது ஏற்கனவே 374 தேசிய பாடசாலைகள் உள்ளன. 1,000 தேசிய பாடசாலைகளை நிறுவும் அரசின் தேசிய செயற்றிட்டத்தின் கீழே புதிதாக 626 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன. 
தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளுக்கு தேவையான கட்டடங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிதாக 626 தேசிய பாடசாலைகள்... புதிதாக 626 தேசிய பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on March 07, 2021 Rating: 5
Powered by Blogger.