இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
irumbuthirai
March 25, 2021
இந்தியாவில், 18 மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட 10,787 மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய வகை கொரோனா திரிபு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த 10,787 மாதிரிகளில் 736 பேர் பிரித்தானியாவில்
கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா திரிபுடனும் 34 பேர் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுடனும் ஒருவர் பிரேஸிலில் உருமாறிய கொரோனா திரிபுடனும் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
எனினும், இந்த புதிய வகை வைரஸிற்கும் தொற்று அதிகரிக்கின்றமைக்கும் தொடர்பில்லையெனவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
Reviewed by irumbuthirai
on
March 25, 2021
Rating:
