அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை

May 16, 2021

உலகில் இதுவரை காலமும் அமெரிக்காவே செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியிருந்தது. 
அந்த வகையில் தற்போது சீனாவும் Zhurong என்ற ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியுள்ளது. நேற்று (15) அதிகாலை இந்த விண்கலம் இவ்வாறு தரையிறங்கியதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 
2020 ஜூலை மாதம் சீனா அனுப்பிய Tianwen-1 என்ற விண்கல திட்டத்தின் Zhurong என்ற ரோவர் கடந்த பெப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இதற்கு 6 சக்கரங்கள். இந்த விண்கலத்தின் மொத்த எடை 240Kg ஆகும். 
செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இதில் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்தும் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

கொரோனா தொற்றுள்ள கைதிகள்: தகவல்களை அறிவதற்கான முறை:

May 16, 2021

சிறைச்சாலையில் கொவிட் தகவல் கேந்திர நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் விபரங்களை அவர்களின் குடும்பத்தினர் 011- 4677101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 
இதுமட்டுமன்றி www.prison.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உரிய சிறைச்சாலையின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுள்ள கைதிகள்: தகவல்களை அறிவதற்கான முறை: கொரோனா தொற்றுள்ள கைதிகள்: தகவல்களை அறிவதற்கான முறை: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு:

May 16, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்கள் மற்றும் சந்தேக நபர்களுக்கு எதிராக தனது பதவி காலத்தினுள் குற்றப்பத்திரிக்கையை தன்னால் தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். 
இதற்கான காரணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் இதுவரையில் முழுமை பெறாததே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு: என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர்.

May 16, 2021

பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது பிள்ளைகள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். இலங்கை மாணவர்களுக்கும் இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இதற்காக கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் புதிய மறுசீரமைப்பின் ஊடாக 08 மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை 
முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது. 10ம், 11ஆம் வகுப்பிற்காக இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர். 08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர். Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்...

May 16, 2021

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் அதனை மீறுவோர் தொடர்பாக ´1997´ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொலிஸாருக்கு அறியத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்... பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்... Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா?

May 15, 2021

இலங்கையில் கொரோனா பரவல் தொடர்பாகவும் கொரோனா மரணங்கள் தொடர்பாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் பலவிதமான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
சில வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை எனவும் அதேபோன்று மரணங்கள் தொடர்பாக உண்மையான தகவல் வெளியாவதில்லை எனவும் பல குற்றச்சாட்டுகள் வலம் வருகின்றன. 
இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியான நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத 
சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே வைத்து கண்காணிக்கவுள்ளதாகவும் இந்த நடைமுறையை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்படுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 
இதேவேளை குறித்த நபருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். 
இந்த அறிவிப்பானது கொரோனா தொடர்பில் இலங்கை நெருக்கடியான ஒரு நிலையை எதிர்கொண்டுள்ளதா? வெளியாகும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் உண்மையா? என்ற சந்தேகங்களை உறுதிப்படுத்துவதற்கான அறிகுறியா எனவும் தோன்றுகிறது.
அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா? அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா? Reviewed by irumbuthirai on May 15, 2021 Rating: 5

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் நிவாரணப் பொதிகள்!

May 15, 2021

நாட்டில் ஒரு கிழமைக்கு மேல் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் முடக்கப்படாத பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
20 வகையான அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கி இந்தப் பொதி சதொச ஊடாக
வழங்கப்படும். கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களூடாக இந்த நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் நிவாரணப் பொதிகள்! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் நிவாரணப் பொதிகள்! Reviewed by irumbuthirai on May 15, 2021 Rating: 5

இன்று முதல் தபால் நிலையங்களின் சேவை நேரத்தில் மாற்றம்!

May 13, 2021

இன்று (13) முதல் நாட்டிலுள்ள சகல தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களும் மு.ப. 09.00 - பி.ப. 03.00 மணி வரை மாத்திரமே திறக்கப்பட்டிருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு சில பிரதேசங்களில் 02 நாட்களுக்கு ஒரு தடவை தபாலை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று முதல் தபால் நிலையங்களின் சேவை நேரத்தில் மாற்றம்! இன்று முதல் தபால் நிலையங்களின் சேவை நேரத்தில் மாற்றம்! Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

திருமண நிகழ்வுகளுக்கு தடை! ஆனால் பதியலாம்!

May 13, 2021

கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இம்மாதம் (மே) 31ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளிலே திருமண நிகழ்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் திருமண பதிவுகளை செய்யலாம். அதில் பதிவாளர் உட்பட 15 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வுகளுக்கு தடை! ஆனால் பதியலாம்! திருமண நிகழ்வுகளுக்கு தடை! ஆனால் பதியலாம்! Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ...

May 13, 2021

இன்று (13) முதல் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை மீண்டும் அமுலாகிறது. 
பயணக் கட்டுப்பாடில்லாத நேரங்களிலேயே வீட்டிலிருந்து வெளியே செல்ல இந்த முறை பயன்படுத்தப்படும். 
அதுமட்டுமன்றி வெளியே செல்லும்போது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை அனைவரும் வைத்திருப்பது கட்டாயமாகும். 
வீட்டிலிருந்து வெளியே செல்ல தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தும் முறை இதோ ... 
அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 0,2,4,6,8 போன்ற இரட்டை எண்களில் ஏதாவது ஒரு எண்ணாக இருந்தால் அவர்கள் இரட்டை இலக்க தினங்களில் வெளியே செல்லலாம். 
அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 1,3,5,7,9 ஆகிய ஒற்றை எண்களில் ஏதாவது ஒரு எண்ணாக இருந்தால் அவர்கள் ஒற்றை இலக்க தினங்களில் வெளியே செல்லலாம். 
உதாரணமாக இன்று 13ஆம் தேதி ஒற்றை இலக்க தினமாகும். எனவே கடைசி இலக்கம் ஒற்றை இலக்கமாக கொண்டவர்கள் வெளியே செல்லலாம் அதுவும் பயணக் கட்டுப்பாடு இல்லாத நேரங்களில். 
எவ்வாறாயினும், தொழில் நிமித்தம் வீடுகளிலிருந்து வௌியேறுவோர், தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ... அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் முறை இதோ... Reviewed by irumbuthirai on May 13, 2021 Rating: 5

மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்...

May 12, 2021

எதிர்வரும் 31ஆம் தேதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பின்வரும் அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் மாத்திரம் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 
1) சுகாதார சேவை 
2) பொலிஸ் மற்றும் முப்படை 
3) அத்தியாவசிய உத்தியோகபூர்வ பயணங்களுக்கான அரச அதிகாரிகள் 
4) அத்தியாவசிய சேவை விநியோகஸ்தர்கள் 
5) அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் ( பயன்பாட்டு சேவைகள்) 
6) குடும்பத்துக்கு நெருக்கமானவரின் இறுதிச் சடங்கிற்காக ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்) 
7) வௌிநாடு செல்லுதல்/ வௌிநாட்டில் இருந்து வருகை அல்லது ஏற்றுமதி / இறக்குமதி செயற்பாடுகளுக்கு தேவையான சேவைகள் ( உறுதிப்படுத்தல் கட்டாயமாகும்)
மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்... மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டோர்... Reviewed by irumbuthirai on May 12, 2021 Rating: 5

பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு!

May 11, 2021

தற்போதைய நிலைமை காரணமாக, பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் அடிக்கடி சாப்பிட முனைகிறார்கள். எனவே அவர்களுக்கு இனிப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை குறைவாக கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 
இந்நாட்களில் குழந்தைகளுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் இல்லை என்பதாலும் மாச்சத்துள்ள உணவுகளை குறைவாக கொடுப்பது சிறந்தது. இல்லாவிட்டால் அவர்களின் உடல் பருமன் அதிகரிக்கும். 
இதேவேளை, குழந்தைகளை ஒரே இடத்தில் இருக்கவிடாமல் பல்வேறு செயற்பாடுகளுக்கு வழி நடத்துவது மிகவும் சிறந்தது. அத்துடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு! பெற்றோர்களுக்குரிய முக்கிய அறிவிப்பு! Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5

2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும்

May 11, 2021

பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த. (சா.தர) பரீட்சையின் 2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் இங்கு தருகிறோம். 
தமிழ் இலக்கிய நயம், 
அரபு இலக்கிய நயம், 
ஆங்கில இலக்கிய நயம், 
சிங்கள இலக்கிய நயம் 
என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் 2021 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்கான இலக்கியநய பாடங்களுக்குரிய  வினாத்தாள்களின் கட்டமைப்பும் முன்னோடி மாதிரி வினாக்களும் Reviewed by irumbuthirai on May 11, 2021 Rating: 5
Powered by Blogger.