தேவைப்பட்டால் கோத்தாபய ஹிட்லராக மாறுவார்... அமைச்சரின் கூற்றுக்கு ஜேர்மன் தூதுவரின் பதில்....
irumbuthirai
April 17, 2021
சர்வாதிகாரி போல செயற்படுவாரென எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர். ஆனால் இன்று மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர். அவர் ஹிட்லர் போல செயற்பட்டால்
யாரும் குறைகூறமாட்டார்கள். ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செயற்பட விரும்பவில்லை. தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டரில் கருத்தொன்றை பதிவிட்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட்,
"ஹிட்லர் ஒருவர் இருந்தால் அது இலங்கைக்கு நன்மைபயக்கும் விடயம் என தெரிவிக்கப்படுவதை அறிந்தேன்.
இவ்வாறான கருத்தை தெரிவிப்பவர்களிற்கு நான் ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன் – மில்லியன் கணக்கான இறப்புகளுக்கும் கற்பனைக்கு அப்பாற்றபட்ட மனித துயரங்களுக்கும் காரணமானவர் ஹிட்லர்.
எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் நிச்சயமாக முன்மாதிரியில்லை" என அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் கோத்தாபய ஹிட்லராக மாறுவார்... அமைச்சரின் கூற்றுக்கு ஜேர்மன் தூதுவரின் பதில்....
Reviewed by irumbuthirai
on
April 17, 2021
Rating: