தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை!

May 16, 2021

Covid-19 தடுப்பூசிகளை பெறுவதற்காக இலங்கை கொங்கோ நாட்டின் உதவியை நாடியுள்ளது. 
இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்டிரா ஜெனேகா (Astra Zeneca) தடுப்பூசியை கொங்கோவும் பயன்படுத்துகிறது. இந்நிலையில் அங்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இலங்கை இந்த உதவியை நாடியுள்ளது. 
எனவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கொங்கோ ஜனாதிபதிக்கு இந்த உதவியை கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை! தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை! Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா?

May 16, 2021

Covid - 19 அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது பயனற்றது என்பதால் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே பொருத்தமானது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 
இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா? கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை!

May 16, 2021

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுற்றுலாத்துறை தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. 
அந்தவகையில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு Bio Bubble (உயிர்க்குமிழி) என்ற முறை மூலம் வர முடியும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
எவ்வாறாயினும் இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை! இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகமாகிறது புதிய முறை! Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 16, 2021

13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 13-05-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 13-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை

May 16, 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வருடம் (2020) நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அந்தவகையில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் ஜப்பானியர்கள் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர். 
அதாவது ஒலிம்பிக்கை இரத்து செய்யுமாறு கோரி சுமார் 350,000 கையொப்பங்களுடனான விண்ணப்பத்தை டோக்கியோ ஆளுநருக்கும் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் குழு அதிகாரிகளுக்கும் சமர்ப்பித்துள்ளனர். 
ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், விளையாட்டு வீரர்களையும் ஏக மனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் மாத்திரமே இந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ உட்பட முக்கிய நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை  Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 16, 2021

10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 10-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை:

May 16, 2021

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவித்து பிரேசிலின் செனட் சபையினால் பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro-விற்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
தடுப்பூசிகள் கொள்வனவை நிறுத்தியமை, தொற்றினை கட்டுப்படுத்த சுகாதார தரப்பால் முன்மொழியப்பட்ட திட்டங்களை நிராகரித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ளன. 
நாட்டை முடக்கும் எண்ணமில்லை. நாட்டை முடக்கும் பட்சத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அவர் கூறி வருகிறார். 
அங்கு இதுவரை 432,000ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலேயே, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் தற்போது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை: கொரோனா தீவிரம்: ஆரம்பமானது பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணை: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை

May 16, 2021

உலகில் இதுவரை காலமும் அமெரிக்காவே செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியிருந்தது. 
அந்த வகையில் தற்போது சீனாவும் Zhurong என்ற ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியுள்ளது. நேற்று (15) அதிகாலை இந்த விண்கலம் இவ்வாறு தரையிறங்கியதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 
2020 ஜூலை மாதம் சீனா அனுப்பிய Tianwen-1 என்ற விண்கல திட்டத்தின் Zhurong என்ற ரோவர் கடந்த பெப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இதற்கு 6 சக்கரங்கள். இந்த விண்கலத்தின் மொத்த எடை 240Kg ஆகும். 
செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இதில் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்தும் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

கொரோனா தொற்றுள்ள கைதிகள்: தகவல்களை அறிவதற்கான முறை:

May 16, 2021

சிறைச்சாலையில் கொவிட் தகவல் கேந்திர நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் விபரங்களை அவர்களின் குடும்பத்தினர் 011- 4677101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 
இதுமட்டுமன்றி www.prison.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உரிய சிறைச்சாலையின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுள்ள கைதிகள்: தகவல்களை அறிவதற்கான முறை: கொரோனா தொற்றுள்ள கைதிகள்: தகவல்களை அறிவதற்கான முறை: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு:

May 16, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்கள் மற்றும் சந்தேக நபர்களுக்கு எதிராக தனது பதவி காலத்தினுள் குற்றப்பத்திரிக்கையை தன்னால் தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். 
இதற்கான காரணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் இதுவரையில் முழுமை பெறாததே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு: என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர்.

May 16, 2021

பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது பிள்ளைகள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். இலங்கை மாணவர்களுக்கும் இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இதற்காக கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் புதிய மறுசீரமைப்பின் ஊடாக 08 மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை 
முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது. 10ம், 11ஆம் வகுப்பிற்காக இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர். 08 மாதங்களுக்கு முன்னரே உயர் கற்கைநெறிக்கான வசதி - கல்வியமைச்சர். Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்...

May 16, 2021

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் அதனை மீறுவோர் தொடர்பாக ´1997´ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொலிஸாருக்கு அறியத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்... பயணக் கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்... Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா?

May 15, 2021

இலங்கையில் கொரோனா பரவல் தொடர்பாகவும் கொரோனா மரணங்கள் தொடர்பாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் பலவிதமான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
சில வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை எனவும் அதேபோன்று மரணங்கள் தொடர்பாக உண்மையான தகவல் வெளியாவதில்லை எனவும் பல குற்றச்சாட்டுகள் வலம் வருகின்றன. 
இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியான நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத 
சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே வைத்து கண்காணிக்கவுள்ளதாகவும் இந்த நடைமுறையை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்படுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 
இதேவேளை குறித்த நபருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். 
இந்த அறிவிப்பானது கொரோனா தொடர்பில் இலங்கை நெருக்கடியான ஒரு நிலையை எதிர்கொண்டுள்ளதா? வெளியாகும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் உண்மையா? என்ற சந்தேகங்களை உறுதிப்படுத்துவதற்கான அறிகுறியா எனவும் தோன்றுகிறது.
அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா? அரசின் அறிவிப்பு நெருக்கடி நிலைக்கான அறிகுறியா? Reviewed by irumbuthirai on May 15, 2021 Rating: 5
Powered by Blogger.