23-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

April 24, 2021

23-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 23-04-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
23-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 23-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on April 24, 2021 Rating: 5

525 ஆசிரியர் வெற்றிடங்கள்: விண்ணப்பித்தவர்கள் 260 பேர் மட்டுமே:

April 24, 2021

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் 200 காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 525ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆனால் அதற்காக 260பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர் என சப்ரகமுவ மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரட்ன தெரிவித்துள்ளார். 
குருவிட்ட கீரைகலை தமிழ் வித்தியாலயத்தில் 63இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக்கட்டடத்தின் திறப்பு விழாவில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இந்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்க ஆசிரியர் உதவியாளர்களை 
நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
525 ஆசிரியர் வெற்றிடங்கள்: விண்ணப்பித்தவர்கள் 260 பேர் மட்டுமே: 525 ஆசிரியர் வெற்றிடங்கள்: விண்ணப்பித்தவர்கள் 260 பேர் மட்டுமே: Reviewed by irumbuthirai on April 24, 2021 Rating: 5

சா.தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் 2ம் கட்டம் தொடர்பாக...

April 23, 2021

கடந்த மாதம் (மார்ச்) நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
23 நிலையங்களில் மொத்தமாக 4,620 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சா.தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் 2ம் கட்டம் தொடர்பாக... சா.தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் 2ம்  கட்டம் தொடர்பாக... Reviewed by irumbuthirai on April 23, 2021 Rating: 5

தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைப்பு

April 23, 2021

தபால் விநியோகம், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். 
கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் 
இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 
நிலவும் வெற்றிடத்திற்கமைய அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைப்பு தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைப்பு Reviewed by irumbuthirai on April 23, 2021 Rating: 5

விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைகளில் இணைக்கும் திட்டம்

April 23, 2021

விசேட தேவையுடைய சிறுவர்கள் பாடசாலைக் கல்விக்கு உட்படுத்தப்படாதுள்ளமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர்களை பாடசாலைகளில் இணைக்கும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சுடன் நவஜீவன அமைப்பு இணைந்து இத்திட்டத்தினை செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைகளில் இணைக்கும் திட்டம் விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைகளில் இணைக்கும் திட்டம் Reviewed by irumbuthirai on April 23, 2021 Rating: 5

சீன தூதர் தங்கியிருந்த ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல்

April 22, 2021

சீன தூதர் உட்பட சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் தங்கியிருந்த ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ஒரு 
ஹோட்டலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 எவ்வாறாயினும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் ஹோட்டலில் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
சீன தூதர் தங்கியிருந்த ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் சீன தூதர் தங்கியிருந்த ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

கொரோனா தீவிரம்: IDH வைத்தியசாலையில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு:

April 22, 2021

120 நோயாளர்களுக்கு இடவசதி காணப்படும் கொழும்பு IDH வைத்தியசாலையில் தற்போதைய நிலையில் 138 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
அதிதீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ள 08 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. அங்கு சுமார் 20% நோயாளிகளுக்கு 
பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலைமையில் பிராணவாயுவின் தேவை அங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தீவிரம்: IDH வைத்தியசாலையில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு: கொரோனா தீவிரம்: IDH வைத்தியசாலையில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு: Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

தீவிரமடையும் கொரோனா: பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மேலும் இரு வாரங்கள் ஒத்திவைப்பு:

April 22, 2021

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து இன்று காலை தமக்கு கிடைக்கப் பெற்ற ஆலோசனைக்கமைய, பல்கலைக்கழகங்களை மீள திறப்பதை மேலும் 02 வாரங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். 
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் சகல பல்கலைக்கழக உப பீடாதிபதிகளுக்கும் இந்த அறிவித்தலை விடுப்பதோடு, 02 வாரங்களில் நிலைமைகளை அவதானித்ததன் பின்னர் சகல பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மாதம் 27 ஆம் திகதி நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் கொரோனா: பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மேலும் இரு வாரங்கள் ஒத்திவைப்பு: தீவிரமடையும் கொரோனா: பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மேலும் இரு வாரங்கள் ஒத்திவைப்பு: Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம்

April 22, 2021

மத்திய சுற்றாடல் அதிகார சபையும் தேசிய கல்வியியல் கல்லூரிகளும் இணைந்து ஆசிரியர்களுக்கான 03 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. 
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றாடல் குறித்த அறிவை வழங்குவது இதன் நோக்கமாகும். 
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ்.அமரசிங்க அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (22) காலை சுற்றாடல் அதிகார சபையில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம் ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம் Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

உயிருள்ளவரை இறந்ததாக கூறி சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை

April 22, 2021

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்ததால் மயக்கமடைந்த ஒரு நோயாளி இறந்து விட்டதாக கூறி சவச்சாலைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீர்கொழும்பு மருத்துவமனையில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்றது. 
தற்போது குறித்த மருத்துவர் தற்காலிகமாக புத்தளம் பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை முடியும் வரை இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருள்ளவரை இறந்ததாக கூறி சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை உயிருள்ளவரை இறந்ததாக கூறி சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை  Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு:

April 22, 2021

இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
அதன்படி எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த பரீட்சையை கொழும்பில் நடாத்த பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கனவே இந்த பரீட்சை மே 22 சனிக்கிழமை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு: இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கான (SLTES) திறந்த போட்டிப் பரீட்சை

April 22, 2021

மேற்படி போட்டிப் பரீட்சை இம்மாதம் 25ஆம் திகதி கொழும்பு உட்பட பிரதான 09 நகரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. இது கிடைக்காதவர்கள் ஒன்லைன் (Online) மூலமும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் தேசிய அடையாள அட்டையை உட்செலுத்துவதன் மூலம் அனுமதி அட்டையை பெறலாம்.
ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கான (SLTES) திறந்த போட்டிப் பரீட்சை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கான (SLTES) திறந்த போட்டிப் பரீட்சை  Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

SELECTED LIST OF STUDENTS FOR COURSES (SLIATE) / இலங்கை உயர் தொழினுட்பவியல் கல்வி நிறுவகத்தில் பாடநெறிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டோர் விபரம்

April 22, 2021

Registration of students for the 2020 academic year is now underway. The lists of students are mentioned below and the next eligible candidates will be given the opportunity to replace the absentees by the time and dates given for registration from each ATI. Therefore, you are advised to go to the relevant ATI on the due date and time and register.
Click the link below for selected list:
SELECTED LIST OF STUDENTS FOR COURSES (SLIATE) / இலங்கை உயர் தொழினுட்பவியல் கல்வி நிறுவகத்தில் பாடநெறிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் SELECTED LIST OF STUDENTS FOR COURSES (SLIATE) / இலங்கை உயர் தொழினுட்பவியல் கல்வி நிறுவகத்தில் பாடநெறிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.