திருமண நிகழ்வுகளுக்கு தடை! ஆனால் பதியலாம்!

May 13, 2021

கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இம்மாதம் (மே) 31ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளிலே திருமண நிகழ்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் திருமண பதிவுகளை செய்யலாம். அதில் பதிவாளர் உட்பட 15 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வுகளுக்கு தடை! ஆனால் பதியலாம்! திருமண நிகழ்வுகளுக்கு தடை! ஆனால் பதியலாம்! Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ...

May 13, 2021

இன்று (13) முதல் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை மீண்டும் அமுலாகிறது. 
பயணக் கட்டுப்பாடில்லாத நேரங்களிலேயே வீட்டிலிருந்து வெளியே செல்ல இந்த முறை பயன்படுத்தப்படும். 
அதுமட்டுமன்றி வெளியே செல்லும்போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை அனைவரும் வைத்திருப்பது கட்டாயமாகும். 
வீட்டிலிருந்து வெளியே செல்ல தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தும் முறை இதோ ... 
அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 0,2,4,6,8 போன்ற இரட்டை எண்களில் ஏதாவது ஒரு எண்ணாக இருந்தால் அவர்கள் இரட்டை இலக்க தினங்களில் வெளியே செல்லலாம். 
அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 1,3,5,7,9 ஆகிய ஒற்றை எண்களில் ஏதாவது ஒரு எண்ணாக இருந்தால் அவர்கள் ஒற்றை இலக்க தினங்களில் வெளியே செல்லலாம். 
உதாரணமாக இன்று 13ஆம் தேதி ஒற்றை இலக்க தினமாகும். எனவே கடைசி இலக்கம் ஒற்றை இலக்கமாக கொண்டவர்கள் வெளியே செல்லலாம் அதுவும் பயணக் கட்டுப்பாடு இல்லாத நேரங்களில். 
எவ்வாறாயினும், தொழில் நிமித்தம் வீடுகளிலிருந்து வௌியேறுவோர், தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ... அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ... Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்...

May 12, 2021

எதிர்வரும் 31ஆம் தேதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பின்வரும் அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் மாத்திரம் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 
1) சுகாதார சேவை 
2) பொலிஸ் மற்றும் முப்படை 
3) அத்தியாவசிய உத்தியோகபூர்வ பயணங்களுக்கான அரச அதிகாரிகள் 
4) அத்தியாவசிய சேவை விநியோகஸ்தர்கள் 
5) அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் ( பயன்பாட்டு சேவைகள்) 
6) குடும்பத்துக்கு நெருக்கமானவரின் இறுதிச் சடங்கிற்காக ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்) 
7) வௌிநாடு செல்லுதல்/ வௌிநாட்டில் இருந்து வருகை அல்லது ஏற்றுமதி / இறக்குமதி செயற்பாடுகளுக்கு தேவையான சேவைகள் ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்)
மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்... மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்... Reviewed by irumbuthirai on May 12, 2021 Rating: 5

பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு!

May 11, 2021

தற்போதைய நிலைமை காரணமாக, பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் அடிக்கடி சாப்பிட முனைகிறார்கள். எனவே அவர்களுக்கு இனிப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை குறைவாக கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 
இந்நாட்களில் குழந்தைகளுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் இல்லை என்பதாலும் மாச்சத்துள்ள உணவுகளை குறைவாக கொடுப்பது சிறந்தது. இல்லாவிட்டால் அவர்களின் உடல் பருமன் அதிகரிக்கும். 
இதேவேளை, குழந்தைகளை ஒரே இடத்தில் இருக்கவிடாமல் பல்வேறு செயற்பாடுகளுக்கு வழி நடத்துவது மிகவும் சிறந்தது. அத்துடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு! பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு! Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும்

May 11, 2021

பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த. (சா.தர) பரீட்சையின் 2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் இங்கு தருகிறோம். 
தமிழ் இலக்கிய நயம், 
அரபு இலக்கிய நயம், 
ஆங்கில இலக்கிய நயம், 
சிங்கள இலக்கிய நயம் 
என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் 2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய  வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

07-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 11, 2021

07-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 07-05-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.




07-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 07-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

30-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 11, 2021

30-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 30-04-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.



30-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 30-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

ஆகக்குறைந்த ஊழியர்கள் அதிலும் கர்ப்பிணிகள் வேண்டாம். வெளியானது புதிய சுற்றறிக்கை! (சுற்றறிக்கை இணைப்பு)

May 10, 2021

சகல அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்வது தொடர்பான 2/2021 (11) என்ற இலக்கம் கொண்ட சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
  • இவ்வாறு ஆகக்குறைந்த ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் அதிகாரம் உரிய அமைச்சின் செயலாளர்களுக்கு/ திணைக்கள தலைவர்களுக்கு/ நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • இது சுழற்சி முறையில் இடம்பெற வேண்டும். 
  • கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு அழைக்காதிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இது தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய சுற்று நிருபத்தை கீழே காணலாம்.




ஆகக்குறைந்த ஊழியர்கள் அதிலும் கர்ப்பிணிகள் வேண்டாம். வெளியானது புதிய சுற்றறிக்கை! (சுற்றறிக்கை இணைப்பு) ஆகக்குறைந்த ஊழியர்கள் அதிலும் கர்ப்பிணிகள் வேண்டாம். வெளியானது புதிய சுற்றறிக்கை! (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5

பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை - ராணுவ தளபதி

May 10, 2021

நாட்டை முடக்க இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
எனவே மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட்டு நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்ட அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை - ராணுவ தளபதி பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை - ராணுவ தளபதி Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5

Officer Vacancies: Sri Lanka Air Force

May 10, 2021

Officer Vacancies: Sri Lanka Air Force 
Closing date: 15-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Officer Vacancies: Sri Lanka Air Force Officer Vacancies: Sri Lanka Air Force Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5

இரண்டாவது தடவையாகவும் லண்டன் மேயராக தெரிவான முஸ்லிம்!

May 10, 2021

சாதிக் கான் (Sadiq Khan) 2016 ஆம் ஆண்டில் சாதிக் கான் முதற்தடவையாக லண்டன் மேயராக தெரிவாகினார். தற்போது மீண்டும் இரண்டாவது தடவையாகவும் லண்டன் மேயராக தெரிவாகியுள்ளார். 
கன்சர்வேட்டிவ் கட்சியின் Shaun Bailey என்பவரை தோற்கடித்து இவர் வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாவது தடவையாகவும் லண்டன் மேயராக தெரிவான முஸ்லிம்! இரண்டாவது தடவையாகவும் லண்டன் மேயராக தெரிவான முஸ்லிம்! Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5

கொரோனா தீவிரம்: சுகாதார அமைச்சரால் வழங்ப்பட்ட புதிய நியமனம்!

May 10, 2021

தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக 9 மாகாணங்களுக்கும் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
சகல மாகாணங்களும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான உரிய வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தீவிரம்: சுகாதார அமைச்சரால் வழங்ப்பட்ட புதிய நியமனம்! கொரோனா தீவிரம்: சுகாதார அமைச்சரால் வழங்ப்பட்ட புதிய நியமனம்! Reviewed by irumbuthirai on May 10, 2021 Rating: 5

மேலும் 40 புதிய அரசியல் கட்சிகள்...

May 09, 2021

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார். 
இதற்காக 40 புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பித்திருப்பதாகவும் அதில் 18 அரசியல் கட்சிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் 40 புதிய அரசியல் கட்சிகள்... மேலும் 40 புதிய அரசியல் கட்சிகள்... Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5
Powered by Blogger.