Vacancies: Uva-Wellassa University

April 12, 2021

Academic Vacancies: Uva-Wellassa University. 
Closing date: 10-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Uva-Wellassa University Vacancies: Uva-Wellassa University Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

சீனாவின் தடுப்பூசிகள் சிறப்பாக இல்லை: முதன்முதலாக ஒப்புக்கொண்டது சீனா:

April 12, 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாகவும் அதிக பாதுகாப்பை வழங்கவில்லை எனவும் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் காவ் ஃபூ தெரிவித்துள்ளார். 
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இதுவரை சீனா 04 கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அதை 
பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த தடுப்பூசிகளை வெளிநாட்டில் பரிசோதனை செய்த போது, சில பரிசோதனைகளில் அதன் செயல் திறன் 50% வரை குறைவாக உள்ளது தெரியவந்தது. 
இதேவேளை கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பல தடுப்பூசிகளை சேர்த்து பயன்படுத்த சீனா ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். 
இத்தனை விவரங்களைக் கூறிய பிறகு, தான் கூறிய கருத்துகளிலிருந்து பின்வாங்கிய காவ் ஃபூ, "உலகம் பூராகவும் தடுப்பூசிகளின் செயல்திறன் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் இருந்திருக்கின்றன" என்று அரச ஊடகத்திற்கு செவ்வி வழங்கியுள்ளார். தான் கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார். 
சீனாவின் தடுப்பூசிகளில் ஒன்றான சினோவேக் ஐ பிரேசிலில் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதன் செயல்திறன் 50.4% ஆகவே காட்டியது. 
இதேவேளை இலங்கையும் கொரோனா தடுப்பூசிகளை சீனாவிலிருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தடுப்பூசிகள் சிறப்பாக இல்லை: முதன்முதலாக ஒப்புக்கொண்டது சீனா: சீனாவின் தடுப்பூசிகள் சிறப்பாக இல்லை: முதன்முதலாக ஒப்புக்கொண்டது சீனா: Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

ரயில் பயணிகளுக்காக அறிமுகமான அவசர தொலைபேசி இலக்கம்

April 12, 2021

ரயில் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவும் ரயில் பயணிகளின் அவசர சந்தர்ப்பங்களின் போதும் பயன்படுத்த 1971 என்ற அவசர தொலைப்பேசி இலக்கம் ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இதுமாத்திரமன்றி ரயில்வே திணைக்களத்துடன் தொடர்புடைய சகலவித முறைப்பாடுகளுக்கும் 
இந்த தொலைப்பேசி இலக்கத்தை பயன்படுத்தலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்காக அறிமுகமான அவசர தொலைபேசி இலக்கம் ரயில் பயணிகளுக்காக அறிமுகமான அவசர தொலைபேசி இலக்கம் Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம்

April 12, 2021

நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார். 
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம் சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம் Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS): இணைப்பு மொழி (ஆங்கிலம் ) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு:

April 12, 2021

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (Sri Lanka Education Administrative Service - SLEAS) 111ம் தரத்திற்குரிய இணைப்பு மொழிப் (ஆங்கிலம்) பரீட்சைக்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
மேற்படிப்பு பரீட்சையானது எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS): இணைப்பு மொழி (ஆங்கிலம் ) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு: இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS): இணைப்பு மொழி (ஆங்கிலம் ) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) போட்டிப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

April 12, 2021

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) 111 ம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குரிய திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
மேற்படி பரீட்சை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை 09 மாகாணங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) போட்டிப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) போட்டிப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா?

April 11, 2021

அதிகமாக ஸ்மார்ட் போன்களை பாவிப்பது பல்வேறு நீண்ட நாள் நோய்களுக்கு வழிவகுக்கும் என குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர் லசந்த விஜேசேகர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் புற்றுநோய், ஆண்மை குறைவு ஏற்படுத்தல், மூளை தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய், குழந்தைகளில் கவனம் குறைதல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம். எனவே இதை முறையாக அளவோடு பாவிக்க பழகிக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா? எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா? Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான திகதி அறிவிப்பு:

April 11, 2021

இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இந்த பரீட்சையை கொழும்பில் நடாத்த பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான திகதி அறிவிப்பு: இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 மே மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்)

April 11, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2021 மே மாதத்தில் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
Examinations calendar for the month of May, 2021. 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 மே மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 மே மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

GRADUATES TEACHING APPOINTMENTS IN THE WESTERN PROVINCE - 2021/2022. (பட்டதாரி ஆசிரியர் நியமனம் - 2021/22)

April 11, 2021

OPEN COMPETITIVE EXAMINATION FOR THE RECRUITMENT OF GRADUATES FOR GRADE 1 (A ) OF CLASS 3 VACANCIES OF THE SRI LANKA TEACHERS’ SERVICE IN PROVINCIAL COUNCIL SCHOOLS IN THE WESTERN PROVINCE - 2021/2022 
Age: 18-40. 
Closing date of online applying - 10.05.2021 
Medium: Tamil, Sinhala and English. 
Online application: http://www.psc.wp.gov.lk/ 
Click the link below for more details.
GRADUATES TEACHING APPOINTMENTS IN THE WESTERN PROVINCE - 2021/2022. (பட்டதாரி ஆசிரியர் நியமனம் - 2021/22) GRADUATES TEACHING APPOINTMENTS IN THE WESTERN PROVINCE - 2021/2022. (பட்டதாரி ஆசிரியர் நியமனம் - 2021/22) Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

Competitive Examination for Promotion to the Supra Grade of Management Services Officers’ Service on Merit - 2019 (2020)

April 11, 2021

Competitive Examination for Promotion to the Supra Grade of Management Services Officers’ Service on Merit - 2019 (2020) 
Circular Number: 07/2021. 
Circular Date: 2021-04-09. 
Application closing date: 2021-05-10. 

திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவி உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை - 2019 (2020) 
சுற்றறிக்கையை தமிழில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Competitive Examination for Promotion to the Supra Grade of Management Services Officers’ Service on Merit - 2019 (2020) Competitive Examination for Promotion to the Supra Grade of Management Services Officers’ Service on Merit - 2019 (2020) Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

பரீட்சைக்கு தயாராக போதுமான கால அவகாசம்... மேல் மாகாணத்தில் 130 நாட்களே பாடசாலை...

April 10, 2021

இந்த வருடத்திற்கான சகல தேசிய பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதோடு பாடசாலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடத்தின் தேசிய பரீட்சைகள் எதுவும் உரிய காலத்தில் இடம்பெறவில்லை. அதேபோன்று இந்த வருடத்திற்கான தேசியப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. 
வருடத்திற்கு பொதுவாக 200 நாட்கள் பாடசாலைகள் நடக்க வேண்டும். ஆனால் இவ்வருடம் அதை 150 நாட்களாக குறைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் அது 130 நாட்களாக குறைந்துள்ளது. 
எனவே இவ்வருடம் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைக்கு தயாராக போதுமான கால அவகாசம்... மேல் மாகாணத்தில் 130 நாட்களே பாடசாலை... பரீட்சைக்கு தயாராக போதுமான கால அவகாசம்... மேல் மாகாணத்தில் 130 நாட்களே பாடசாலை... Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

இம்முறை நடைபெறும் IPL 2021 போட்டிகள் பற்றி...

April 10, 2021

2021 ற்கானதும் 14வதுமான IPL போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. இந்தப் போட்டிகள் எதிர்வரும் மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 60 
போட்டிகள் இடம்பெறும். மொத்தமாக 08 அணிகள் கலந்து கொள்ளும். 
போட்டிகள் மும்பை, சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், புதுடில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இம்முறை நடைபெறும் IPL 2021 போட்டிகள் பற்றி... இம்முறை நடைபெறும் IPL 2021 போட்டிகள் பற்றி... Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5
Powered by Blogger.