10,000 மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலைவாய்ப்பு: உ.தரம் சித்தியடைந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு:
irumbuthirai
March 27, 2021
Computer Science (கணினி அறிவியல்) பட்டப்படிப்பிற்காக இம்முறை 10,000 மாணவர்கள் ஒரே தடவையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
திறந்த பல்கலைக்கழகத்துடன் (The Open University of Sri Lanka) இணைந்த வகையில், இப்பட்டப்படிப்பு முன்னெடுக்கப்படும்.
உயர்தர பரீட்சையில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சித்தியடைந்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
இதேவேளை தற்போது,
நாட்டில் கணினி அறிவியல் துறையுடன் தொடர்புபட்ட 40,000 வேலைவாய்ப்புகள் காணப்படுவதாகவும் இதற்கமைய, தற்போது இந்த பட்டப்படிப்பில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களுக்கு முதலாம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்புகள்
வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்த சம்பத் அமரதுங்க மாணவர்கள் பாடநெறியையும் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமெனவும் கூறினார்.
10,000 மாணவர்களுக்கு படிக்கும்போதே வேலைவாய்ப்பு: உ.தரம் சித்தியடைந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு:
Reviewed by irumbuthirai
on
March 27, 2021
Rating: