ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
irumbuthirai
April 10, 2021
ஹிஜ்ரி 1442 ஆம் வருட புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நாளை மறுதினம் (12) திங்கட்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ளது.
இதில் அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம்
என்பவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் 0112451245, 0777316415 எனும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை பிறை தென்பட்டமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் வழங்கப்படும் எனவும் பிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ வதந்திகளையோ பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
Reviewed by irumbuthirai
on
April 10, 2021
Rating: