வெளியானது பல்கலைக்கழகங்களுக்கான புதிய அனுமதி தொடர்பான அறிவிப்பு!
irumbuthirai
May 20, 2021
அதாவது 2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் இம்மாதம் (மே) 21 முதல் ஜூன் 11 ஆம் திகதி வரையில் கோரப்படவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான சகல பூர்வாங்க செயற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களினால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின்
புகைப்படம் ஒன்றை எடுத்து அதில் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தி, apply2020@UGC.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பல்கலைக்கழக பாடநொறிகளை தெரிவு செய்வதற்கான வழிகாட்டல் கைநூலை அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்கள் மற்றும் சகல பல்கலைக்கழகங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெளியானது பல்கலைக்கழகங்களுக்கான புதிய அனுமதி தொடர்பான அறிவிப்பு!
Reviewed by irumbuthirai
on
May 20, 2021
Rating: