அரசாங்கம் உண்மையான தகவல்களை மறைக்கிறதா?
irumbuthirai
May 20, 2021
நேற்று (19) 3,000 ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதைவிட அதிகமான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். 3,500 ஐ போன்று மூன்று மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். அவர்களால் இன்னுமின்னும் நோய் பரவக் கூடும். மக்களை வீட்டில் இருக்குமாறு சொன்னால்
அவ்வாறு நடந்துக்கொள்வதில்லை. வீதிகள் வெறுமையடைய வேண்டும். எனவே, தொற்றை தவிர்க்க வேண்டுமானால் தேவையான விடயங்களுக்கு மாத்திரம் மக்கள் வெளியில் செல்வது நல்லது´என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து... உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டல்லவா? என ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
'அதில் எவ்வித உண்மையும் இல்லை. உண்மையை மறைத்தால் நாமும் மறைந்து போவோம்´ என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பிரதேச ரீதியாக நடைபெறும் வெவ்வேறு சம்பவங்கள் மற்றும் பல்வேறு வைத்தியசாலைகளிலிருந்து வெளியாகும் தகவல்கள் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் வெளியாவதில்லை. இதேவேளை அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதற்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசாங்கத்தினால் தற்போது வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் உண்மையான தகவல்களை மறைக்கிறதா?
Reviewed by irumbuthirai
on
May 20, 2021
Rating: