மேல் மாகாண பாடசாலைகளில் ஏனைய தரங்களை ஆரம்பித்தல்: புதிய திகதி அறிவிப்பு:

March 24, 2021

மேல் மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளில் 5,11,13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஏனைய தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தது. 
ஆனால் தற்போது மேல் மாகாண பாடசாலைகளில் 
அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
இதற்கான அனுமதியை வழங்க தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண பாடசாலைகளில் ஏனைய தரங்களை ஆரம்பித்தல்: புதிய திகதி அறிவிப்பு: மேல் மாகாண பாடசாலைகளில் ஏனைய தரங்களை ஆரம்பித்தல்: புதிய திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on March 24, 2021 Rating: 5

வட மாகாணத்தில் புதிய நியமனங்கள்

March 23, 2021

வட மாகாண பாடசாலைகளுக்கான ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும், வட மாகாண விவசாய அமைச்சுக்கு கீழான 
விவசாய போதனாசிரியர், விவசாய தொழில்நுட்பவியலாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் நேற்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. 
 இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்து கொண்டார். 
 இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், 
ஜனாதிபதி தந்த விசேட அதிகாரத்தின் மூலம் மாகாண சபையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பி வருவதாகவும் அச்செயற்பாட்டின் ஒரு கட்டமாகத்தான் இன்றைய நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 
அத்துடன் முதன் முறையாக டிப்ளோமா பட்டதாரிகள் ஆங்கில ஆசிரியர்களாக வட மாகணத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆங்கில, கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்களுடைய பற்றாக்குறை வடமாகாண கல்வி தரத்திலும் கல்வி நிலையிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய ஆளுநர் அதனை நிவர்த்தி செய்யும் முதல் படியாக இந்த ஆங்கில ஆசிரியர் நியமனம் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.  
மேலும் இனிவரும் காலங்களில் சகல கிராமப்புற பாடசாலைகளிலும் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கபடவுள்ளதால் கல்வி சார் செயற்பாடுகள் சரியாக புகட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 
 அத்துடன் மாணவர்கள் பல்கலைகழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அந்தந்த துறைகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்கள் பெற்றுகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 
இதனைத்தொடர்ந்து விவசாய மற்றும் கால்நடை துறையில் புதிதாக நியமனம் பெறுவோர் பற்றி கருத்து தெரிவித்த ஆளுநர்,  
இலங்கையில் பாரம்பரிய முறையிலான உற்பத்தி முறைகளே தற்போதும் காணப்பட்டு வருவதால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி விலை அதிகமாக காணப்படுகிறது அதுவே பொருட்கள் இறக்குமதி செய்யக் காரணமாகிறது எனவும் சுட்டிக்காட்டினர். 
மேலும் இந்த நிலையை மாற்றி நவீன தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு பயிற்றுவித்து நவீன தொழில்நுட்ப முறைகளின் மூலம் உற்பத்தி செலவை குறைத்து உற்பத்தி துறையிலே ஒரு புதிய புரட்சியை கொண்டுவர வேண்டும் எனும் நோக்கத்துடன் தான் இந்த நியமனங்கள் வழங்கபடுவதாகவும் குறிப்பிட்டார். 
 மேலும் பதவி நிலை சார் உத்தியோகத்தர்கள் வெகு விரைவாக நியமிக்கப்படுவார்கள் என விவசாயத்துறை அமைச்சர் கூறியதையும் ஞாபகப்படுத்தினார். 
 அத்துடன் கல்விசார் புலமையுடன் தொழில்சார் புலமையும் ஒரு சேவையை வழங்குபவருக்கு அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதியாக புதிதாக நியமன பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் வட மாகாணத்தில் புதிய நியமனங்கள் Reviewed by irumbuthirai on March 23, 2021 Rating: 5

அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித்

March 23, 2021

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் 
நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பலமாக மேற்கொள்ளப் போவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 
எத்தகைய சக்திகள் செயற்பட்டாலும் இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை தாம் மக்களுடன் அணி திரள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
திருப்பலிப் பூசை ஒன்றின் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித் Reviewed by irumbuthirai on March 23, 2021 Rating: 5

கொரோனாவிலிருந்து குணமடைதல்: இலங்கைக்கு முதலிடம்:

March 23, 2021

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கையானது முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. 
 இலங்கையின் 90,200 கொரோனா நோயாளர்களில் இதுவரை 
86,759 பேர் குணமடைந்துள்ளார்கள். இது 96.52% மாகும். இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முறையே 2ம் 3ம் இடங்களில் உள்ளன.
(Source : அரசாங்க தகவல் திணைக்களம் )
கொரோனாவிலிருந்து குணமடைதல்: இலங்கைக்கு முதலிடம்: கொரோனாவிலிருந்து குணமடைதல்: இலங்கைக்கு முதலிடம்: Reviewed by irumbuthirai on March 23, 2021 Rating: 5

கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப மீண்டும் போட்டிப் பரீட்சை....

March 22, 2021

நாட்டில் காணப்படும் கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்கனவே நடைபெற்ற பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு நேர்முகத் தேர்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்ட போதும் அதற்கு 
அரச சேவை ஆணைக்குழு உடன்படவில்லை என்பதனால் புதிதாக போட்டிப்பரீட்சை நடத்தி அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M. சித்ராநந்த தெரிவித்துள்ளார். 
எனவே இந்தப் போட்டி பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப மீண்டும் போட்டிப் பரீட்சை.... கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்ப மீண்டும் போட்டிப் பரீட்சை.... Reviewed by irumbuthirai on March 22, 2021 Rating: 5

தேசிய கல்வியற் கல்லூரி அனுமதி: இரண்டாவது தொகுதி பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை:

March 21, 2021

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள 2வது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சையானது எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை மற்றும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 
தினங்களில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. 
இதுதொடர்பாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி  தெரிவிக்கையில், 
கடந்த பெப்ரவரி மாதம் 14,15ம் திகதிகளில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் கொடுக்காதவர்களின் வெற்றிடத்திற்கு இஸட் மதிப்பெண் அடிப்படையில் முதல் நிலையில் உள்ளவர்கள் அழைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார். 
இதனடிப்படையில் இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பேரும், கணிதம் கற்கை நெறிக்கு 49 பேரும், வணிகக் கல்விக்கு 20 பேருமாக மொத்தம் 99 பயிலுனர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், இவர்களுக்கான கடிதங்கள் தனித்தனியாக விண்ணப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
இதேவேளை நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணங்களுடனும் காலை 09.00 மணிக்கு சமூகமளிக்குமாறும் கேட்டுள்ளார். 
 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்குமைய கல்வியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 
 அட்டாளைச்சேனை தேசியக் கல்வியக் கல்லூரிக்கு விஞ்ஞானம் கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும், கணித கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும், இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பயிலுனர்களும், ஆரம்பநெறி கற்கை நெறிக்கு 90 பயிலுனர்களும், விசேட கற்கை நெறிகளுக்கு 15 பயிலுனர்களும், வணிகக் கல்விக்கு 20 பயிலுனர்களுமாக மொத்தம் 195 பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி இது தொடர்பில் மேலும் தெரிவித்தார்.
(Source : அரசாங்க தகவல் திணைக்களம்)
தேசிய கல்வியற் கல்லூரி அனுமதி: இரண்டாவது தொகுதி பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை: தேசிய கல்வியற் கல்லூரி அனுமதி: இரண்டாவது தொகுதி பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை: Reviewed by irumbuthirai on March 21, 2021 Rating: 5

Training Programmes (Sri Lanka Institute of Tourism & Hotel Management)

March 21, 2021

Training Programmes (Sri Lanka Institute of Tourism & Hotel Management) 
See the details below.


Training Programmes (Sri Lanka Institute of Tourism & Hotel Management) Training Programmes (Sri Lanka Institute of Tourism & Hotel Management)  Reviewed by irumbuthirai on March 21, 2021 Rating: 5

மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் சிறுவர்களை அனுமதித்தல் - 2021

March 21, 2021

கடந்த 58 வருடங்களாக முஸ்லிம் அனாதை சிறுவர்களை பராமரித்து வழிகாட்டும் மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் அனாதை சிறுவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
தந்தையை இழந்த 6 - 12 வயதுக்கு உட்பட்ட ஆண் பிள்ளைகள் அனுமதிக்கப்படுவர். முழு விபரங்களை கீழே காணலாம்.


மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் சிறுவர்களை அனுமதித்தல் - 2021 மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தில் சிறுவர்களை அனுமதித்தல் - 2021 Reviewed by irumbuthirai on March 21, 2021 Rating: 5

Courses (Ceylon - German Technical Training Institute)

March 21, 2021

Courses (Ceylon - German Technical Training Institute) 
NVQ LEVEL - 5. 
Closing date: 31-03-2021. 
See the details below.


Courses (Ceylon - German Technical Training Institute) Courses (Ceylon - German Technical Training Institute) Reviewed by irumbuthirai on March 21, 2021 Rating: 5

போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்தல்: நேற்று நடைபெற்ற இருவகையான ஆர்ப்பாட்டங்கள்:

March 20, 2021

போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அதிபர்கள், நிர்வாக சங்கங்கள், ஒன்றிணைந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கல்வி அமைச்சின் முன்பாக நேற்று (19) பகல் பேரணியாக வந்தனர். 
அப்போது அவ்விடத்தில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன கல்வி சேவைகள் 
சங்கத்தின் பிரதிநிதிகள் கூடியிருந்தனர். 
பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் அளவுக்கு சென்றது. 
பொலிசாரின் தலையீட்டை தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 இதேவேளை உயர்தரப்பரீட்சை இல்லாமல் நேர்முகப்பரீட்சை மூலம் மாத்திரம் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்க முடியாதா? என்ற அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிரான விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்தல்: நேற்று நடைபெற்ற இருவகையான ஆர்ப்பாட்டங்கள்: போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்தல்: நேற்று நடைபெற்ற இருவகையான ஆர்ப்பாட்டங்கள்: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு:

March 20, 2021

கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக இவ்வருடம் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரையும் பரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஆரம்பமாகி, 
செப்டம்பர் 5 ஆம் திகதி வரையும் ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ளன. 
இம்முறை ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளில், வௌிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 
வௌிநாட்டு பார்வையாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாதென ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் குழுக்களுக்கு ஜப்பான் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு: ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை அனுமதி: Positive ஆவதற்கு முன் இம்ரான் கானும் இதனையே போட்டுக்கொண்டார்:

March 20, 2021

சீனாவினால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான Sinopharm ஐ அவசரத் தேவைக்காக இலங்கையில் பயன்படுத்த ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையினால் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 
06 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 இதேவேளை தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதே சீனாவின் தடுப்பூசியையே சில தினங்களுக்கு முன்னர் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை அனுமதி: Positive ஆவதற்கு முன் இம்ரான் கானும் இதனையே போட்டுக்கொண்டார்: சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை அனுமதி: Positive ஆவதற்கு முன் இம்ரான் கானும் இதனையே போட்டுக்கொண்டார்: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

அரச ஊழியர்கள் பலர் அனுமதியின்றி ஊடகத் துறையில் பணி: வெளியான தகவல்:

March 20, 2021

அண்மையில் வெகுசன ஊடக அமைச்சின் கீழ்  ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் பங்குபற்றுதலுடன் வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் நேற்று (19.03.2021) இடம்பெற்றது. 
 குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 
தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தார். Development Division , Fact Check Division , Social Media Division and News Division என தனித்தனியாக பிரிக்கப்பட்டு குறித்த நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணி உடனுக்குடன் தெரியப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
மேலும் அரச திணைக்களங்கள் அவற்றின் தனித்தனியான இணைய பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களின் மேம்படுத்தல் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டது. 
 இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் , ஒரு நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டின் முக்கிய தூணாக விளங்கும் ஊடகத்துறையினர் சரியான தகவல்களை முறையான வழிமுறையூடாக உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தல் அவசியமானதென குறிப்பிட்டார். ஆனால் தற்போது அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அரச தொலைக்காட்சி , பத்திரிகைகள் போன்றவற்றில் பிரசுரிக்கப்படுவதில்லை எனவும் பல்வேறுபட்ட செய்திகள் முன்னுக்கு பின் முரணாக திரிவுபடுத்தி பிரசுரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 
மேலும் இரு முக்கிய விடயங்களை வெகுசன ஊடகத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்த ஆளுநர் தெரிவிக்ககையில், 
சமூக வலைத்தளங்களில் தவறான மற்றும் வதந்திச்செய்திகள் விரைவாக பகிரப்படுவதாகவும் அதனால் வெளிமுதலீட்டாளர்கள் பலர் தமது முதலீடுகளை இலங்கையில் முதலிட தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்தார். 
அடுத்து மிக முக்கியமாக அரச உத்தியோகத்தர்கள் பலர் அவர்களின் திணைக்கள தலைவர்களின் அனுமதியின்றி ஊடகத்துறையில் பணிபுரிவதாகவும் குறித்த ஊடக நிறுவனங்கள், ஊடக அமைச்சிரினால் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி தான் அறிந்திருக்கவில்லை எனவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 
 அரசாங்கத்தின் வடக்கு மாகாணத்திற்குரிய அபிவிருத்தி தொடர்பான தகவல்கள் அரச ஊடகங்களால் கூட பிரசுரிக்கப்படுவதில்லை என பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் அவ் விடயம் தொடர்பில் தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பததாக கூறினார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
அரச ஊழியர்கள் பலர் அனுமதியின்றி ஊடகத் துறையில் பணி: வெளியான தகவல்: அரச ஊழியர்கள் பலர் அனுமதியின்றி ஊடகத் துறையில் பணி: வெளியான தகவல்: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5
Powered by Blogger.