கொரோனா தொற்று உறுதியாகியும் இதுவரை அழைத்துச்செல்லப்படாதவர்களுக்கான அறிவித்தல்...

May 03, 2021

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் இதுவரை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படாதவர்ளுக்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
1906 என்ற விஷேட இலக்கத்திற்கு அழைத்து இது தொடர்பில் தெரிவிக்கலாம் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியாகியும் இதுவரை அழைத்துச்செல்லப்படாதவர்களுக்கான அறிவித்தல்... கொரோனா தொற்று உறுதியாகியும் இதுவரை அழைத்துச்செல்லப்படாதவர்களுக்கான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on May 03, 2021 Rating: 5

10 இலட்சம் வென்ற 13 வயது சிறுவன்...

May 02, 2021

பிரஷஸ்த கவிஷ்யாத் என்ற 13 வயது மாணவன் சிரச தொலைக்காட்சியின் லக்ஷபதி நிகழ்சியில் 1 மில்லியன் (10 இலட்சம்) பரிசை வென்றுள்ளார். 
இவர் கொழும்பு ஆனந்த கல்லூரி மாணவனாவார்.
10 இலட்சம் வென்ற 13 வயது சிறுவன்... 10 இலட்சம் வென்ற 13 வயது சிறுவன்... Reviewed by irumbuthirai on May 02, 2021 Rating: 5

இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான அறிவித்தல்..

May 02, 2021

கொவிட் தொற்றை கருத்திற் கொண்டு நாட்டிலுள்ள சகல இந்து அறநெறிப் பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு புத்தசாசன மற்றும் சமய கலாசார விவகார அமைச்சு அறிவித்துள்ளது. 
குறித்த அமைச்சின் இந்து மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளரான இராமச்சந்திர குருக்கள் பாபுஷர்மா இதனை உறுதிப்படுத்தினார்.
இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான அறிவித்தல்.. இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on May 02, 2021 Rating: 5

ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை

May 02, 2021

ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் கொரோனா நோயாளர்களை அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான அனுமதியை கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை Reviewed by irumbuthirai on May 02, 2021 Rating: 5

மே 07க்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா? முரண்படும் அறிவிப்புகள்

May 02, 2021

தற்போதுள்ள கொரோனா பரவல் நிலைமைகளில் மே 03 - 07 வரையான காலப்பகுதியில் பாடசாலைகளைத் திறப்பது உகந்ததல்ல எனத் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் மே 07ம் தேதி வரை பாடசாலைகளை தொடர்ந்து மூட தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்திருந்தார். 
ஆனால் நேற்றைய தினம் சுகாதார பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டல்களிலே பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புகள் போன்ற அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த இரண்டு மாறுபட்ட அறிவித்தல்களையும் நோக்கும்போது தற்போதைய நிலையில் மே 7ற்கு பிறகும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்பதில் சந்தேகமே நிலவுகிறது.
மே 07க்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா? முரண்படும் அறிவிப்புகள் மே 07க்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா? முரண்படும் அறிவிப்புகள் Reviewed by irumbuthirai on May 02, 2021 Rating: 5

முதல் முறையாக முடக்கப்பட்டது துருக்கி!

April 30, 2021

ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றாளர்கள் திடீரென அதிகரித்ததை அடுத்து ஏப்ரல் 29 முதல் துருக்கி முதன்முறையாக முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் மே 17 வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அங்கு இதுவரை 4.7 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 39,000 ற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரண வீதம் 0.8% ஆகும். 
கடந்த ஆண்டு மாத்திரம் சுற்றுலாத்துறை 70 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 
எவ்வாறாயினும் அங்குள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பு காரணமாக நிலைமை இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் முறையாக முடக்கப்பட்டது துருக்கி! முதல் முறையாக முடக்கப்பட்டது துருக்கி! Reviewed by irumbuthirai on April 30, 2021 Rating: 5

அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் முறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை (சுற்றறிக்கை இணைப்பு)

April 28, 2021

தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்தனசிறியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 
இதேவேளை ஏற்கனவே வெளியிடப்பட்ட 02/2021 இலக்கம் கொண்ட அரச சேவையை தடையின்றி நடந்து செல்லல் என்ற தலைப்பில் வெளியான சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஊழியர் ஒருவருக்கு வாரத்துக்கு 02 நாட்கள் என்ற அடிப்படையில் மாதத்திற்கு உயர்ந்த பட்சமாக 08 நாட்கள் வேலைக்கு சமூகமளிக்காதிருக்கலாம். இதனை அவர்களது சொந்த லீவில் கழிக்கக் கூடாது எனவும் புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 வேலைக்கு வராத நாட்கள் வீட்டிலிருந்தே இணையம் மூலமாக வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். 
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாத ஊழியர் ஒருவர் வேறு காரணங்களுக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் குறித்த காலத்தை சம்பளத்துடனான விடுமுறையாக கருத வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.



அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் முறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை (சுற்றறிக்கை இணைப்பு) அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் முறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார் ஹரின் பெர்னாண்டோ!

April 28, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார் ஹரின் பெர்னாண்டோ! அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார் ஹரின் பெர்னாண்டோ! Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

அதிகளவான கர்ப்பிணிகளை கடுமையாகத் தாக்கும் தற்போதைய கொரோனா..

April 28, 2021

தற்போது பரவும் கொரோனா வைரஸ் நாட்டில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விசேடமாக அவர்களின் நுரையீரலுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விஷேட வைத்தியர் மயுரமான தெவொலகே தெரிவித்துள்ளார். 
தற்போதைய நிலையில் அதிகளவான கர்ப்பிணித் தாய்மார்கள் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகளவான கர்ப்பிணிகளை கடுமையாகத் தாக்கும் தற்போதைய கொரோனா.. அதிகளவான கர்ப்பிணிகளை கடுமையாகத் தாக்கும் தற்போதைய கொரோனா.. Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

இந்திய தடுப்பூசி: இன்று முதல் ஆரம்பமாகிறது 2ஆம் சொட்டு வழங்கல்:

April 28, 2021

இந்திய தடுப்பூசியான Oxford Astra Zeneca தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு இன்று (28) முதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்காக மூன்றரை இலட்சம் தடுப்பூசிகள் இருப்பதாகவும் மே மாத இறுதி வரையில் அவை போதுமானது எனவும் அவர் தெரிவித்தார். 
இதன் முதலாவது சொட்டு பெற்றுக்கொண்ட ஒழுங்கிலேயே 2வது சொட்டும் வழங்கப்படும் எனவும் அந்த அடிப்படையில் சுகாதார தரப்பினருக்கு முதலில் அதை வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய தடுப்பூசி: இன்று முதல் ஆரம்பமாகிறது 2ஆம் சொட்டு வழங்கல்: இந்திய தடுப்பூசி: இன்று முதல் ஆரம்பமாகிறது 2ஆம் சொட்டு வழங்கல்: Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்ட மற்றுமொரு பரீட்சை

April 28, 2021

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படவிருந்த சகல மொழித் தேர்ச்சி பரீட்சைகள் மற்றும் குறித்த திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய பரீட்சைகள் என்பன காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
குறித்த பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட மற்றுமொரு பரீட்சை ஒத்திவைக்கப்பட்ட மற்றுமொரு பரீட்சை Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

மூடப்படும் அரச வெளியீட்டு விற்பனை கருமபீடம்!

April 27, 2021

அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளாகத்தில் செயற்படும் அரச வெளியீட்டு அலுவலகத்திற்குரிய விற்பனை கருமபீடம் நாளை (28) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படும் அரச வெளியீட்டு விற்பனை கருமபீடம்! மூடப்படும் அரச வெளியீட்டு விற்பனை கருமபீடம்! Reviewed by irumbuthirai on April 27, 2021 Rating: 5

சகல பாடசாலைகளையும் மூடல்: கட்டங்கட்டமாக வந்த அறிவிப்புகள் அமைச்சரவையில் முழுமையானது:

April 27, 2021

இம்மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 
இம்மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அத்துடன் சகல தனியார் வகுப்புகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
ஏற்கனவே வலய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் பாடசாலைகளை 
மூடுவதற்கு சம்பந்தப்பட்ட ஆளுநர்களால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லமும் அறிவித்துள்ளது.
சகல பாடசாலைகளையும் மூடல்: கட்டங்கட்டமாக வந்த அறிவிப்புகள் அமைச்சரவையில் முழுமையானது: சகல பாடசாலைகளையும் மூடல்: கட்டங்கட்டமாக வந்த அறிவிப்புகள் அமைச்சரவையில் முழுமையானது: Reviewed by irumbuthirai on April 27, 2021 Rating: 5
Powered by Blogger.