சரத் வீரசேகரவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு!
irumbuthirai
April 15, 2021
அடிப்படைவாதங்களுக்கு துணைபோகும் மேலும் பல அமைப்புக்கள் மற்றும் நபர்கள் இருப்பதாகவும் அவையும் விரைவில் தடைசெய்யப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசுவோர், பணம் சேகரிப்போர்
மற்றும் தீவிரவாதத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்போருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தங்களைக் கொண்டுவரும் யோசனை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சரத் வீரசேகரவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு!
Reviewed by irumbuthirai
on
April 15, 2021
Rating: