நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு)

March 16, 2021

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம், மனை பொருளியல், அழகியல் பாடங்களுக்கு (சித்திரம், சங்கீதம்,நடனம்) ஆகிய பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 - 1(இ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போட்டிப் பரீட்சை-2021 

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம், மனை பொருளியல், அழகியல் பாடங்களுக்கு (சித்திரம், சங்கீதம்,நடனம்) ஆகிய பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 - 1(இ) தரத்திற்கு டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக தகைமைப் பெற்ற ஆண், பெண் இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
  • பரீட்சைக் கட்டணம் :  ரூ. 600.00 
  • பரீட்சை நடைபெறும் காலம்: 2021 ஜூன். 
  • வயது எல்லை : 18-35. 
  • Online விண்ணப்பத்திற்கான இறுதி தினம் - 31-03-2021 மதியம் 12.00 மணி வரை. 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறை பற்றி மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு) Reviewed by irumbuthirai on March 16, 2021 Rating: 5

பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 26 ஆம் திகதி முதல்...

March 15, 2021

சுமார் 20 வருடங்கள் பாடசாலை பாடவிதானங்களில் சரியாக கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய பாடவிதானங்களின் உள்ளடக்கம் நாட்டின் பொருளாதார தேவைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களுடன் பொருத்தமுடையதாக இல்லை. எனவே பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 
எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியிலும் மாத்தறை - ராகுல கல்லூரியிலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிடங்களை பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
தகவல் தொழில்நுட்பம், கணனி தொழில்நுட்பம் என்பன பாடவிதானங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக பாடநெறிகள் நவீன தொழில் சந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் கட்டமைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 26 ஆம் திகதி முதல்... பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 26 ஆம் திகதி முதல்... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு...

March 15, 2021

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 123 தேசிய பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 673 தேசிய பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாக இருக்கிறது. 
 இதேவேளை இந்த வேலைத்திட்டத்திற்கான பாடசாலைகளை நிர்ணயிக்கும் 
பொறுப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு... தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

1997 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சன்மானம்....

March 15, 2021

சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காடழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குவோர்க்கு சன்மானம் வழங்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் 
ஈடுபடுவோருக்கு எதிரான சுற்றிவளைப்புகளை கடுமையாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1997 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சன்மானம்.... 1997 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சன்மானம்....  Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு....

March 15, 2021

தாம் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா தமது பிரத்தியேக Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
“வேலை செய்ய முடியாத தூதுவர்” என்ற தலைப்பில் 
பதிவொன்றை இட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 
12 இலங்கை மீனவர்கள் தற்போது மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைது தொடர்பில் மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. 
ஆனால் தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, பொலிஸ் அதிகாரி ஒருவரினூடாக ஒரே ஒரு நாள் மாத்திரம் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது என தெரிவித்த அவர் தாம் ஒரு திறனற்ற, தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் உத்தியோகபூர்வமற்ற முறையில் செயற்பட மியன்மாரில் தமக்கு அறிமுகமானவர்கள் எவரும் இல்லை எனவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
எவ்வாறாயினும், மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர்களின் பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாடு இடம்பெறும் வரையிலும் தாம் பதவியில் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்:

March 14, 2021

2021 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் பிறக்கும் சகல குழந்தைகளுக்கும் புதிய முறையிலான பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் நாயகம் W.M.M.B. வீரசேகர தெரிவித்துள்ளார். 
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் இந்த மாற்றத்தை செய்யவுள்ளதாக தெரிவித்தார். 
 இதற்கமைய, ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான 
அனைத்து தரவுகளும் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்: ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்: Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5

கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை

March 14, 2021

நாட்டில் கணினி தொழில்நுட்பம் தொடர்பான தொழில்களில் சுமார் 40,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
எனவே இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (The Open University of Sri Lanka)
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இந்த மாதத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5

இலங்கை தேசியக் கொடி விவகாரம்.... Amazon எடுத்த நடவடிக்கை...

March 14, 2021

இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை கால்மிதிகளில் பயன்படுத்தியமை தொடர்பில் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 
அமசோனில் (Amazon) இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்திய 
நிறுவனத்திற்கு தூதரகத்தினால் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து குறித்த விளம்பரம் தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேசியக் கொடி விவகாரம்.... Amazon எடுத்த நடவடிக்கை... இலங்கை தேசியக் கொடி விவகாரம்.... Amazon எடுத்த நடவடிக்கை... Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5

Vacancy for Teachers (Musaeus College - Colombo)

March 13, 2021

Vacancy for Teachers (Musaeus College - Colombo) 
Closing date: 10 days from 7-3-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancy for Teachers (Musaeus College - Colombo) Vacancy for Teachers (Musaeus College - Colombo) Reviewed by irumbuthirai on March 13, 2021 Rating: 5

Vacancies (Management Assistant & Assistant Lecturer) - Sri Lanka Institute of Tourism & Hotel Management

March 13, 2021

Sri Lanka Institute of Tourism & Hotel Management. 
Vacancies (Management Assistant & Assistant Lecturer) 
Closing date: 25-03-2021. 
See the details below.


Vacancies (Management Assistant & Assistant Lecturer) - Sri Lanka Institute of Tourism & Hotel Management Vacancies (Management Assistant & Assistant Lecturer) - Sri Lanka Institute of Tourism & Hotel Management Reviewed by irumbuthirai on March 13, 2021 Rating: 5

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

March 12, 2021

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka 
Closing date: 29-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on March 12, 2021 Rating: 5

Vacancy: University of Kelaniya

March 12, 2021

Vacancy: University of Kelaniya 
Closing date: 22-03-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancy: University of Kelaniya Vacancy: University of Kelaniya Reviewed by irumbuthirai on March 12, 2021 Rating: 5

Vacancy: People's Bank

March 12, 2021

Vacancy: People's Bank 
Closing date: 22-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: People's Bank Vacancy: People's Bank Reviewed by irumbuthirai on March 12, 2021 Rating: 5
Powered by Blogger.