எச்சரிக்கை!!! இலங்கைக்கு அடுத்த மாதம் காத்திருக்கும் உச்சகட்ட ஆபத்து!
irumbuthirai
May 09, 2021
இலங்கையில் Covid தொற்றால் நாளாந்தம் மரணிப்போரின் எண்ணிக்கை அடுத்த மாதமளவில் (ஜூன்) 200 ஐத் தாண்டும் என வோஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐஎச்எம்ஈ (IHME) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து இந்த எதிர்வுகூறலை முன்வைத்துள்ளது.
அதிலும் ஜூன்14 ம் திகதியளவில் இலங்கையில் நாளாந்த உயிரிழப்பு உச்சத்தை அடையும். அதாவது சுமார் 264 பேர் நாளாந்தம் உயிரிழப்பர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 1ம் திகதிக்குள் இலங்கையில் 20876 பேர் கொரோனா வைரசினால் உயிரிழப்பார்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 16 ம் திகதியளவில் மருத்துவமனை பயன்பாடு உச்சத்தை அடையும்.
எவ்வாறாயினும் நாளாந்த உயிரிழப்புகள் பின்னர் 88 ஆக குறையும் எனவும் IHME தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை!!! இலங்கைக்கு அடுத்த மாதம் காத்திருக்கும் உச்சகட்ட ஆபத்து!
Reviewed by irumbuthirai
on
May 09, 2021
Rating: