Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம்
irumbuthirai
May 22, 2021
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணத்தை அந்த கட்சி தெரிவித்துள்ளது.
அதாவது குறித்த சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதாலேயே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வாக்கெடுப்பின் போது குறித்த உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்தாலும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த முடிவை எடுத்தாலும் சகலரும் தலைமைத்துவத்திற்கு
கட்டுப்பட்டு ஒரே முடிவினை எடுக்க வேண்டும் என கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும்
அதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததாகவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
ஆனால் கட்சியின் தலைவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததோடு பிரதமரின் இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம்
Reviewed by irumbuthirai
on
May 22, 2021
Rating: