அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை
irumbuthirai
May 16, 2021
உலகில் இதுவரை காலமும் அமெரிக்காவே செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியிருந்தது.
அந்த வகையில் தற்போது சீனாவும் Zhurong என்ற ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியுள்ளது.
நேற்று (15) அதிகாலை இந்த விண்கலம் இவ்வாறு தரையிறங்கியதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
2020 ஜூலை மாதம் சீனா அனுப்பிய Tianwen-1 என்ற விண்கல திட்டத்தின் Zhurong என்ற ரோவர் கடந்த பெப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இதற்கு 6 சக்கரங்கள். இந்த விண்கலத்தின் மொத்த எடை 240Kg ஆகும்.
செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இதில் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்தும் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை
Reviewed by irumbuthirai
on
May 16, 2021
Rating: