பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கை

May 23, 2021

கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பல்வேறு அடிப்படைகளிலான பகுப்பாய்வு அறிக்கையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களில் தோற்றிய பரீட்சார்த்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுப்பாய்வு வெவ்வேறாக செய்யப்பட்டுள்ளது. 
மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, பாடசாலை பரீட்சார்த்திகள், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், உயர்தர துறைகள் மற்றும் உயர்தர பாடங்கள் ரீதியாக என பல்வேறு நியதிகளின் அடிப்படையில் இந்த பகுப்பாய்வு வெவ்வேறாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இது மாத்திரமன்றி 2019 பெறுபேறுகளுடன் ஒப்பீடு செய்தும் இந்தப் பகுப்பாய்வு அறிக்கை பரீட்சைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. 
குறித்த அறிக்கையை முழுமையாக பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு அறிக்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்  பகுப்பாய்வு அறிக்கை Reviewed by irumbuthirai on May 23, 2021 Rating: 5

Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம்

May 22, 2021

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணத்தை அந்த கட்சி தெரிவித்துள்ளது. 
அதாவது குறித்த சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதாலேயே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 
வாக்கெடுப்பின் போது குறித்த உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்தாலும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
எந்த முடிவை எடுத்தாலும் சகலரும் தலைமைத்துவத்திற்கு 
கட்டுப்பட்டு ஒரே முடிவினை எடுக்க வேண்டும் என கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததாகவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். 
ஆனால் கட்சியின் தலைவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததோடு பிரதமரின் இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம் Port City வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? முஸ்லிம் காங்கிரஸின் விளக்கம் Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு

May 22, 2021

கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன நிலையில் தற்போது இடம்பெறும் இணையவழி (Online) கல்வி நடவடிக்கைகளினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் இடம்பெறுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
மாணவர்களுக்கு ஓய்வில்லாமல் எந்நேரமும் வகுப்புகளை நடாத்துதல், பாட ரீதியாக அளவுக்கதிகமான வேலைப் பளுவை சுமத்துததல், ஆசிரியைகள் சாரி அல்லது ஒசரி போன்ற 
உடைகளை அணிந்து பாடங்களை நடத்துமாறும் அறிவுறுத்தப்படல் போன்ற பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
எனவே, இது போன்ற சம்பவங்கள் இடம் பெறாமல் தடுக்க அதிபர்கள், பிரதி அதிபர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தேவையற்ற மன அழுத்தங்களுக்கு உள்ளாகாதவாறு இணைய வழி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு Online கல்வி முறையில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் - கல்வி அமைச்சு Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 22, 2021

17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.




17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 17-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்!

May 22, 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (All Ceylon Makkal Congress - ACMC) கட்சியைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். 
இது தொடர்பில் அக்கட்சியின் பதில் தலைவர் சட்டத்தரணி எம்.என். ஷஹீட் தெரிவிக்கையில், 
அண்மையில் இடம்பெற்ற கட்சி உயர்மட்டக்குழு கூட்டத்தின் போது கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி இருவரும் ஆதரவாக வாக்களித்ததனால் தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார். 
தனது தீர்மானம் கட்சியின் அரசியல் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிரடி: Port City க்கு ஆதரவாக வாக்களித்த இருவர் நீக்கம்! Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 22, 2021

21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 21-05-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.



21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 21-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 22, 2021 Rating: 5

இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு:

May 21, 2021

எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதனால் அவர்களை பாதுகாப்பதற்காக நோய் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம். எனவே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 
இதுவரை 1,000 இற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தொற்றுறிதியாகி உள்ளதுடன் அவர்களில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு: இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு:  Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

ஓட்டமாவடியில் சகல இனத்தவரும் நல்லடக்கம்: 4 நாட்களில் 46 உடல்கள்:

May 21, 2021

ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 
அங்கு முஸ்லிம், கிறிஸ்தவ, சிங்களம், இந்து ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 கடந்த திங்கள் முதல் நேற்று வரையான நான்கு நாட்களில் மாத்திரம் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதேவேளை அங்கு இதுவரை மொத்தமாக 202 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடியில் சகல இனத்தவரும் நல்லடக்கம்: 4 நாட்களில் 46 உடல்கள்: ஓட்டமாவடியில் சகல இனத்தவரும் நல்லடக்கம்: 4 நாட்களில் 46 உடல்கள்: Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

இலங்கையில் உற்பத்தியாகவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து!

May 21, 2021

தற்போதைய நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுக்கொண்டு வருகிறது. அந்த தடுப்பு மருந்து இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தற்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 
விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனமும் சிநோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லைஃப் சயன்ஸ் தனியார் கம்பெனியும் இணைந்து இந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உற்பத்தியாகவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து! இலங்கையில் உற்பத்தியாகவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து! Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கையேட்டினை பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ!

May 21, 2021

2020/2021ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக் கைநூலொன்றை, பின்வரும்  முறைகளில் 21.05.2021 ஆம் திகதியிலிருந்து ஒரு கைநூலிற்காக ரூபா. 500/- செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். 
(1) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயலகத்தில் பெறலாம் (முகவரி: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் செயலகம், இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07. 

(2) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விநியோக முகவர்களிடமிருந்து (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள விநியோக முகவர்களின் பட்டியல் UGC இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.) 

(3) தலா ரூபா 500/- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கணக்கில் வைப்பில் இட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலிருந்து (www.ugc.ac.lk) பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலின் மென்நகலினை (Soft Copy) பதிவிறக்கம் செய்யலாம். (கணக்கிலக்கம் போன்ற விபரங்கள் 5வது படிமுறையில் விளக்கமாக தரப்பட்டுள்ளது)

(4) பின்வரும் பல்கலைக்கழக நலன்புரிப் பிரிவுகளிலிருந்து பெறலாம்: 
i.  கொழும்புப் பல்கலைக்கழகம் 
ii.  பேராதனைப் பல்கலைக்கழகம் 
iii.  ஸ்ரீ ஜயவர்த்தனபுர                        
      பல்கலைக்கழகம் 
iv.  களனிப் பல்கலைக்கழகம் 
v.  மொறட்டுவைப் பல்கலைக்கழகம் 
vi.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 
vii.  உறுகுணைப் பல்கலைக்கழகம் 
viii.  கிழக்குப் பல்கலைக்கழகம், 
        இலங்கை 
ix.   இலங்கைத் தென் கிழக்குப் 
                  பல்கலைக்கழகம் 
x.  இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் 
xi.  இலங்கை சப்ரகமுவ.                                      பல்கலைக்கழகம் 
xii.  இலங்கை வயம்ப.                                           பல்கலைக்கழகம்
xiii. இலங்கை ஊவா வெல்லஸ்ஸ 
                  பல்கலைக்கழகம் 
xiv. கட்புல அரங்கேற்றக்கலைப் 
                 பல்கலைக்கழகம் 
xv. இலங்கை கம்பஹா விக்ரமாராச்சி     சுதேச        மருத்துவ பல்கலைக்கழகம்
 
(5) பல்கலைக்கழக அனுமதிக் கைநூலினை தபால் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். 

இதற்காக வேண்டி இலங்கை வங்கியின் ரொறிங்ரன் கிளையிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திரட்டுக் கணக்கு இலக்கம் 0002323287 இன் அல்லது மக்கள் வங்கியின் நகர மண்டபக் கிளையிலுள்ள திரட்டுக் கணக்கு இலக்கம் 167-1-001-4-3169407 இற்கு வரவு வைக்கும் விதமாக, இலங்கை வங்கியின் அல்லது மக்கள் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் ஒவ்வொரு கைநூலுக்கும் ரூபா 500/- இனைச் செலுத்தி பெற்றுக்கொண்ட கொடுப்பனவு பட்டோலை, அனுமதிக் கைநூலிற்கான எழுத்து மூல வேண்டுகோளுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். 
மேலும், குறித்த பணத்தை செலுத்தியமைக்கான வங்கியின் இலச்சினை பொறிக்கப்பட்டு அதிகாரமுடைய அலுவலர் ஒருவரினால் கொடுப்பனவு பட்டோலையில் முறையாக ஒப்பமிடப்பட்டிருக்கவும் வேண்டும். 
அவ்வாறு வங்கிக் கொடுப்பனவுப் பட்டோலையை அனுப்பி அனுமதிக் கைநூலினை தபால் மூலமாகப் பெற்றுக் கொள்ளும் போது விண்ணப்பதாரியின் பெயர் மற்றும் விண்ணப்பதாரி பெற விரும்பும் அனுமதிக் கைநூலின் ஊடகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சுய முகவரியிடப்பட்டதும், முத்திரை ஒட்டப்படாததுமான 
37செ.மீ x 26செ.மீ அளவுக்குக் குறையாத கடிதவுறையொன்றுடன் எழுத்து மூல கோரிக்கையொன்றினை சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பல்கலைக்கழக அனுமதிகள்), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இல. 20, வாட் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரிக்கு விண்ணப்பதாரி அனுப்பி வைத்தல் வேண்டும்.'
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டப்பயில் நெறிகளுக்கான அனுமதி - கல்வியாண்டு 2020/2021' எனத் தலைப்பிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலுடன் (37செ.மீ. X 26செ.மீ.) கடிதவுறை ஒன்றும் தரப்படும் என்பதும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயமாகும். 
இணையவழி விண்ணப்பச் செயன்முறையின் இறுதியில் விண்ணப்பதாரி பெற்றுக்கொள்ளும் இணையவழி விண்ணப்பத்தின் அச்சுப்பிரதியை முறையாக நிரப்பிக் கையொப்பமிட்டு அனுப்புவதற்காக இக் கடிதவுறையை விண்ணப்பதாரிகள் உபயோகிக்க வேண்டும். பரீட்சார்த்திகள் கைநூலை வாங்கும்போது மேற்கூறப்பட்ட கடிதவுறை தமக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
(Source: பத்திரிகை விளம்பரம் -தினகரன்)
பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கையேட்டினை பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ! பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கையேட்டினை பெற்றுக் கொள்ளும் முறைகள் இதோ! Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

வெளியானது பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு)

May 21, 2021

2020/21 ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் கையேடு மற்றும் Online விண்ணப்பம் என்பவற்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 
ஆன்லைன் விண்ணப்பத்தை மாணவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற எந்த ஒரு மொழியிலும் பூர்த்தி செய்யலாம். 
மிக முக்கிய விடயம் என்னவென்றால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் கையேட்டை முழுமையாக வாசித்து அதன் அறிவுறுத்தலுக்கமையவே பூர்த்தி செய்ய வேண்டும். 

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
கையேட்டை (Hand Book) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கணக்கிற்கு ரூபாய் 500 வைப்பு செய்தாலே தரவிறக்கம் செய்யும் வசதியைப் பெறலாம்)
வெளியானது பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) வெளியானது பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

இறப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டோர்: அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்:

May 20, 2021

இலங்கையில் கொரோனா 3ஆம் அலை பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் மரணிப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்களாக காணப்படுகின்றமை காரணமாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
அதாவது சுவாசிப்பதில் சிக்கல் உட்பட, கொரோனா அறிகுறிகள் காணப்படும், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவர் ஒருவரினது ஆலோசனையை பெறுமாறு அல்லது அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லுமாறு அவர் அறிவித்தல் விடுத்துள்ளார். 
நோயின் ஆரம்பத்திலேயே இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு, மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணுவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டோர்: அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்: இறப்பவர்களில் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டோர்: அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்: Reviewed by irumbuthirai on May 20, 2021 Rating: 5

அரசாங்கம் உண்மையான தகவல்களை மறைக்கிறதா?

May 20, 2021

நேற்று (19) 3,000 ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதைவிட அதிகமான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். 3,500 ஐ போன்று மூன்று மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். அவர்களால் இன்னுமின்னும் நோய் பரவக் கூடும். மக்களை வீட்டில் இருக்குமாறு சொன்னால் 
அவ்வாறு நடந்துக்கொள்வதில்லை. வீதிகள் வெறுமையடைய வேண்டும். எனவே, தொற்றை தவிர்க்க வேண்டுமானால் தேவையான விடயங்களுக்கு மாத்திரம் மக்கள் வெளியில் செல்வது நல்லது´என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். 
இதனைத் தொடர்ந்து... உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டல்லவா? என ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 
'அதில் எவ்வித உண்மையும் இல்லை. உண்மையை மறைத்தால் நாமும் மறைந்து போவோம்´ என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பிரதேச ரீதியாக நடைபெறும் வெவ்வேறு சம்பவங்கள் மற்றும் பல்வேறு வைத்தியசாலைகளிலிருந்து வெளியாகும் தகவல்கள் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் வெளியாவதில்லை. இதேவேளை அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதற்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசாங்கத்தினால் தற்போது வரையறைகள்  விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் உண்மையான தகவல்களை மறைக்கிறதா? அரசாங்கம் உண்மையான தகவல்களை மறைக்கிறதா? Reviewed by irumbuthirai on May 20, 2021 Rating: 5
Powered by Blogger.