இலங்கையர்களுக்கு ஜப்பானில் இலவச வேலைவாய்ப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு:
irumbuthirai
March 17, 2021
ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இது தொடர்பாக தெளிவூட்டும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும்
20 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெறவுள்ளது.
NAT அல்லது JLPT பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் இலவசமாக தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 27 89 367 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு ஜப்பானில் இலவச வேலைவாய்ப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு:
Reviewed by irumbuthirai
on
March 17, 2021
Rating: