குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்: நாட்டு நிலைமையால் பார்க்க செல்லாத ஜனாதிபதி:

May 09, 2021

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 
தனது பேத்தியை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அமெரிக்கா சென்றுள்ளார். 
ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்த நிலையில் நாட்டில் நிலவும் கொரோனா நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்: நாட்டு நிலைமையால் பார்க்க செல்லாத ஜனாதிபதி: குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்: நாட்டு நிலைமையால் பார்க்க செல்லாத ஜனாதிபதி: Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை....

May 09, 2021

கொரோனா நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பாக முறையான திட்டமொன்றை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 
இதேவேளை, நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை.... கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை.... Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

ஒரே தடவையில் 9 குழந்தைகளைப் பெற்ற பெண்

May 08, 2021

வரலாற்றில் இதுவரை மலேசியாவில் ஒரு பெண்ணுக்கும் அவுஸ்திரேலியாவில் ஒரு பெண்ணுக்கும் மட்டுமே ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் கிடைத்துள்ளன. எனினும் அந்தக் குழந்தைகள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. 
ஆனால் தற்போது மாலி நாட்டைச் சோ்ந்த ஹலீமா சிஸ் (Halima Cisse) என்ற 25 வயதான பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (04) பிறந்துள்ளன. 
7 குழந்தைகள் பிறக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டு வந்த நிலையில் 5 பெண் மற்றும் 4 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் இந்த குழந்தைகள் அனைத்தும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே தடவையில் 9 குழந்தைகளைப் பெற்ற பெண் ஒரே தடவையில் 9 குழந்தைகளைப் பெற்ற பெண் Reviewed by irumbuthirai on May 08, 2021 Rating: 5

திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை!

May 06, 2021

தற்போது நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு ஆசிரியர் கலாசாலைகளின் (Teacheers' College) இறுதி ஆண்டு பரீட்சையை திகதி குறிப்பிடாது ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இம்மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இது நடத்தப்படவிருந்தது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான பரீட்சையே இவ்வாறு திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை! திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை! Reviewed by irumbuthirai on May 06, 2021 Rating: 5

03-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 05, 2021

03-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



03-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 03-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 05, 2021 Rating: 5

தனிமைப்படுத்தப்படும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம்

May 05, 2021

தனியார் துறை நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அக்காலப்பகுதிக்கும் சம்பளத்தை வழங்க வேண்டும் என தொழில் ஆணையாளர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 
இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறும் தொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தனிமைப்படுத்தப்படும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தனிமைப்படுத்தப்படும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் Reviewed by irumbuthirai on May 05, 2021 Rating: 5

2020 உயர் தரப் பரீட்சை: தேசிய ரீதியில் முதலிடம் பெற்றோர்:

May 05, 2021

கடந்த வருடம் (2020) நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04) வெளியிடப்பட்டன. 
இதில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 178,337 மாணவர்களும் பழைய பாடத் திட்டத்தின் கீழ் 15,960 மாணவர்களும் மொத்தமாக 194,297 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். 
அந்தவகையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரங்களை இங்கு தருகிறோம். 
1) Arts- சமல்கா செவ்மினி (தெஹிவளை      
     Presbyterian மகளீர் கல்லூரி) 
2) Commerce - அமன்தி மதநாயக்க ( காலி 
     சங்கமித்தா மகளீர் பாடசாலை) 
3)Maths- தனராஜ் சுந்தர்பவன் (சாவகச்சேரி       இந்துக் கல்லூரி ) 
4) Bio Science: Praveen Wijesinghe (Royal college.       Colombo 07.)
5) B- Tech: சுகிகா சந்தசரா ( ஹொரணை 
     தக்ஷிலா கல்லூரி) 
6) E- Tech: அவிஷ்க சானுக (ஹொரணை 
     தக்ஷிலா கல்லூரி) 




2020 உயர் தரப் பரீட்சை: தேசிய ரீதியில் முதலிடம் பெற்றோர்: 2020 உயர் தரப் பரீட்சை: தேசிய ரீதியில் முதலிடம் பெற்றோர்: Reviewed by irumbuthirai on May 05, 2021 Rating: 5

சா.தர மற்றும் உ.தர பரீட்சை புதிய நடைமுறையில் எப்போது அமுலாகும்? கல்வியமைச்சின் செயலாளரின் பதில்

May 04, 2021

சாதாரண தர பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடாத்தும் புதிய நடைமுறை இந்த வருடம் அமுல்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இது அடுத்த வருடமோ அல்லது 2023ம் ஆண்டிலிருந்துதான் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
தரம் 10, 11 க்குரிய பாடத்திட்டத்திற்கான கால எல்லையை 1 வருடமும் 9 மாதங்களாக குறைத்து சாதாரண தர பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடத்த அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சா.தர மற்றும் உ.தர பரீட்சை புதிய நடைமுறையில் எப்போது அமுலாகும்? கல்வியமைச்சின் செயலாளரின் பதில் சா.தர மற்றும் உ.தர பரீட்சை புதிய நடைமுறையில் எப்போது அமுலாகும்? கல்வியமைச்சின் செயலாளரின் பதில்   Reviewed by irumbuthirai on May 04, 2021 Rating: 5

வெளியாகின 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ (பூரண விளக்கங்களுடன்)

May 04, 2021

கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 
இதனை பெற்றுக் கொள்ளும் வழிகள் இதோ... 
(01) பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. (லிங்கை கிளிக் செய்து வருகின்ற பக்கத்தில் பரீட்சையையும் வருடத்தையும் தெரிவுசெய்து சுட்டெண்ணை உள்ளீடு செய்க)

(02) SMS முறையில் பார்வையிட... (EXAMS என Type செய்து சுட்டெண்ணையும் Type செய்து உரிய இலக்கத்திற்கு SMS செய்க)
  • (1) Mobitel: EXAMS and send to 8884. 
  • (2) Dialog: EXAMS and send to 7777. 
  • (3) Airtel: EXAMS and send to 7545. 
  • (4) Hutch (078): EXAMS and send to 8888. 
  • (5) Hutch (072): EXAMS and send to 3926.





வெளியாகின 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ (பூரண விளக்கங்களுடன்) வெளியாகின 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ (பூரண விளக்கங்களுடன்) Reviewed by irumbuthirai on May 04, 2021 Rating: 5

கொரோனா தொற்று உறுதியாகியும் இதுவரை அழைத்துச்செல்லப்படாதவர்களுக்கான அறிவித்தல்...

May 03, 2021

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் இதுவரை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படாதவர்ளுக்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
1906 என்ற விஷேட இலக்கத்திற்கு அழைத்து இது தொடர்பில் தெரிவிக்கலாம் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியாகியும் இதுவரை அழைத்துச்செல்லப்படாதவர்களுக்கான அறிவித்தல்... கொரோனா தொற்று உறுதியாகியும் இதுவரை அழைத்துச்செல்லப்படாதவர்களுக்கான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on May 03, 2021 Rating: 5

10 இலட்சம் வென்ற 13 வயது சிறுவன்...

May 02, 2021

பிரஷஸ்த கவிஷ்யாத் என்ற 13 வயது மாணவன் சிரச தொலைக்காட்சியின் லக்ஷபதி நிகழ்சியில் 1 மில்லியன் (10 இலட்சம்) பரிசை வென்றுள்ளார். 
இவர் கொழும்பு ஆனந்த கல்லூரி மாணவனாவார்.
10 இலட்சம் வென்ற 13 வயது சிறுவன்... 10 இலட்சம் வென்ற 13 வயது சிறுவன்... Reviewed by irumbuthirai on May 02, 2021 Rating: 5

இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான அறிவித்தல்..

May 02, 2021

கொவிட் தொற்றை கருத்திற் கொண்டு நாட்டிலுள்ள சகல இந்து அறநெறிப் பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு புத்தசாசன மற்றும் சமய கலாசார விவகார அமைச்சு அறிவித்துள்ளது. 
குறித்த அமைச்சின் இந்து மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளரான இராமச்சந்திர குருக்கள் பாபுஷர்மா இதனை உறுதிப்படுத்தினார்.
இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான அறிவித்தல்.. இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on May 02, 2021 Rating: 5

ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை

May 02, 2021

ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் கொரோனா நோயாளர்களை அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான அனுமதியை கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை Reviewed by irumbuthirai on May 02, 2021 Rating: 5
Powered by Blogger.