கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை:
irumbuthirai
May 16, 2021
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவித்து பிரேசிலின் செனட் சபையினால் பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro-விற்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசிகள் கொள்வனவை நிறுத்தியமை, தொற்றினை கட்டுப்படுத்த சுகாதார தரப்பால் முன்மொழியப்பட்ட திட்டங்களை நிராகரித்தமை
போன்ற குற்றச்சாட்டுகள் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ளன.
நாட்டை முடக்கும் எண்ணமில்லை. நாட்டை முடக்கும் பட்சத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அவர் கூறி வருகிறார்.
அங்கு இதுவரை 432,000ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலேயே, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் தற்போது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை:
Reviewed by irumbuthirai
on
May 16, 2021
Rating: