சா.தர வினாப்பத்திரங்கள் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டு: பதிலளித்த கல்வியமைச்சர்:
irumbuthirai
March 25, 2021
பல மாதங்களாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத நிலையில் கடந்த வருடத்திற்கான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை இம்மாதம் (2021-மார்ச்) நடைபெற்றது.
ஆனால் இந்த பரீட்சைக்கான வினாபத்திரங்கள்
கடுமையானதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருக்கும் குற்றாச்சாட்டு தொடர்பில் அமைச்சர் G.L. பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,
இந்த விடயத்தை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சா.தர வினாப்பத்திரங்கள் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டு: பதிலளித்த கல்வியமைச்சர்:
Reviewed by irumbuthirai
on
March 25, 2021
Rating:
