நடிகர் விவேக் காலமானார்!
irumbuthirai
April 17, 2021
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (16) காலை சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (17) அதிகாலை
4.35 மணியளவில் உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 59.
- 1961ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தார்.
- 1987ல் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
- தலைமைச் செயலக ஊழியராகவும் 1986-92 வரை பணியாற்றியுள்ளார்.
- கதாநாயகனாக வெள்ளைப்பூக்கள், நான்தான் பாலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
- நகைச்சுவையுடன் இணைத்து சமூகக் கருத்துக்களையும் சொல்லி சின்ன கலைவானர் என்ற பெயரையும் பெற்றார்.
- 2009 ல் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றார்.
- சிறந்த நகைச்சுவை நடிகருக்காக மாநில அரசின் விருதை 5 தடவை பெற்றவர்.
- இதுவரை 220-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- இறுதியாக 2020ல் தாராளப் பிரபு என்ற படத்தில் நடித்திருந்தார்.
- இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார்.
- மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.
- கொரோனா பாதுகாப்பு, பிளாஸ்டிக் இல்லா தமிழகம் போன்ற விழிப்புணர்வு குறும் படங்களிலும் நடித்து சமூகப் பணியாற்றினார்.
சிறந்த ஒரு கலைஞரை சமூக சேவகரை திரையுலகம் இழந்து நிற்கிறது.
நடிகர் விவேக் காலமானார்!
Reviewed by irumbuthirai
on
April 17, 2021
Rating: