48 வயதான பெண் ஆசிரியரின் சாதனை...
irumbuthirai
March 20, 2021
இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கிலோமீட்டர் நீளமான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.
சியாமளா கோலி என்ற பெயருடைய இந்த ஆசிரியை இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:10 ற்கு ஆரம்பித்து மாலை 5.50க்கு இந்த சாதனையை நிறைவு செய்துள்ளார்.
பாறைகள் மற்றும் ஆபத்தான ஜெலி மீன்கள் நிறைந்த கடற்பகுதியும்
இந்த பாக் ஜலசந்தியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக ஜலசந்தி கடற்பகுதியை 1954ல் நீந்தி கடந்தார்.
சியாமளா கோலி ஆசிரியை பாக் ஜலசந்தியை கடந்த 13வது நீச்சல் வீரராகவும் உலகளவில் 2வது வீராங்கனையாகவும் இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
48 வயதான பெண் ஆசிரியரின் சாதனை...
Reviewed by irumbuthirai
on
March 20, 2021
Rating: